சனி, 19 செப்டம்பர், 2009

சதுரகிரி செல்லும் பொழுது என்ன தேவை

சதுரகிரியில் நாம் தங்குவதற்கு மற்றும் உணவு மற்றும் கையில் என்ன என்ன எடுத்துகொள்ளலாம் .முதலில் ஒருநாளில் தரிசனம் முடிக்கும் அன்பர்களுக்கு சிறு அறிவுரை அவர்கள் எடுத்துக்கொள்ளும் பொருட்கள்
தண்ணீர் குறைந்த பட்சம் மூன்று லிட்டர்

அதிகம் நடை பயணம் கொள்ளாதவர்கள் குளுகோஸ் பாக்கெட் கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும் .

ஆப்பிள் போன்ற பழவகைகள் எடுத்துகொள்ளலாம்


அதிக நடைபயம் மேற்கொள்ளதவர்கள் எட்டு கிலோ மீட்டர் மலை மேல் ஏறும் பொழுது கொஞ்சம் கெண்டை கால் வலி உடல் வலி ஏற்படும் .

இந்த உடல் வலியோ அல்லது கால் வலியோ ஒன்றும் செய்யாது .


ஆனால் சிலர் முடியவில்லை என்பர் அவர்களுக்கு தேவை என்றால் பெயின் கில்லர் மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம் .

மட்டறபடி ஏதும் தேவை இலலை


என் என்றால் மூலிகை வனத்து காற்றை சுவசிதாலே போதும் . புது தெம்பை உணர்வீர்கள் . பிஸ்கட் பாக்கெட் சிலதை போட்டு கொள்ளுங்கள் .

மலை ஏறும் பொழுது பசி எடுத்தால் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம்.

அடுத்து இரண்டு அல்லது மூன்று நாள் தங்கும் அன்பர்கள் கையில் சால்வை . அல்லது இலகு ரக பெட்ஷீட் களை கொண்டு செல்லலாம் .


மலை ஏறும் பொழுது கவனிக்க வேண்டியவை ஆண்கள் சார்ட்ஸ் பனியன் மட்டும் போதும் . ஏன் என்றால் மலை ஏறும் பொழுது அதிகமா வியர்த்து கொட்டும் . அப்படி வியர்த்து கொட்டும் பொழுது நமது வியர்வை துவாரங்கள் வழியாகவும் . அங்கு உலவும் மூலிகை காற்று நமது மேனியினுள் செல்லும். அடிஎடுன்டைய தாழ்மையான கருத்து . ஆண்கள் வேட்டிகட்டிக்கொள்வது ரொம்பவும் நல்லது .ஒரு துண்டை மேனியில் போர்த்தி கொண்டு மலை ஏறலாம்.

சரி மேலே குளிப்பதற்கு வசதிகள் உள்ளனவா . உண்டு சவர் கூட போட்டு வைத்து இருக்கிறார்கள் .
உணவு அங்கு கிட்டத்தட்ட ஐந்து கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் உள்ளன . அவற்றுள் எனக்கு தெரிந்து மூன்று மடங்கள் . எப்பொழுதும் செயல் படுகிறது . மற்றவை திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்க படுகிறதுஅவற்றுள் கஞ்சி மடம் ரொம்பவும் புகழ் பெற்றது . இக்கஞ்சி மடத்திற்கு பொறுப்பாளராக இருந்து அதை நிறுவியவர் . ஸ்ரீ ல ஸ்ரீ காளிமுத்து ஸ்வாமிகள் இவர் தற்போது இல்லை. ஆனாலும் அதை வழி நடத்து பவர்கள் அவரை போலவே சிறப்பாக நடத்துகிறார்கள் . கஞ்சி மடத்தின் தொலைபேசி என்:-


04563325433 .


பக்தர்கள் அங்கு இலவசமாக உணவு எடுத்துகொள்ளலாம் நமது வீட்டை விட இதமானஉபசரிப்புடன் உணவு வழங்குவார்கள் . முகசுளிப்புஅங்கு நாம் காண முடியாத ஒன்று . அந்த அன்புஉபசரிப்புகே நாம் மயங்கித்தான் ஆக வேண்டும் . ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டுஅய்யா பசிக்கும் மட்டும் தான் உணவு உண்டு . ருசிக்கு இல்லை . எவ்வளவும் வேண்டுமானாலும்வாங்கி சாப்பிடுங்கள் ஆனால் உணவை மீதம்வைத்து மட்டும் வீணாக்கி விடாதீர்கள் . என்றுமட்டும் சொல்வார்கள் . நம் சிவனை நினைத்துஉணவை உண்டால் அது தேவாமிர்தத்தை விடசுவையாக இருக்கும் .


குளிர் காலங்களில் கொஞ்சம் குளிராக இருக்கும் அங்கு தங்குவதற்கு மடங்கள் உண்டு . கவலை இல்லை ஆனால் நமது வீடு போல வசதி இருக்காது .
பழமொழி ஒன்று எனக்கு என் கவனதிக்கு வருகிறது . "பசி ருசி அறியாது . நித்திரை சுகம் அறியாது " என்று சொல்வார்கள் அது உண்மையில் சதுரகிரியில் நடக்கும் . காரணம் மலை ஏறி வரும் நமக்கு ஏற்படும் கடும் பசியில் ருசியான உணவை பார்ப்பது இல்லை . அதுபோல மலை ஏறி வந்த களைப்பில் நல்ல வசதியான இடம் தன் எனக்கு வேண்டும் தூங்குவதற்கு என்று நமது உடல் பார்ப்பதில்லை
தூக்கம் நம்மை தழுவி கொள்கிறது . நம்மை அறியாமலே . பலர் நிம்மதியான தூக்கம் ந என்னனே தெரியாது
ஆனால் அங்கு வாருங்கள் நிம்மதி என்ன என்பதை உணர்வீர்கள் .
.

கருத்துகள் இல்லை: