எனக்கு தெரிந்து சதுரகிரியை அனைவரும் சித்தர் பூமி என்றே கூறுகின்றனர் . உண்மையும் அதுதான்
நான் பலமுறை சதுரகிரி சென்றுள்ளேன் . ஆனால் என்னுடன் நிறைய மெட்ராஸ் அன்பர்கள் மற்றும் வெளியூர் அன்பர்கள் எல்லாம் பேசி கொண்டு செல்வோம் . அனைவரும் கேட்கக்கூடிய ஒரு விஷயம் . சாமி நீங்க சித்தரை பார்த்து உள்ளீர்களா . அவர் எப்படி இருப்பார் . உண்மையில் சித்தர் உள்ளர என்று கேட்கிறார்கள் . எனக்கு புரியவில்லை இரண்டு விசயங்கள் நம் கண்ணை மூடிட்டு செய்தாகணும் அது ஒன்று நாம் பிறரிடம் அன்பு செலுத்துவது அவர் நம் மீது அன்பு செலுத்த வேண்டும் எதிர்பார்போடு அன்பு செலுத்தினால் அங்கு சுய நலம் வந்து நின்று விடும் . அப்போ அன்பு பொய்யாகிவிடும்.
அன்பு நாம் செலுத்தும் பொது எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்த வேண்டும் . நாம் அன்பு செலுத்து நபர் நமது அன்பை தக்க சமயம் வரும் பொழுது கட்டாயம் புரிந்து கொண்டு விடுவார் . அது போல பக்தியும் நாம் எதிர் பார்ப்பு இல்லாமல் செலுத்தினால் கட்டாயம் இறைவனுக்கு தெரியும் நம்மை எப்பொழுது பார்ர்க்க வேண்டும் அல்லது நல்ல வரம் கொடுக்க வேண்டும் . நம்மில் பலர் பக்தி என்ற பெயரில் வேஷம் தான் போடுகிர்றோம் . நான் சதுரகிரியில் பார்த்த அதிசயத்தை மும்முறை வலை பதிவு இடுகையில் இட்டேன் . ஆனால் மூன்று முறையும் அது இடுகையில் ஏற வில்லை . சரி இதற்கு மேல் அதை இடுகையில் இட ஏனோ என் மனமும் தடுக்கிறது தயவு செய்து படிக்கும் அன்பர்கள் மன்னிக்கவும் .
Astrology: மேஷலக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள்
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக