ஞாயிறு, 22 நவம்பர், 2009

அடக்கம் தெரிந்தவர்கள் செயல்இப்படித்தான் இருக்கும்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

சதுரகிரியில் அருவிகளின் ஊடே ஒரு பயணம்

நவம்பர் மாதத்திலே இரண்டாவது முறையாக மீண்டும் இந்த அம்மாவசைக்கு நான் சதுரகிரி போனேன் , காரணம் அருவிகளின் அழகை திரும்பவும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் தான் , மேலே சென்று தரிசனம் முடித்த பின்பு அம்மாவசை இரவு பெரிய மகாலிங்கத்தின் அருகில் தங்கினோம் ,





அம்மாவசை இரவு அன்று தங்குவதற்கு காரணம் , என்னுடன் தங்கிய நண்பர்கள் சொன்னார்கள் அம்மாவசை இரவு அன்று சித்தர்கள் பெரிய மகாலிங்கம் சுவாமியை பூஜிக்க வருவார்கள் என்று , எனக்கு அதில் உடன் பாடும் இல்லை அப்படி அவர் கல் வருவதாக இருந்தாலும் மனிதர்கள் அதிகம் இல்லாத இடங்களில் தன் சிவலிங்கம் வைத்து பூஜிப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் , சரி நல்லது எதுவாக இருந்தாலும் அம்மாவசை ஒரு இரவு அந்த கானகத்தின் உள்ளே தங்கி விடுவது என்று முடிவு எடுத்து விட்டேன் , நான் மற்றும் ஜெயகுமார் மதுரையிலருந்து மாரிசாமி மற்றும் அனுபனடியை சேர்த்தவர் ஒருவர் பெயர் தெரிய வில்லை , இவர்கள் மட்டும் தங்குவதா முடிவு எடுத்தோம்

மழையில் காரணமாக மற்ற நண்பர்கள் எல்லாம் நாம்மல ஆகாது குளிருல விரைசிடனும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்

நாங்கள் மட்டும் இருந்தோம் அவர் எதோ கொஞ்சம் பழைய சாக்குகளை வைத்து கொஞ்சம் டென்ட் அடித்து மலையில் நனையாமல் உக்கார மட்டும் இடம் ஏற்பாடு பண்ணினார் , கவனிக்க உட்கார மட்டும்தான் இடம் இருந்தது ,



பெரிய மகாலிங்கத்தில் ஒரு சிறப்பு நாமலே பூஜை பண்ணிக்கலாம் , நாங்கள் கொண்டு சென்று இருந்த பூஜை பொருட்களை விந்து இரவு ஒன்பது மணிக்கு பூஜையை போட்டோம் , மழை விட்ட பாடு இல்ல ஒன்பது மணிக்கு மேல் மழை நன்றாக வலுத்தது , எ



அவ்வளவுதான் எங்களால குளிர் தாங்க முடில குளிருக்கு போர்த்தி கொள்ள பெட்ஷீட் கூட இல்லை , கொஞ்ச நேரத்தில் நாங்க உட்காந்திருந்த இடங்களில் மழை நீர் உட்புகுந்துதது அவ்வளவுதான் அன்றைய இரவு தூக்கம் போச்சு , தூக்கம் போனாலும் பரவாயில்லை இங்கு கும்மிரிட்டு இரவில் விலங்குளின் நடமாட்டம் அருகில் எங்களுக்கு கேட்கிறது , எங்களுக்குள் கொஞ்சம் பயம் ஆரம்பித்தது இருத்தலும் ஒருத்தருக்கு ஒருத்தர் அதை காட்டி கொள்ளாமல் உடனே ஜே ஒரு காரியம் செய்தார் , கொஞ்சம் விறகுகளை போட்டு தீமூட்டினார் தீ மூடவும் மிருகங்கள் நாமட்டும் சத்தம் கொஞ்சம் குறைந்தது



எங்களுக்கும் கொஞ்சம் பயம் பிறந்தது , அப்புறம் சொன்னார் ஒரு சின்ன அகல் விளக்கு இருதால் கூட மிருகங்கள் கிட்டே நெருங்காது என்று



அந்த குளிரிலும் சித்தர்கள் பற்றிய விவாதம் எங்களுக்கு அனல் பறக்க நடந்தது .



எனக்கும் சித்தர் ஆசிவாதம் கிடைத்ததாக உணர்ந்தேன் , புலர்ந்தது பொழுது மலையில் பெரிய மகாலிங்களிருந்து நாங்கள் கீலி ஒரு வழியாகஒரு , வழியாக மகாலிங்கம் சுந்தர நாங்கள் கேளே அடைய முக்கால் மணி நேரம் நடந்தால் தன் முடியும்.

எனக்கு இப்பவே வியர்த்து கொட்டியது , என் என்றால் ஜே வால் நடக்க சிரமமா உள்ளது கால் வலி என்று உட்காந்து விட்டார் . எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை

அடிவாரம் செல்வதற்கு ஒன்னரை மணி நேரம் இருக்கிறது அதும் வேகமா க நடந்தால் தன் ,

எல்லோரும் ஒரு நிமிடம் அப்டியே ஸ்தம்பித்து விட்டோம் ,

நினைத்து பாருங்கள் தண்ணி ஓடிகொண்டிருக்கும் ஒரு ஓடையில் அதும் விலங்குகள் உள்ள நடு கானகதிற்குள்ளே நாங்கள் இருகிறோம் . நான் சுந்தர மகாலிங்கத்தை வணகினேன் எப்டியாவது வெளியில் கொண்டு விடு விடப்பா என்று .

கொஞ்ச நேரத்தில் ஜே வலி இருந்தாலும் பரவால்லை நான் இறங்குகிறேன் வாங்க என்று சொன்னார் . சரி என்று மெல்ல காலை விந்தி விந்தி நடக்க அரபிதார்

நாங்கள் பிடித்து கொள்ளலாம் என்று அருகே சென்றால் கூட வேணாம் என்று தடுத்து விட்டார் ,

கீழே விழுந்ததில் அவருக்கு காலில் நல்ல அடி , பாறையில் அவர் கல் ன்றாக அடி வங்கி உள்ளது பார்த்தாலே தெரிகிறது , சிறிது தூரம் பாறையின் ஊடாக நடக்க ஆரபிதோம் , சிறிது தூரத்தில் பாறை மறைந்து மலை சரிவுகள் தெரிய ஆரம்பித்தது . அப்படியே மலை சரிவுகளை பிடித்து ஏறி மேலே ஏறினோம் அது சங்கிலி பாறையை வந்து அடைந்தது , எனக்கு இப்போத்தான் மூச்சே வந்து .

ஏன் என்றால் அடி பட்ட காலுடன் இவர் என்னால் நடக்க முடிய வில்லை என்றால் அவர் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நடந்தால் தான் உதவி கேட்க்க முடியும் ., அப்டியே உதவி கேட்டாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களை யார் அங்கு போக சொன்னது . என்று தான் கேட்பார்கள் . என் என்றால் நாங்க போனது வனத்துறையினரால் தடை செய்ய பட்ட பகுதி . அதனால் தன் எனக்கு சங்கிலி பறை வந்து மூச்சே வந்தது என்று சொன்னேன் . அப்புறம் எல்லாம் பேசி கொண்டே கீழே வந்தோம் . வந்து அவர் அவர் வாகனங்களில் அவர் அவர் திசை நோக்கி பயண பட்டோம்

நான் நிறைய முறை சென்று வந்து உள்ளேன்

ஆனால் என்னால் இந்த முறை சதுரகிரி பயணம் மறக்க முடியாத ஒன்று திகில் அட்வென்ச்சர் எல்லாம் கலந்த கலவையாக எப்டியோ நல்ல படியாக முடிந்தது ஹர ஹர மகாதேவ்

இதை எழுதும் எழுதும் பொழுது எனக்கு மெய் சிலிர்த்தது காரணம் அவ்வளவு திகிலான அனுபவம் . அதை அனுபவித்தேன் நான்