வியாழன், 2 செப்டம்பர், 2010

சதுரகிரி மலேசியா நண்பர்களுடன் சென்றது






நண்பர்களே சதுரகிரி செல்வோர்கள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது நிறைய உண்டு எனது அனுபவத்தில் உண்மை சம்பவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிரிந்து கொள்ள விரும்புகிறேன் ,.
இதை நான் இவ்வளுவு தூரம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது ,. அதனால் நாங்கள் பட்ட மன வேதனைகள ஏராளம் ,.



மலேசிய நண்பர்கள் அன்பா சார் ,. கைலை பாலா சார் பரம் சார் இன்னும் இருவர் பெயர் ஞாபகத்திற்கு வர வில்லை மொத்தம் நாங்கள் ஆறு பேர் கொண்ட குழு சதுரகிரி மலையில் ஏறினோம் ,.

இந்திய வந்த உடனே பால சார் எனக்கு தகவல் கொடுத்து விட்டார் பிரபாகர் எங்களோட ப்ரோக்ராம் சாட்டில் வீக் எண்டு ஆனா சனி மற்றும் ஞாயறு அன்று நாம் சதுரகிரி செல்வது என்று முடிவு எடுத்துள்ளோம் உங்களுக்கு சரி தானே என்பர் சொன்னார் நானும் சரி என்று சொன்னேன் ,.
சரியாக வெள்ளிகிழமை அன்று இரவு தொடங்கும் முன் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் எல்லோரும் இரவு உணவு வேண்டாம் அம்மாவை சிரம படுத்தாதிர்கள் என்று சொல்லி விட்டு வெறும் காப்பி மற்றும் ஸ்வீட்ஸ் மட்டும் போதும் என்று சொல்லி விட்டார்கள் ,.


சிற்றுண்டியை முடித்து விட்டு எல்லோரும் அம்மாவிடம் சொல்லி விட்டி சதுரகிரி கிளம்பினோம் ,. சரியாக இரவு ஒன்பது மணி ஆகி விட்டது சதுரகிரி அடிவாரமான தானி பாறையை நங்கள் சென்று அடைந்த பொழுது சரி காலையில் மலை ஏறலாம் என்று சொன்னேன் ,. இல்லை பிரபா இப்பொழுது மலை ஏறிவிட்டோம் என்றால் களைப்பு தெரியாது ,. காலையில் சூரிய வெளிச்சம் வந்தால் அதிகமாக வியர்த்து கொட்டும் களைப்பு ஆகிவிடுவோம் இபோழுது ஏறலாம் என்றி முடிவு செய்தோம் ,.

எல்லோரும் கிளம்பி விட்டோம் அனால் பரம் சார் மட்டும் ஏனோ அசௌவ்கரியமாகவே இருந்தார் ,. ஏன் சார் என்று விசாரித்ததில் தலை வலி மற்றும் சிறிது ஜுரம் அடிபதகவும் நீங்கள் செல்லுங்கள் என்று கூறினார் ,.

சரி ரெஸ்ட் எடுங்கள் என்று கீழே காஞ்சி மடத்தின் கிளை மடம் உள்ளது ,. அங்கே தங்க வைத்தோம் ,. அவருக்கு ஏனோ இந்திய உணவு வகைகள் ஒத்துகொள்ள வில்லை என்று நினைக்கிறேன் ,.

சரி என்று அவரை பாகுகாப்பக ஒரு இடத்திலதங்க வைத்து விட்டு நன்றாக ரெஸ்ட் எடுங்கள் என்று சொல்லி விட்டு ,.
நாங்கள் ஒரு பத்து மணி இரவு மலை ஏற ஆரம்பித்து விட்டோம் ,.

எல்லாம் நன்றாகதான் சென்றது ,. இரட்டை லிங்கம் தாண்டும் வரையில் ,. கைலை பால் ஆசிர அவர்களுடைய மாமா அவர்கள் கொஞ்சம் வயதில் மூத்தவர் எங்கள் குழவில் கொஞ்சம் நடக்க சிரம பட்டார் ,. சரி என்று நான் அவருடனே சென்றேன் ,.


பச்சரிசி பாறை கடந்தவுடன் வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்னாடி அவர் கொஞ்சம் பாதை மாறி அவர் பள்ளத்தை நோக்கி அடி எடுத்து வைத்தார் நான் பின்னாடி அவரை கவனித்து கொண்டிருந்த நான் உடனே அவரை அவருடைய கையை மெதுவாக பிடித்து நில்லுங்கள் என்று சொல்ல வந்தேன் ,.

அது நான் செய்த மிக பெரிய தவறு சார் நில்லுங்கள் என்று சொல்லி இருந்தால் அவர் ஒரு வேலை நின்றிருக்க கூடும் ,.

நான் அவர் பள்ளத்தில் விழுந்து விடுவாரோ என்ற பதை பதிப்பில் கையை பின்புறமாக பிடித்தேன் ,.

அவ்வளவுதான் அவர் பதறி எதோ மிருகம் தான் பிடிக்கிறதோ என்று அலறி நான் எங்கு அவர் அங்கு விழுந்து விடுவாரோ என்று பிடித்த அதே பள்ளத்தில் விழுந்து விட்டார் ,.

கடவுளே எனக்கு எனக்கு பயங்கர அதிர்ச்சி பதட்டம் ,. எங்கள் குழுவில் கடைசியாக நானும் கைலை பாலா சார் மாமாவும் தான் சென்றோம் ,.
அவர்கள் நால்வரும் முன்னாள் சென்று விட்டார்கள் ,.

நான் அவர்களை சதம் போட்டு அழைத்தேன் ,. அவர்களை காணவில்லை ,. உடனே நானும் பள்ளத்தில் அவர்களை சத்தம் போட்டு அழைத்து கொண்டே இரங்கி அவரை தூக்கினேன் ,.

அனால் அவர் பயத்தில் என்னை தொடவிடவில்ல கிட்டே வராதே என்று சதம் போட்டு கொண்டே என்னை நெருங்க விடவில்லை ,. அப்புறம் ஏன் முகத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்து அவர் கிட்ட வர சம்மதித்தார் ,.

நான் அவரை தூக்கி விட்டு பள்ளத்தில் இருந்தி மேலே கொண்டு வரும் சமயம் பாலா அன்பா அனைவரும் வந்தார்கள் ,. எல்லோரும் அவரை மேலே கொண்டு வந்து உக்கார வைத்தோம் ,. நன்றாக வியர்த்து கொட்டியது அவருக்கு ,. எனக்கு என்ன செய்வது என்று புரிய வில்லை ,.

எனது துண்டை எடுத்து விசிறியாக பயன் படுத்தி விசிறினேன் ,. திடீரென்று வாமிட் பண்ணினார் ,. எனக்கு பயம் இன்னும் அதிகம் .,

கீழே விழுந்த ஒருத்தர் வாமிட் பண்ணினால் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் ,.

பயத்தில் எனக்கு பேச்சே வர வில்லை உடனே நாங்கள் நான்வரும் அதி விரை வாக செயல் பட்டும் அவர் முகத்தை கழுவி அவரை நல்ல சம தலத்தில் படுக்க வைத்து அவர் கை கால் எல்லாம் நன்றாக தேய்த்து விட்டோம் ஹார்ட் ஸ்மூத் செயல் படுற மாதிரி செய்தோம் ,.

நான் துண்டாலே விசிறிவிட்டு கொண்டிருந்தேன் ,. அப்புறம் ஷூ வை கலட்டி கால்களை நன்றாக சூடு வர தேய்த்து விட்டும் ,. கிட்ட தட்ட பாதி மயக்க நில்லைக்கு சென்றவரை எப்டியோ சுய நிலைக்கு கொண்டு வந்தோம் ,. இது நடந்தது இரவு ஒரு மணிக்கு அப்புறம் அவரை அங்கேயே ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்க வைத்து

அப்புறம் மேலே அழைத்து சென்றோம் ,. அதில் என்ன ஒரு அதிசயம் என்றால் பதினைந்து அடி பள்ளத்தில் விழுந்தவர் ,. ஒரு சின்னஞ்சிறிய அடியுடன் வேறு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்து கொண்டார் ,. என்னப்பன் எம்பிரான் அவருக்கு வந்த ஆயுள் கண்டத்தை அவரே வாங்கி கொண்டார் போலும் ,.

என்ன இருந்தாலும் தேவர் களுக்காக நஞ்சு உண்ட நீலகண்டன் அல்லவே பக்தர்களுக்கும் மட்டும் உதவாமல போய்விடுவான் ,. அப்பரம் ஒருவழியாக அவரை அழைத்து கொண்டு அதிகாலை மூன்று மணியை போல கோவில் வாசலை அடைந்தோம் எல்லோரும் களைப்பில் அப்படியே அங்கிருந்த பொது மேடையில் உறங்கி விட்டோம் ,.

நங்கள் சென்ற பொழுது அதிகாலை சந்தன மகாலிங்கம் கோவில் பூஜை சேயும் மணி ஓசை கேட்டது ,.


மூன்று மணிக்கு அவ்வளவு சரியாக முறையாக செய்யும் கோவில் உண்டு என்றால் அது சந்தன மகாலிங்கம் கோவில் தான் ,.

ஹ்ம்ம் அதில் இருந்து நான் யாரையும் இரவில் மழை இருங்கள் என்று யாரையும் சொல்வதும் இல்லை செல்வோரை கூட தயவு செய்து பகலில் சென்று பகலிலே திருன்ம்புங்கள் என்று சொல்வதுதான் வழக்கம்

இதோ கோவிலில் நாங்கள் எடுத்த சில புகை படங்கள்