சனி, 19 செப்டம்பர், 2009

சதுரகிரி செல்லும் பொழுது என்ன தேவை

சதுரகிரியில் நாம் தங்குவதற்கு மற்றும் உணவு மற்றும் கையில் என்ன என்ன எடுத்துகொள்ளலாம் .முதலில் ஒருநாளில் தரிசனம் முடிக்கும் அன்பர்களுக்கு சிறு அறிவுரை அவர்கள் எடுத்துக்கொள்ளும் பொருட்கள்
தண்ணீர் குறைந்த பட்சம் மூன்று லிட்டர்

அதிகம் நடை பயணம் கொள்ளாதவர்கள் குளுகோஸ் பாக்கெட் கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும் .

ஆப்பிள் போன்ற பழவகைகள் எடுத்துகொள்ளலாம்


அதிக நடைபயம் மேற்கொள்ளதவர்கள் எட்டு கிலோ மீட்டர் மலை மேல் ஏறும் பொழுது கொஞ்சம் கெண்டை கால் வலி உடல் வலி ஏற்படும் .

இந்த உடல் வலியோ அல்லது கால் வலியோ ஒன்றும் செய்யாது .


ஆனால் சிலர் முடியவில்லை என்பர் அவர்களுக்கு தேவை என்றால் பெயின் கில்லர் மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம் .

மட்டறபடி ஏதும் தேவை இலலை


என் என்றால் மூலிகை வனத்து காற்றை சுவசிதாலே போதும் . புது தெம்பை உணர்வீர்கள் . பிஸ்கட் பாக்கெட் சிலதை போட்டு கொள்ளுங்கள் .

மலை ஏறும் பொழுது பசி எடுத்தால் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம்.

அடுத்து இரண்டு அல்லது மூன்று நாள் தங்கும் அன்பர்கள் கையில் சால்வை . அல்லது இலகு ரக பெட்ஷீட் களை கொண்டு செல்லலாம் .


மலை ஏறும் பொழுது கவனிக்க வேண்டியவை ஆண்கள் சார்ட்ஸ் பனியன் மட்டும் போதும் . ஏன் என்றால் மலை ஏறும் பொழுது அதிகமா வியர்த்து கொட்டும் . அப்படி வியர்த்து கொட்டும் பொழுது நமது வியர்வை துவாரங்கள் வழியாகவும் . அங்கு உலவும் மூலிகை காற்று நமது மேனியினுள் செல்லும். அடிஎடுன்டைய தாழ்மையான கருத்து . ஆண்கள் வேட்டிகட்டிக்கொள்வது ரொம்பவும் நல்லது .ஒரு துண்டை மேனியில் போர்த்தி கொண்டு மலை ஏறலாம்.

சரி மேலே குளிப்பதற்கு வசதிகள் உள்ளனவா . உண்டு சவர் கூட போட்டு வைத்து இருக்கிறார்கள் .
உணவு அங்கு கிட்டத்தட்ட ஐந்து கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் உள்ளன . அவற்றுள் எனக்கு தெரிந்து மூன்று மடங்கள் . எப்பொழுதும் செயல் படுகிறது . மற்றவை திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்க படுகிறதுஅவற்றுள் கஞ்சி மடம் ரொம்பவும் புகழ் பெற்றது . இக்கஞ்சி மடத்திற்கு பொறுப்பாளராக இருந்து அதை நிறுவியவர் . ஸ்ரீ ல ஸ்ரீ காளிமுத்து ஸ்வாமிகள் இவர் தற்போது இல்லை. ஆனாலும் அதை வழி நடத்து பவர்கள் அவரை போலவே சிறப்பாக நடத்துகிறார்கள் . கஞ்சி மடத்தின் தொலைபேசி என்:-


04563325433 .


பக்தர்கள் அங்கு இலவசமாக உணவு எடுத்துகொள்ளலாம் நமது வீட்டை விட இதமானஉபசரிப்புடன் உணவு வழங்குவார்கள் . முகசுளிப்புஅங்கு நாம் காண முடியாத ஒன்று . அந்த அன்புஉபசரிப்புகே நாம் மயங்கித்தான் ஆக வேண்டும் . ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டுஅய்யா பசிக்கும் மட்டும் தான் உணவு உண்டு . ருசிக்கு இல்லை . எவ்வளவும் வேண்டுமானாலும்வாங்கி சாப்பிடுங்கள் ஆனால் உணவை மீதம்வைத்து மட்டும் வீணாக்கி விடாதீர்கள் . என்றுமட்டும் சொல்வார்கள் . நம் சிவனை நினைத்துஉணவை உண்டால் அது தேவாமிர்தத்தை விடசுவையாக இருக்கும் .


குளிர் காலங்களில் கொஞ்சம் குளிராக இருக்கும் அங்கு தங்குவதற்கு மடங்கள் உண்டு . கவலை இல்லை ஆனால் நமது வீடு போல வசதி இருக்காது .
பழமொழி ஒன்று எனக்கு என் கவனதிக்கு வருகிறது . "பசி ருசி அறியாது . நித்திரை சுகம் அறியாது " என்று சொல்வார்கள் அது உண்மையில் சதுரகிரியில் நடக்கும் . காரணம் மலை ஏறி வரும் நமக்கு ஏற்படும் கடும் பசியில் ருசியான உணவை பார்ப்பது இல்லை . அதுபோல மலை ஏறி வந்த களைப்பில் நல்ல வசதியான இடம் தன் எனக்கு வேண்டும் தூங்குவதற்கு என்று நமது உடல் பார்ப்பதில்லை
தூக்கம் நம்மை தழுவி கொள்கிறது . நம்மை அறியாமலே . பலர் நிம்மதியான தூக்கம் ந என்னனே தெரியாது
ஆனால் அங்கு வாருங்கள் நிம்மதி என்ன என்பதை உணர்வீர்கள் .
.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சதுரகிரி ஊஞ்சல் கருப்பு சுவாமி செல்லும் வழி .

சதுரகிரி சந்தன மகா லிங்கத்தின் சந்நிதியின் நேர் செல்லும் ஒற்றையடி பாதையின் வழியாக நாம் செல்ல வேண்டும் . சரியா ஒன்னரை கிலோ மீட்டர் cசென்றவுடன் . வன பத்ரா காளியம்மன் கோவில் வரும் . இந்த வழி முதலில் ஆரம்பிப்பது சந்தன மகாலிங்கத்தின் சந்நிதியின் நேர் எதிர் பாதை . இது சாப்டூர் வாழை தோப்பு செல்லும் பாதையும் கூட ஆனால் ஒரு ௨ கிலோ மீட் தூரத்தில் பாதை பிரிந்து ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடத்திருக்கு சென்றுவிடும் . ஆதலால் மக்கள் வழி காட்டி இல்லமால் அங்கு செல்ல வேண்டாம் . என்று அறிவுறுத்த படுகிறது . சரி வன பத்திர காளியம்மனை வழி பட்டு பயணத்தை தொடர்ந்தூம் என்றால் சரியாக ஒரு கிலோ மீட்டர்
சென்றவுடன் வாழை தோப்பு செல்லும் பாதையிலிருந்து அடர்ந்த வனத்துக்குள் சிறய ஒற்றாடி பாதை என்று கூட சொல்ல முடியாது . அவ்வளவு சிறியதாக இருக்கும் . அதன் வழியேஇரண்டு கிலோ மீட்டர் நடந்தால் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இருக்கும் இடத்தை அடையலாம் . ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் பெரிய சந்நிதி ஒன்றும் அல்ல . ஒரு பெரிய மரத்தின் அடியில் ஊஞ்சல் கருப்பு இருக்கிறார் . மரமும் ஒரு கற்பக விருச்சம் போன்றதுதான் .சரியான அடர்ந்த வானம் ஆகும் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் இவரும் சதுரகிரி இன் காவல் தெய்வம் ஆவார்
ஊஞ்சல் கருப்பு மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருத படுகிறார் . அவர் முன் அமர்ந்து தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும் . இது அங்கு அவர் முன் அமர்ந்து தியானம் செய்தவர் சொன்னது .

எனக்கு வலை பதிவில் சிறு உதவி தேவை

கணினி தொழில் நுட்பம் தெரிந்த அன்பர்கள் என்னுடைய வலை பதிவை பலரின் பார்வையில் படுமாறு செய்ய வேண்டும் . ஏன் என்றால் பல அன்பர்கள் கோவில் மலை அடிவாரத்தில் வந்து தடுமாறுகிறார்கள் . சார் எப்டி போறது என்ன பண்றது . வழி புரியவில்லை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் . அங்கு மலை அடிவாரத்தில் ஒரு சில விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்கள் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் .


அதனால் தான் இதை படித்து தெரிந்த கொண்ட அன்பர் நேராக கோவில்க்கு சென்று விடலாம் .

பலரின் பார்வையில் இருந்ததால் தான் அவர்களுக்கும் இப்படி ஒரு இலவச வழி காட்டி இருப்பதும் தெரியும் .

விஷயம் தெரிந்த அன்பர்கள் உதவலாம். சித்தம் சிறக்க சிவ தொண்டே சிறந்த வழிஎனது கைபேசியையும் அழைக்கலாம் .9944494045 9976642060- prabakar

சதுரகிரி ஒரு மூலிகை வனம்


சதுரகிரி ஒரு மூலிகை வனம் என்பதில் ஐயம் இல்லை . அதற்கு சிறு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன் . ரெட்டை லிங்கம் சந்நிதி தாண்டிய வுடன் நாவல் ஊற்று என்ற இடம் உள்ளது . அந்த ஊற்றில் உள்ள நீரை பருகினால் நீரின் தன்மை கொஞ்சம் துவர்ப்பு உடையதாக இருக்கும் . ஆனால் சுவையாகவும் இருக்கும். அந்த தண்ணியை தொடர்ந்து பருகினால் சர்க்கரை வியாதி ஓடி ஒளிந்து கொள்ளும் . இது எப்படி சாத்தியம் என்று நினைப்பு உங்கள்கு ஓடும் . இதோ விளக்கம் தருகிறேன் கூடவே . அங்கு உள்ள நாவல் மரத்து அடியில் ஊற்று உள்ளது நாவல் மரம் நூற்றாண்டை சேர்ந்தது .
நாவல் மரத்து அடியில் உள்ள ஊற்றின் நீர் அம்மரத்தின் வேரிலிருந்து கசிகிறது . நாவல் மரத்தின் துவர்ப்பு தன்மையை அந்த நீர் பெற்று வருகிறது . அதுவே சக்கரை வியாதி முதல் இன்னும் சில வியாதிகளையும் கட்டு படுத்தும் .
அது போல அங்குள்ள கோரக்கர் தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் போன்ற தீர்த்தம் மும் பல மூலிகை வேர் ,இலை ,தலை, இவற்றின் ஊடே பட்டு வருவதால் அது மூலிகை தீர்த்தமாக மாறுகிறது . நாம் அதில் குளிக்கும் பொழுது நமக்கும் அது பல வியாயதிகளை கட்டு படுத்திகிறது . இதற்கு மேல் அங்கு உள்ள மூலிகை விசயங்களை சொல்ல எனக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும் வலை அன்பர்கள் .

ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி விழா காலங்களை தெரிந்து கொள்ள


பரம்பரை அறங்காவலர் பெயர் பெ.துறை ராஜ் (எ ) பெரிய சாமி பரதேசி அய்யா அவர்கள் அவர்களின் புதல்வர்கள்
d.ராஜா -98436 37301
d . சம்பத் -97873 98531
வெகு தூரத்தில் இருந்து வரும் அன்பர்கள் அரங்காவலரை தொடர்பு கொண்டு நீங்கள் வரும் தேதியில் ஏதும் விசேஷம் உள்ளதாஎன்று தெரிந்து கொண்டு வரலாம் அல்லது என்றைக்கு விசேஷம் என்று தெரிந்து வைத்து வந்தால் பயண நேரம் மிச்சம் ஆகும் . தரிசனமும் இனிக்கும் . அப்படி அவர்களை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால் அடியேனை தொடர்பு கொள்ளுங்கள் .
பிரபாகர் மதுரை .- 9944494045, 9976642060, அடியேன் தங்களின் கேள்விக்குகளுக்கு தக்க பதில் சொல்லுகிறேன் .

சதுரகிரி முக்கிய தெய்வங்கள்

தாணிப்பாறை விநாயகர் கோவில் முதலில் நமக்கு தென் படுவது

௨.ஸ்ரீ தங்கராஜயோக காளியம்மன்
௩.ஸ்ரீ சப்த கன்னிமார் கோவில்
௪.ஸ்ரீ பேச்சி அம்மன் கோவில் (சதுரகிரி காவல் தெய்வம் )
௫. ஸ்ரீ கருப்பண்ண சுவாமி (சதுரகிரி காவல் தெய்வம் )
௬.ஸ்ரீ காலங்கி நாதர் குகை
௭.ஸ்ரீ அத்த்திரி மகரிஷி வனம்
௮.ஸ்ரீ கோரக்கர் மகரிஷி குகை அப்புறம் சுனை
௯.ஸ்ரீ காரம் பசு வனம்
௧0 .ரெட்டை லிங்க சந்நிதி
௧௧. ஸ்ரீ வணகாளியம்மான்
௧௨.ஸ்ரீ வன துர்க்கை அம்மன்
௧௩. sri பலா வடி கருப்பண்ண சுவாமி சந்நிதி
௧௪. ஸ்ரீ ஆனந்த வள்ளி அம்மன்
௧௫. ஸ்ரீ ஆதி சிவன் வனம்
௧௬. ஸ்ரீ ஊஞ்சல் கருப்பான சுவாமி
௧௭.ஸ்ரீ தவசு குகை மேடை
௧௯.ஸ்ரீ நாகதேவன் சுவாமி
௧௯.ஸ்ரீ நாகதேவி அம்மன்
௨0. ஸ்ரீ பெரிய கணபதி
௨௧. ஸ்ரீ இடைக்காட்டார் வனம்
௨௩.ஸ்ரீ அகத்திய மாமகரிஷியர் வனம்
௨௩.ஸ்ரீ பெரிய மகாலிங்க சுவாமி
௨௫. ஸ்ரீ சந்தனமகாலிங்க சுவாமி
௨௬.ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி
௨௭.ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சந்நிதி
இவ்வளவு இடங்களையும் பார்க்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் இங்கு தங்க வேண்டி வரும் . அன்பர் அதிகம் பேர் ஒரு நாள் முடித்து கொண்டுதான் செல்ல விரும்புவார்கள் . அவர்கள் நேர் சந்தன மகாலிங்க சுந்தர மகாலிங்கம் மட்டும் பார்த்தாலே போதும் . இல்லை நான் அனைத்து தெய்வங்களையும் பொறுமையாக தரிசிக்கக் விரும்பினால் மூன்று நாள்கள் ஆகும் . ஆனால் மூன்று நாள்கள் அங்கு தங்கினால் அந்த சஞ்சீவி மலையில் உள்ள சஞ்சீவி மூலிகைகள் காற்று நம்மீது பட்டால் தீர வியாதிகளும் தீரும் . இது சித்தர்கள் வாக்கு

சித்தர் பூமி சதுரகிரி

எனக்கு தெரிந்து சதுரகிரியை அனைவரும் சித்தர் பூமி என்றே கூறுகின்றனர் . உண்மையும் அதுதான்
நான் பலமுறை சதுரகிரி சென்றுள்ளேன் . ஆனால் என்னுடன் நிறைய மெட்ராஸ் அன்பர்கள் மற்றும் வெளியூர் அன்பர்கள் எல்லாம் பேசி கொண்டு செல்வோம் . அனைவரும் கேட்கக்கூடிய ஒரு விஷயம் . சாமி நீங்க சித்தரை பார்த்து உள்ளீர்களா . அவர் எப்படி இருப்பார் . உண்மையில் சித்தர் உள்ளர என்று கேட்கிறார்கள் . எனக்கு புரியவில்லை இரண்டு விசயங்கள் நம் கண்ணை மூடிட்டு செய்தாகணும் அது ஒன்று நாம் பிறரிடம் அன்பு செலுத்துவது அவர் நம் மீது அன்பு செலுத்த வேண்டும் எதிர்பார்போடு அன்பு செலுத்தினால் அங்கு சுய நலம் வந்து நின்று விடும் . அப்போ அன்பு பொய்யாகிவிடும்.
அன்பு நாம் செலுத்தும் பொது எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்த வேண்டும் . நாம் அன்பு செலுத்து நபர் நமது அன்பை தக்க சமயம் வரும் பொழுது கட்டாயம் புரிந்து கொண்டு விடுவார் . அது போல பக்தியும் நாம் எதிர் பார்ப்பு இல்லாமல் செலுத்தினால் கட்டாயம் இறைவனுக்கு தெரியும் நம்மை எப்பொழுது பார்ர்க்க வேண்டும் அல்லது நல்ல வரம் கொடுக்க வேண்டும் . நம்மில் பலர் பக்தி என்ற பெயரில் வேஷம் தான் போடுகிர்றோம் . நான் சதுரகிரியில் பார்த்த அதிசயத்தை மும்முறை வலை பதிவு இடுகையில் இட்டேன் . ஆனால் மூன்று முறையும் அது இடுகையில் ஏற வில்லை . சரி இதற்கு மேல் அதை இடுகையில் இட ஏனோ என் மனமும் தடுக்கிறது தயவு செய்து படிக்கும் அன்பர்கள் மன்னிக்கவும் .

வியாழன், 17 செப்டம்பர், 2009

பதினெண் சித்தர்கள் புகைபடம் மட்டும்

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பேசி
பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவா பதம் அளித்த செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியேசதுரகிரியில் வாழ்ந்த ( வாழ்ந்து கொண்டிருக்கிற) சித்தர்கள்
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலபரிந்துனீ
பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பில்லா ஆனந்தமாய
தேன் இணை சொரிந்து புரம் புரம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே


சதுரகிரியில் வாழ்ந்த எண்ணிலடங்கா சித்தர்கள் அதில் குறிப்பாக முக்கியமானவர்கள் புகை படம் இடம் பெரும் கவனயுங்கள். இதில் இவர்கள் இரண்டு முனிவர்களும் சதுரகிர்யில் செல்ல பிள்ளைகள் . இவர்கள் தான் இன்றும் மலையை பாதுகாக்கும் தெய்வங்களாகவும் உள்ளார்கள் . இவர்களுடைய குகையும் இவர்கள் வணங்கிய சிவா லிங்கமும் இன்றும் உள்ளது . தானிப்பாரையிருந்து செல்லும் வழியில்ருந்து கூரக்கர் குகை கோரக்கர் சுனை இஉம் உள்ளது .

சதுரகிரியின் தலவரலாறு


ஸ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் இடது புறமாக சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார் . அதுவும் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார் . சாய்ந்த நிலையில் உள்ள லிங்கத்திற்குவிளக்கம் நான் சென்ற போது ஒரு வயதான தாயார் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டார் .

தாயார் கூறியது சதுரகிரி மலையில் ஓரமாக மாடு மேய்க்கும் இடையர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மாடுகளை மேய்த்து திரும்பி சாயும்காலம் நேரம் பால் கறந்து அதில் ஜீவனம் பண்ணுபவர்கள் . அப்படி பால் கறக்கும் பொழுது ஒரு மாடு மட்டும் , விலகியே செல்லும் . அதை கவனித்த மாடு மேய்ப்பவர் அந்த காரம் பசுவை வலுகட்டாயமாக அமைதி படுத்தி பால் கர்றக்க முயற்சித்தார் . ஆனால் மாடு பால் கொடுக்க வில்லை .

மாடு மேய்ப்பவருக்கு ஒரு சந்தேகம் கிளம்பியது . அடுத்த நாள் இந்த ஒரு காரம் பசுவை மட்டும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார் . அப்பொழுது அந்த மாடு மட்டும் தன் கூட்டத்திலிருந்து விலகி தனியாக சென்றது . மாடுகரரும் அதை அபடியே மறை முகமாக பின் தொடர்ந்தார் . அபொழுது மாடு ஒரு மரத்தடியில் சிறிய லிங்க வடிவ பாறையின் மேல் பாலை தானாக சொரிந்து கொண்டிருந்தது .அதை பார்த்து மாடு மேய்ப்பவருக்கு வந்தது கோபம் தன் கையில் வைத்திருந்த தடியால் காரம்பசுவிருக்கு ஒரு அடி கொடுத்தார் . பின் அங்கிருந்த பாறையையும் ஓங்கி அடித்தார் . அப்பொழுது விழுந்த அடியில் அந்த லிங்கம் சாய்ந்தது . அடித்தவுடன் அந்த பாறையை பார்த்தார் அந்த இடையன் . அங்கே இறைவன் அவன் முன் தோன்றி என் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என கூறி மறைந்தார் . இது சுந்தர மகாலிங்க மூர்த்தி வரலாறு .

சந்தன மகா லிங்க பெருமான்


எனது தாயார் போராடி எமது தந்தையிடம் சரிபாதி உங்களுள் நான் வர வேண்டும் என்று சதுரகிரி நந்தவனத்தில் இருபத்தி ஒரு நாள் கடுமையான கேதார கௌரி விரதம் அனுஷ்டித்து அவ்வளுவு சிர்ரப்பன வாரம் வாங்கிய இந்த புரட்டாசி மாதம் தன் இப்பொழுது நடக்கிறது , இத்துடன் எனது தந்தையின் அறிய புகை படம் ஒன்று உள்ளது காண்பீராக . எனது தாயார் இருந்த விரதிதின் காரணமாக சதுரகிரி எங்கும் நறுமண மலர்கள் பூத்து குளுகியதாக நான் படித்த ஒரு புத்தகத்தில் செய்தி .

சதுரகிரி இன் முக்கிய நிகழ்வுகள் . பூஜைஒவ்வரு மாதம் அம்மாவசை அன்று இறைவனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கும் . நான் இன்னும் ஒரு தடவை கூட அம்மாவசை பூஜைக்கு செல்லும் பாக்கியம் . அடியேனுக்கும் கிடைக்க வில்லை . கால மின்மை காரணமாக அடியேனுக்கு அம்மாவசை பூஜையை பார்க்கும் பாக்கியம் கிட்ட வில்லை .. அடுத்து ஒவ்வரு பிரதோசமும் இங்கு வெகு சிறப்பாக செயல் படுகிறது . இங்கு காணும் பிரதோஷம் பூஜை கயிலையில் எம்பெருமான் திருவடியை நேரில் காண்பது போல .அடுத்து ஒவ்வரு பௌர்ணமி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படும் . பௌர்ணமி பூஜை காலம் பற்றிய விவரங்களுக்கு பிரபாகர் மதுரை 9944494045, 9976642060 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் பூஜை நேரம் இரவு சுமாராக ஆறு மணி லிருந்து இரவு இரண்டு மணி வரை நடக்கும் . முதலில் எம்பெருமான் சுந்தர மகா லிங்கம் பெருமானுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பூஜை நடக்கும் . அனைத்து விதமான அபிஷேகங்களும் உண்டு .

அடுத்து சுந்தர மூர்தி அடியார்க்கு க்கு நடக்கும் அபிஷேகமும் எம்பெருமானுக்கு போல அனைத்து அபிஷேகங்களும் முறையாக நடக்கும். நமது அடியார்கள் சிலர் தேவார மற்றும் திரு வாசக பதிகங்களையும் இடையில் மனம் ஒன்றி பாடி கொண்டிருப்பார்கள் . அப்பொழுது நமேக்கே தோன்றும் நம் இருப்பது பூமியிலா இல்லை தந்தையும் தாயும் நடனம் புரியும் சிவலோகதில என்று நமது மேனி சிலிர்க்கும் . அந்த பால் போன்ற சந்திர ஒளியில் நிஷப்தமான சூழ்நிலையில் கணீர் என்ற குரலில் அன்பர் கல் பாடும் தேவார திருவாசக பதிகங்கள் மனதில அப்படியே பதியும் . அதில் உள்ள உண்மையும் புரியும் நமக்கு நல்கதியும் கிடைக்க பெருவூம் .
அடுத்து சந்தன மகாலிங்கம் சந்நிதியில் பூஜை நடக்கும் அதுவும் முன் பூல வே நடக்கும் . அங்குள்ள சந்தன விநாயகர் மற்றும் சந்தன முருகன் . மற்றும் என்னையும் படிக்கும் உங்களையும் காத்தருளும் சந்தனமா தேவிக்கும் முறைப்படி அனைத்து விதமான அபிஷேகங்களும் நடக்கும். அது மட்டும் இல்லை அங்கு பதினெண் சித்தர்கள் சிலைக்கும் சட்டை நாதா முனிவரின் குகைக்கும் நவகிரகங்களுக்கும் முறைப்படி பூஜை கல் நட்டக்கும். அதன் பின்னர் கடைசியாக பலாவடி கருப்பண்ணசுவாமி கு இரவு இரண்டு மணி போல பூஜை தொடங்கி முடிக்கப்படும் . இனி அடுத்து காலையில் ஆறு மணிக்கு தன் கோவில் நடை திறக்க படும் .அடுத்த நிகழ்வு புரட்டாசி மாடதம் வரும் நவராத்திரி பூஜை ரொம்பவும் விசேஷம் . அதிலும் குறிப்பாக மாங்கல்ய பலம்ம் இல்லாத பெண்கள் இங்கு வந்து இருபத்தி ஒரு நாள் கேதார கவரி விரதம் இருந்து சந்தநல மகாலிங்கத்தை பூஜித்து வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் மாங்கல்யம் காப்பற்றப்படும் . இது சந்தனமா தேவியின் வாக்கு . பொய்ததில்லை .


அடுத்து மகா சிவராத்திரி பூஜை விசேஷமா நடை பெரும் .
தமிழ் மாசி மாதம்அண்டு மகா சிவராத்திரி வரும் .

வெளி நாடுகளில் வாழும் அன்பர்கள் சிவபக்தர்கள்

அனைவரும் கட்டாயம் மகா சிவராத்திரி அன்று

பெருமானுக்குநடுக்கும் பூஜையை கட்டாயம் காணவேணும் .
காண
கண் கோடி வேண்டும் .

மகா
சிவராத்திரி க்கு எப்படி செல்வது என்ற வெளி நாடு வாழ் அன்பர்கள் அடியேனைதொடர்புகொள்ளலாம்.
பிரபாகர்
மதுரை 99444 94045 , 9976642060 என்ற மொபைல்எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .

நாம் எப்படி வாழ் நாளில் ஒரு முறையேனும் கைலாயத்தை தரிசிக்க விரும்புகிறோமோ

அது போல வாழ் நாளில் ஒரு முறையாவது மகா லிங்கத்தை தரிசிக்க வேணும் .
மற்ற கோவில் களுக்கு நாம் போலாம் என்று நினைப்போம்.
ஆனால் ,பல காரணங்களுக்காக அது தள்ளி போகும் .

ஆனால் மகா லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று நினையுன்கள்.
இறைவன் உங்களை அவரிடம் ஏதேனும் ஒரு விதத்தில் உங்களை அந்த மலைக்கு அழைத்து வந்து விட்டார்
இது நான் அனுபவத்தில் நிறைய பேர் சொல்லி கேள்வி பட்ட உண்மை .
கட்டை விரல் சித்தர் பற்றிய செய்தியில் அத்தி ஊத்து என்று ஒரு இடம் குறிப்பிட பட்டுள்ளது . அது அத்திரி மகரிஷி ஊற்று அங்கிருந்து ஒரு நாழிகை தூரத்தில் தான் அத்திரி மகரிஷி இன் ஆச்சிரமம் இருந்ததஅக சில நூல்களில் படித்து உள்ளேன் . அங்கிருந்து ஒரு நாழிகை தூரத்தில் தான் கரம் பசுதடம் உள்ளது . அது இறைவனுக்கு பால் கொடுத்த கரம் பசுவின் கால் தடம் என்று கூறப்படுகிறது . அங்கிருந்து நேஅர் மேலே ஒரு நாளிகை தூரம் சென்றால் கோரக்கர் குகை உள்ளது . அது பக்கத்திலே கொர்ரகர் குண்டவும் உள்ளது . இங்கு கோரக்கர் தான் சீடர் களுக்கு பல மகா ரிஷிகளுக்கும் காய கல்ப மூலிகை கல் கடைந்த இடம் என்று கூற படுகிறது .

சதுரகிரி யின் அதிசயம்

சதுரகிரியில் நிகழ்ந்த அதிசய சம்பவம்
சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்:கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)தனிச்சுற்றுக்கு மட்டும்முகவரி:ந.ராதாகிருஷ்ணன்6,பழைய நெசவாளர் காலனி,7 வது தெரு,மதுரை ரோடு,அருப்புக்கோட்டை.செல் எண்:9865926214.மற்றும்த.ச.தவசிமணி (இணை ஆசிரியர்)திரைப்படபாடலாசிரியர்25,கணபதி தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-௩. இன்னும் இது போன்ற மகத்தான சம்பவங்கள் நடந்துள்ளன . அது இனி வரும் நாட்களை கட்டாயம் உண்டு நண்பர்களே .

புதன், 16 செப்டம்பர், 2009

சதுரகிரி மலை ஒரு தென்கையிலைசதுரகிரி புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ,ஒரு சிறு அறிவுரை . தாங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது பிளாஸ்டிக் பொருள்கள் மேலே கொண்டு செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணுங்களுக்காக கொண்டு செல்பவர்கள், எப்படி கொண்டு சென்றோமோ ,அதே போல் திரும்பவும் மலை அடிவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் . எனக்கு தெரிந்து தற்சமயம் சுத்தமா உள்ள மலை. அதுவும் "சித்தமாக" உள்ள மலை ,சதுரகிரி மலை . இங்கு அதிகமான மூலிகை உள்ளது. அந்த மூலிகை தாவரங்களை காப்பது நமது கடமை.
சரி இனி நாம் சதுரகிரி செல்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் . அதற்கு தானிப்ப்பாறை வழி தான் மிகவும் சிறந்தது வெளியூர் அன்பர்களுக்கு வடதமிழ் நாட்டு அன்பர்களுக்கு மதுரை மாநகரிலிருந்து ராஜபாளையம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை போகும் பஸ்களில் ஏறி கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில இறங்கவும் .(கிருஷ்ணன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது ) .அங்கிருந்து வத்திராயிருப்பு க்கு செல்லவும் (கிருஷன் கோவிலி இருந்து வத்திராயிருப்பு 10கிலோ மீட்டர் ஆட்டோ வும் கிடைக்கும் ) மலைகொவில்களை சென்றவுடன் அங்கிருந்து, தாணிப்பாறை செல்லவும் (தாணிப்பாறை பத்து கிலோ மீட்டர் ) கிருஷ்ணன் கோவிலில் இருந்துதாணிப்பாறை ஆட்டோ பிடிக்கலாம்

மலை அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் இறைவனின் திருவடியை நாம் அடைய .
அடிவாரத்தில் இருந்து மழைக்கு கோவிலுக்கு சென்று அடையும் வரை குடிநீர் கிடைப்பது கொஞ்சம் அரிது. ஆகையால் தாங்கள் குடிநீர் பாட்டில்கள் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று லிட்டர் தண்ணி தேவை படும் . அப்புறம் சிறுது உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய உணவு பண்டங்கள் எடுத்து செல்லலாம் . அதிலும் குறிப்பாக ப்லாசிடிக் கவர் இல்லாத தாக பார்த்து கொள்ளுங்கள் . மலை ஏற புதியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பிடிக்கும் . குறிப்பாக உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான் ,

மலை ஏறும் பாதை கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருக்கும் அதற்ர் காக பயப்பட தேவை இல்லை இறைவன் இருக்கிறான் வழி நடத்தி செல்ல .

அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு மேலே மலை ஏற ஆரம்பித்தால் எப்படயும் காலை ஒன்பது முப்பது மணிக்கு இறைவனை பார்த்து விடலாம் .மலை மேல தயவு செய்து ஷோவ்ப்பு சாம்ப்பூ போன்ற வற்றை உபயோக படுத்த வேண்டாம் . சதுரகிரி சென்றால் நாமும் இயற்கையுடனே வாழ்ந்து வர வேண்டும் . தயவுசெய்து செயற்கை பொருட்களை உபயோகம் செய்ய வேண்டாம் . பொன் முட்டை இடும் வ்வாத்தை ஒரு நாளில் அறுத்து பார்ப்பது போல நாம் அங்கு செயற்கை பொருகளை உபயோக படுத்துவது .

சரி மேல சென்ற பின் அங்கு என்ன உள்ளது . எல்லாமே உள்ளது . உங்கள்கு என்ன வேண்டும் பணம் பந்தம் பாசம் கொடுமைக்காரர்கள் த்ரோவ்கிகள் நன்றிகட்டவர்கள். இவர்கள் இருக்க மாட்டார்கள் . அன்பே உருவான சுந்தர மகா லிங்கமும், சந்தன மகா லிங்கமும் , சந்தன மாதேவி இவர்களும் இருபார்கள் . வெளி உலகத்தை இவர்கள் அன்பால் மறந்து விடுவீர்கள் . சுந்தர மகாலிங்கம் திருவடியிலே சுந்தர மூர்த்தி இயும் உள்ளார் . அங்கு சென்று இரண்டு நாள் தங்கி வாருங்கள் அங்கு உள்ள மூலிகை காற்று உங்கள் மேனியில் பட்டாள் . உங்களது வியாதிகள் தீரும் . ஆயுளும் கூடும் . நிறைய மூலிகைகள், உள்ளன , மலையின் பாது காப்பு கருதி அதை எல்லாம் வெளியிட முடிய வில்லை ஆனால் அந்த காற்று பட்டாலே உங்களது வியாதிகள் தீரும் என்பது . மகாலிங்கத்தின் வாக்கு .

செல்போன் அங்கு செயல் படாது . அங்கு மின்சாரம் கிடையாது . ஒரு சில கடைகள் உள்ளன ஆனால் நீங்கள் எதிர் பார்க்கும் அளவு கிடைக்குமா என்பது சந்தேகம் . அங்கு இலவச உணவு விடுதியில் இலவசமாக உணவு கிடைக்கும் . அந்த உணவும் மலை ஏறி வரும் அன்பர்களுக்கு பசிக்கு மட்டும் தான் . ருசிக்கு இல்லை .

ஒரு முறை சென்று தரிசனம் செய்து வாருங்கள் மகாலிங்க பெருமானை உள்ளன்போடு உருகி வழிபடுங்கள் . மறுபிறவி எய்தா நிலை வேண்டும் . தவறி மறுபிறவி உண்டு என்றால் உன்னை மறவா நிலை வேண்டும் . என்று கேளுங்கள் . உங்களுக்கு என்ன தேவை, என்பதை அவன் அறிவான் . கட்டாயம் . உங்களுக்கு தக்க சமயத்தில் கொடுப்பான் . தாய் தன் குழந்தை அழுவதை வேடிக்கை பார்க்க மாட்டாள் . அது போல அங்கு உள்ள சந்தன மாதேவி தயார் நமது தந்தையிடம் போராடி நமக்கு வேண்டிய வரங்களை கட்டாயம் பெற்று தருவாள் . நம்பிகையூடு மகா லிங்கத்தை தரிசியுங்கள் . வாழ்க்கையில் பிறவா நிலை எய்துங்கள் . மேலும் தங்களுக்கு விவரங்கள் தேவை என்றால் 8903167991 இந்த எண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் தேவையான விவரங்கள் கிடைக்கும் . இன்னும் சதுரகிரி பற்றிய விவரங்கள் தொடரும் அடுத்த வாரங்களில் . நன்றி


முதலில் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை வணங்கி ஆரம்பிக்க எண்ணியே ,. இந்த பதிப்பு முதலில் ஆரம்பித்து உள்ளோம் ,.

இத்தளத்தில் மிகவும் அரிதான மற்றும் பழமையான மலைகோவில்களை உள்ளோம் ,. நாங்கள் மிக சிறந்த முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் திறமையான வழிகாட்டிகளை கொண்டே இத்துறையில் இறங்கி உள்ளோம் ,.

வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள அன்பர்கள் யாவரும் இதன் மூலம் பயன் பெற முடியும் ,.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள
மலைகோவில்களை தரிசிக்க உள்ளோம்.

அதில் குறிப்பாக ,. தவம் பெற்ற நாயகி உடனுறை ஈசர் ,. குரங்கணில் முட்டம் ,. சிவசைலம்(பாபநாசம் ) ,.
சாஸ்தா கோவில் ,. இது போன்ற அரிதான மற்றும் மக்களுக்கு அறிமுகமே இல்லாத திருகோயில்கள் நாங்கள் வழி காடிகளாக உள்ளோம் ,. மேலும் விவரங்களை அறிய தங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது ,.

+918903167991 prabakar,. +918144401885 varadha desigan ,. contact email at:-prabakar1982@gmail.com , prince1885@gmail.com