வெள்ளி, 29 ஜனவரி, 2010

தை அம்மாவசை அன்று கங்கன சூரிய கிரகணம் முடிந்து நடந்த உதிரயனகால அம்மாவசை பூஜை

பிதுரு தர்ப்பணம் மற்றும் முறைபடி திதி மற்றும் உத்தராயண கால முறை அம்மாவசை மிகவும் விஷேஷமானது என்பதை நன்கு அறித்தவர்கள் புரிந்து கொள்வார்கள் .அம்மாவசை அன்று தர்ப்பணம் செய்ய முடியாத இக்கட்டில் மாடி கொண்டவர் கூட அக்காலத்தில் சொல்ல பட்ட விதி இது ,பணகறாக்கள் முறை படிநதியின் கரையில் மரத்தடியில் பிதுரு தர்ப்பணம் அல்லது திதி கொடுப்பார்கள் , ஆழ மரத்தடியில் நாம் செய்யும் திதி மற்றும் தர்ப்பணம் போன்ற காரியங்கள் நேரிடையாக நமது முன்னோர்களுக்கு சென்று அடைய வேண்டும் என்பதற்குத்தான் ,அறிவியல் படி நம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் பித்ரு தர்ப்பணம் என்பது ஒரு உளவியல் சிகிச்சை அது எப்படி என்று கேட்கும் நாத்திக ஆர்வலகளுகும்ஏன் பதில் இதோ ,எப்பொழும் நாம் வாழ்த்த வாழ்கையை நாம் மறந்து விடக்கூடாது , அப்படி மறந்ததால் தான் அமெரிக்க நாடு வீணாக போனது , சரியான குடும்ப கட்டமைபுகள் இல்லாத எந்த சமுதாயமும் ரொம்ப நாள் தாக்கு பிடித்ததக சரித்தரம் இல்லை ,

நமது நாட்டில் பணவசதிகள் இல்லையென்றாலும் நிமதியாக வாழலாம் , அனால் மேலை நாடுகளின் பாருங்கள் தான் கண் முன்னே கேட்டு போகும் பகலை தயார் வேடிக்கைதான் பார்த்து கொண்டு இருக்கும் முடியும் , புதுமை விறிம்பிகள் இது நியூ வேர்ல்ட் படிக்காததால் இப்படி எழுதுகிறேர்கள் என்று சாயம் பூசலாம் , பட் நிதர்சனமான உண்மையை நாம் மறந்து விடக்கூடாது , சரி விசயதிருக்கு வருவோம் போனால் அதற்கு பெரிய விவாதமே நடத்தலாம்
,


நமது சமுதாயம் ஒருகினைக்க பட்டது , முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் க்ட்டவனும் இல்லை எண்டு சொல்வார்கள் , இன்று நன்றாக வாழும் இளைய தலை முறையினர் நம் முன்னோர்கள் எப்டி வாழ்ந்தார்கள் கிரைண்டர் மிக்சி இல்லாமல் அவர் களால் எப்டி வாழ முடிந்தது என்று ஒவ்வரு குடும்பத்தினரும் உணர வேண்டும் ,
நமது தாத்த பாட்டி ஏழ்மையில் வாடி வதங்கி இருப்பார்கள் , அல்லது அவர்கள் எப்படி இறந்தார்கள் அவர் கல் இறந்த பொழுது நல்ல பெயருடன் சென்றார்களா , அல்லது வாழ்க்கையில் பெரும் தவறு செய்து விட்டு அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை அல்லது சிறை தண்டனைக்கு உட்பட்டு சென்றார்களா என்று ஊவருவரும் நமது பிற்காலத்தை உணர்ந்து வைத்திருக்க வேண்டும்


அப்பொழுதான் நமக்கு துன்பம் வராமலும் தடுக்க முடியும் . வந்தாலும் அதை சமாளிக்க நமது தத்த பாட்டிகள் வாழ்கை நமக்கு தெம்பு தரும் பாடம் தரும் சேமிப்பு ஐடியா வாக இருக்கும் ,உதராணமாக ஒரு பயனுடைய அப்பா தாத்த இருவருமே தற்கொலை செய்து கொள்கிறார்கள் ,. நாம் முறை படி தர்ப்பணம் திதி கொடுத்து கொண்டு வந்தால் தான் அந்த பயனுக்கு அவர்கள் என்ன தவறுகள் செய்து இறந்தார்கள் நாமும் அந்த தவறுகளை செய்யாமல் வாழ்க்கையில் போராடுவோம் , பொதுவாகவே அப்பனை போல் பிள்ளை என்பார்கள் ,

நடைமுறை வாழ்க்கையிலும் கண்கூட காண்கிறோம் , அந்த காலத்தில் இப்படி முறையாக செய்வதால் அவர் கல் நினைவில் நின்று இளைய தலைமுறையினர் நன்றாக நல்ல மனிதர்களா உருவாகினார்கள் ,.

நமது தகப்பனார் செய்த தவறை நாமும் செய்து வாழ்கையை தொலைத்து விடமால் இருக்கத்தான் பித்ரு தர்ப்பணம் மிக பெரிய உதவி செய்கிறது ,

நிறைய குடும்பங்களின் ஜாதகங்களை நான் அலசி ஆராய்ந்திருக்கிறேன் , பித்ரு தோஷம் உள்ள குடும்பிதனர் படும் அவதிகள் சொல்லி மாளாது அவர்கள் முறையாக பித்ரு தர்ப்பணம் கொடுகததல் வந்த வினை என்பது ஆன்மீக வாதிகளின் முடிவு ,

அறிவியல் பூர்வமாக தந்தையுடைய சுபாவத்தை அப்டியே பயன் கொண்டிருப்பாதால்
அவனும் நடைமுறை வாழ்கையின் தந்தை செய்த அதே தவறுகளை செய்து மேலும் பல இன்னல்களை தேடி கொள்கிறான் ,

பொதுவாகவே தந்தை இல்ல பிள்ளை தறுதலை என்று சொல்வார்கள் ,

உண்மைதான் தாய் மென்மையானவள் சிறுவயதில் தந்தை இழந்த பிள்ளை தனது சுய அரிவாள் லையே செயல் படும் தவறு என்பதை பட்டு தெரிந்து கொள்ளும் , அப்படி அவர்கள் உலக அனுபவம் கிடைக்கும் பொழுது வாழ்கையின் பெரும்பகுதி தொலைந்து செயலற்றவர்களாகி விடுகிறார்கள் என்பது நாம் கண்கூட கண்ட உண்மை ,

சரி போதும் என்று நினைக்கிறன் நிறைய விளக்கங்கள் கொடுக்க முடியும் ,. இருக்கின்றன அனால் எனக்கு காலமும் நேரமமும் போதாத காரணத்தால் இத்துடன் முடிக்கிறேன் ,

இப்படி பித்ரு தர்ப்பணம் கொடுக்க உகந்த சிறந்த காலன்களுள்
உதிராயன காலம் மிக சிறந்தது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் உதிராயன காலம் எனப்படும் அதாவதி தை ஒன்றாம் தேதியில் தொடங்கும் ,.

சாஸ்திரம் சொல்வது உன்னால் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்றால் பச்சரிசியும் வாழை பழமும் வாங்கி கொடுத்தாலே போடும் , அதுவும் முடியாவிட்டால் ஏதும் நடுகாடிற்குள் மாட்டி கொண்டாலோ அல்லது நகரத்தில் மாடிகொண்டாலோ உனது மனதார ஒரு பிடி தண்ணிரை எடுத்து (எல் இருந்தால் உசிதம் ) நமது முன்னோரை நினைத்து வானத்தை பார்த்து மனதில் நினையுங்கள் எனது முன்னோர்களே நான் இக்கட்டில் உள்ளேன் என்னால் முடிந்ததை தருகிறேன் மனபூர்வமாக ஏற்று கொள்ளுங்கள் என்று கூறி தண்ணீரை இறையுங்கள் . சந்தோசமாக நமது பித்ரு ஏற்று கொள்வார்கள் .
நான் தை அம்மாவசைக்கு அப்டிதான் மலையின் மேல் இருந்தேன் மேல் இருந்தேன்

எனது தந்தையாரை நினைத்து அங்குள்ள ஒரு சாதுக்கு மேற்கூறிய காரியங்களை செய்து உடன் ஒரு காவி வெட்டி துண்டு வாங்கி கொடுத்து பித்ரு தர்பணத்தை நிறைவேற்றி கொண்டேன் .,

அப்டி நீங்கள் இக்கட்டான இடத்தில மாடி கொண்டாலும் நமால் முடிந்த அளவுக்கு கட்டாயம் ஒவ்வரு அம்மாவசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது .
சதுரகிரியில் ஒரு சில இடங்களில் ஆறு தென்வடலாக உள்ளது ,. அங்கும் ஆழ மரங்கள் உள்ளன , அதனடியில் தர்ப்பணம் செய்வதும் நல்லதுதான் , வசதி படைத்தவர்கள் நீங்கலாக ஒரு ப்ரோகிதரை தயார் செய்து உடன் அழைத்து சென்று தர்பணம கொடுக்கலாம் ,

அதாவது புரட்டாசி அம்மாவசை அல்லது தை அம்மாவசை அல்லது மாசி அம்மவசி போன்ற முக்கியமான அம்மவசைகளில் ஒன்று கொடுத்து விட்டு வருதல் நலம் ,.

தை பொங்கல் அன்றே இந்த முறை அம்மாவசை வந்ததால் நான் பெரிய மகாலிங்கத்தின் அடியிலே பொங்கல் வைத்து எனது நண்பர்களுடன் அமைதியாக பொங்கல் கொண்டாடினோம் . எனது வாழ்க்கையில் அமைதியான பொங்கல் என்றால் அது இந்த முறைதான் , வித்தியாசமான அனுபவம் மற்றும் நல்ல அனுபவம் கூட என்னிடம் உள்ள குறைகளில் ஒன்று நான் அதிகம் பேசுவது

எனது நெருங்கிய நண்பர் திருப்பூர் சங்கர் அவர்கள் அன்பு கட்டளை இட்டுள்ளார் பெசுவற்ற்ஹை குறையுங்கள் இன்னும் தெளிவாக சிந்திபீர்கள் என்று மகாலிங்கத்தின் வாக்காகவே கருதிகிறேன் குறைத்து கொண்டேன் எனது பேச்சுகளை , இன்னும் அடுத்த முறை சதுர கிரி சென்றால் மௌன வீரத்துடன் செல்வது என்ற முடிவுடன் இருக்கிறேன் மலையில் ஒரு நாள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நல்ல து ,

பேச்சுகளால் எவ்வாளவு சக்திகளை இழக்கிறோம் , என்பதை நாம் எளிதாக கணக்கிடலாம் ,

எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் பட்டுகொட்டையில்ருந்து வருகிறார் , அம்மாவசை அன்று பேசவே மாட்டார் அப்டியே பெசமலையே மகாலிங்கம் தரிசனம் கண்டு பின் பெரிய மகாலிங்கம் தவசி குகை மற்றும் அந்த மலையையே ஒரு ரவுண்டு அடித்து விட்டுதான் கீழே இறங்குவர் ,

நினைக்க பிரமிப்பாகத்தான் இருந்தது கற்று கொண்டேன் அவர் மூலமாகவும் ஒரு பாடம் ,
இன்னும் நிறைய விசயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறன் ,. ஆனால் அவற்ற்றை பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்று ஐயமாக உள்ளது ,

காரணம் நான் ஒவ்வரு இடுகைக்கும் சதுரகிரியில் உள்ள நிறைய இடங்களை சொல்கிறேன் , அது நல்ல தா கெடாத என்று புரிய வில்லை , ஏன் என்றால் நான் இடும் இடுகைகளை படுத்தி விட்டு அந்த மலையை தவறாக யாரும் பயன் படுத்தி விடக்கூடாது என்ற உள்ள உணர்வும் இருக்கிறது ,.

மக்கள் கூடம் அதிகம் ஆகா ஆகா மழையின் புனிதத்தை கெடுத்து விடுகிறோம் நாம் ,

அங்குள்ள ஓடைகளை ஷாம்பு சோப்பு போட்டு பாழ் அடித்து விடுகிறோம் ,.

காட்டுக்குள் கண்டபடி சென்று வன விலங்குளை அச்சுறுதிகிறோம் .

இன்னும் சில புண்ணியவான்கள் அங்கு வந்து தான் அசைவம் சாபிடுவது தண்ணி அடிப்பது சிகரட் அடிப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்து மலையின் மேன்மையை இது போன்ற அதிமேதாவிகள் மேலும் உயர்த்துகிறார்கள் ,.

புண்ணிய ஸ்தலம் என்பது நாம் செய்த தவறுகளை திருத்துவதற்கு செய்த பாவங்களை போகுவதற்கு தான் ,. அங்கு வந்து மேலும் பாவம் செய்து மேலும் உங்களது பாவ சுமையை ஏற்றி கொள்ளாதிர்கள் ,

மகாலிங்கம் பல்லாயிரகணக்கான சித்தர்கள் மற்றும் பலகூடி அற்ப மானிட பிறவிகளை சுமந்து பார்த்த மலை , இன்றும் மகாலிங்க மலை அப்டியேதான் இருக்கிறது ,

அனால் இது போன்ற பாவ செயல் கலை செய்த மனிதர் கல் மட்டும் , திரும்ப மேல ஏற அனுமதிபதில்லை
அனுமதித்தாலும் அவர் கல் குடும்பத்தில் பார்த்தல் பெரும் குறையுடன் இருக்கும் .
சிறு உதாரணத்துடன் சொல்கிறேன் , ஒரு சாது கஞ்சா அடிப்பார் ,..

ஒரு நாள் இரவு மலம் கழிக்க போனாவர் போன இடத்தில கஞ்சாவை போட்டு நன்றாக புகை விட்டுள்ளார் . இவர் ஒரு மரத்தினடியில் அமர்ந்துள்ளார் ,.
மரத்தின் மேல் ஒரு தாய் கரடி குட்டியுடன் இருந்திரகிறது ,
இருட்டினில் இவர் கவனிக்க வில்லை போலும் , கரடிக்கு புகை என்றால் பயம் , கோவம் எல்லாம் வரும் ,

தனக்கு ஏதும் ஆபத்து என்று கீழே குதித்து சாமியாரை இரண்டு அரை கன்னத்தில் அறைந்து விட்டு ஓடி விட்டது ,. சாமியாரின் தாடை பெயர்த்து விட்டது ,.

அதன் பிறகு சாமியார் மேலே வரவதில்லை என்று கேள்வி பட்டேன் ,. அவர் தாடை இழந்ததுதான் மிச்சம் ,

அதனால் உண்மையான பக்தி மற்றும் நல்ல எண்ணத்துடன் மட்டும் மகாலிங்கத்தின் அடியில் இருங்கள் இல்லை என்றால் பாவ மூடைகளை சுமந்து கொண்டுதான் செல்ல வேண்டி வரும்


பல அறிய அற்புதங்களை கொண்ட மழை அதை நாம் இழந்தால் மீண்டும் கிடைக்காது , திருப்பதி போல மூன்று நாள் இருந்து தேவதை பார்க்க கூடிய நிலை வந்து விட கூடாது ,

ஏழு மலையான் நல்லவர்தான் அனால் மக்களை எப்படி ஏமாற்றி பணம் கற்கலாம் என்று அலைபவர்கள் அதிகம் உருவானதுதான் மிச்சம்
அதுபோல வந்தோமா சாமி கும்பிட்டோம கிளம்பினோமா என்று இருதால் நலம் எந்த மழை வாசஸ்தலமாக இருந்தாலும் எனது தாழ்மையான கருது இதுதான் , மலைகளை பாழ் படுத்தி விடாதிர்கள் ,.

நம் தலையில் நாமே மண்ணை வாரி போற்று கொள்ள வேண்டாம் ,. மலைகளை அக்கறையுடன் கவனியுங்கள் இறைவன் உங்க கூடவே வருவார் .

நான் சென்ற இடங்கள் மிக சுவாரசியமானது பெருமாள் மலை
என்னவோ நடக்க முடியாதவர்களால் தான் இன்னும் அந்தமலை சுத்தமா உள்ளது ,.

பெருமாள் மழைக்கு இதற்கு மேல் விளக்கம் கொடுத்தால் அதற்கும் குரூப் அகட்டி கொண்டு கிளம்பி அந்த இடத்தை நாஸ்தி பண்ணி விடுவார்கள் என்பதால் அதை பற்றின இடுகைகள் நான் வெளியிட வில்லை மன்னிக்கவும்,.
இபோழுது ஏன் சித்தர் கல் அரும்பாடு பட்டு கண்டு பிடித்த அறிய கலைகளை ரசவாதம் மற்றும் வைத்திய குறிப்புகளை மறைத்து வந்தார்கள் ,.

என்று இன் அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டேன் ,.

அங்குள்ள நெல்லிக்கனி மரங்களை நம் மக்கள் ஒடித்து மொட்டையாகி அதை பாழ் படுத்தி விட்டுத்தான் வருகிறார்கள் ,.

மக்கள் கூட்டம் அதிகமாக அதிகாமாக மலை க்கு ஆபத்து தான் வருகிறது நம் மக்கள் புரிந்து செயல் படுங்கள் ,.
நன்மையை மட்டுமே வாங்கி செல்லுங்கள் தீமைகளை வாங்கி செல்லாதிர்கள் , அப்புறம் ஆண்டவனை குறை சொல்ல கூடாது அங்கே போனேன் ,. எனக்கு ஒன்றும் நடக்கவே இல்லை என்று புலம்பாதிர்கள் எதை விதைதாமோ அதை மட்டும் தான் அறுவடை செய்ய முடியும் அது தான் உண்மை ,.

கோவிலுக்கு செல்கிறேன் என்று டாம்பீகம் அடித்து கொண்டு செண்டு அங்கும் போய் அங்கு உள்ள நலவர்களை கெடுத்து விட்டு வராதீர்கள் ,.

அங்கு உள்ள நல்லவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டும் ,.
ஒரு கோவிலுக்கு செல்லுமுன் நல்ல ச்சான்றோகளை சந்தித்து அவர்களளின் சொல் படி நடங்கள் ,.

அதற்குத்தான் அக்காலத்தில் பெரிவாங்க சொல்றத கேளுன்னு சொல்வாங்க ,. அத்துடன் நமது சுய புத்யும் பயன் படுத்தி ஆலயங்களுக்கு செல்லும் பொழுது பிறர்க்கு தீங்கு இளைக்காத வண்ணம் இறை வழிபடு நடத்தி வர வேண்டும்


ஒருவருக்கு நீங்க மனதை புண்படுத்தி விட்டு வழி பாடு செய்வதால் பயன் இல்லை ,. அதற்கு நமக்கு பொறுமை இல்லை என்றால் வீட்டிலையே சுவாமி படங்களை வைத்து தினமும் அரைமணி நேரம் தியானம் பயுளுங்கள் ,.
எந்த கடவுளை நினைத்து தியானம் பயில்கிரிகளோ அக்கடவுளை காண நல்ல ஆதமக்கள் உங்களுக்கு துணை புரியும்

சதுரகிரியில் வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் பூஜை மிக சிறப்பானது

சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலில் வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் பூஜை மிக சிறப்பாக உள்ளது .

ஒவ்வரு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் அன்று அங்கு சிறப்பாக அபிஷேக பூஜைகள் நடத்த படுகிறது .


நான் சென்றிருந்தது மார்கழி பௌர்ணமி அன்று,. நான் எப்பொழுதும் பௌர்ணமி பூஜையை விரும்பி பார்ப்பேன் , காரணம் நிலா வெளிச்சத்தில் நள்ளிரவில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் நடக்கும் அபிஷேக பூஜை எப்பேர்பட்ட மனதையும் கொள்ளை அடிக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை .
உண்மையான பக்தர்கள் அதை உணருவார்கள் . இல்லையென்றால் அவ்வளவு நடு நிசியில் நடக்கும் பூஜையில் மக்கள் பெரும் திரளாக இருந்து பங்கேற்பது என்பது சாதாரண விஷயம் இல்லை , மற்றும் அந்த பூஜையை காண சித்தர் பெருமக்கள் அரூபமாக வருகிறார்கள் என்ற செவி வழி செய்தியை கேட்டு நான் பௌர்ணமி பூஜையை விரும்பி பார்பேன் ,

நள்ளிரவில் மலையின் அழகை ரசிப்பதும் ஒரு தனி சுகம் , தனிமை விரும்பிகளுக்கு கூட நிச்சயம் அது பிடிக்கும் , நான் பெருமைக்கு சொல்லவில்லை நிதர்சனமான உண்மை அதுதான் ,


சரி சித்தர் பூஜை நிகழ்ச்சிக்கு வருவோம் பௌர்ணமி பூஜை முடித்ததும் இரண்டாம் நாளில் சித்தர் பூஜை அதையும் பார்த்து விட்டு செல்லலாமே .
அதற்குள் செல்கிறேன் என்று சொல்கிறீர்களே என்று என்னுடன் பழகிய பக்த அன்பர் திரு ராஜேந்திரன் (கோயம்புத்தூர் ) அவர்களும் திரு சொனைமுது (மதுரை ) , ஜெயசந்திரன் (கோயம்புத்தூர்) அவர்களும் ஆர்வ மிகுதியால் வற்புறுத்த நானும் சரி என்று தங்கி விட்டேன் ,

ஜனவரி ஒன்றாம் தேதி என் வாழ் நாளில் கொடுத்து வைத்தவன் என்று உணர்ந்தேன் . காரணம் காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த சித்தர் பூஜை மாலை மூன்று மணிக்குதான் முடிந்தது , இடையில் பசி தங்க முடியாத அன்பர்கள் மட்டும் எழுந்து சாபிட்டு விட்டு மறுபடியும் வந்தார்கள் , மற்றபடி ஒருவரும் இருக்கும் இடத்தை விட்டு அகல வில்லை , முறை படி பதினெட்டு எட்டு சித்தர்கலுக்கும்
அவ்வளவு அழகாக அருமையாக அபிஷேக ஆராதனைகள் நடந்தது ,

உண்மையை சொன்னால் அந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை மேல் அண்டா அண்டா வாக, தயிர், சந்தனம் ,மூலிகை பொடிகள், தேன்'', இளநீர், பனீர், விபூதி , பஞ்சாமிர்தம் , இன்னும் நிறைய அபிஷேகங்கள் நான் குறிப்பு எடுக்காததால் என் ஞாபகத்திற்கு வரவில்லை ,.
இறைவனுக்கு இன்னும் கொடுக்க ஏதும் இல்லை இவளுவுதான் இங்கு கிடைகிறது என்பது போல பக்தர் கல் அபிஷ பொருகளை கொடுத்து உள்ளார்கள் , சத்தியமாக இது இறைவன் செயல் தான் ,

மலையின் மேல் பதினைந்து கிலோ மீட்டார் நடந்து இதனை பொருள்களை சுமந்து வந்து மக்கள் கொடுகிறார்கள் என்றால் இறைவன் அவர்களுக்கு அருள வில்லை , என்றால் இது நடக்க சாத்தியம் இல்லை ,
கட்டாயம் அனைவருக்கும் அவன் அருள் மழை உண்டு நம்பி வருவோருக்கு அவன் நடராஜன் இல்லையா உண்மைதான் என்று உணர்ந்தேன் ,

கிட்டத்தட்ட இருபது ஒன்பது வகை அபிஷேகங்கள் நடந்து இருக்கும். அபிஷேக ஆராதனைகளை கவனிக்கும் பொருட்டு நான் ஆர்வ மிகுதியால் எவ்வளவு அபிஷேகம் நடந்தது என்று குறிக்க தவறி விட்டேன் ,
மன்னிக்கவும் பக்த அன்பர்களே ,

மூலிகை வேரால் அங்கு நடக்கும் அபிஷேகம் எங்கும் இல்லாத சிறப்பு ஒன்று .,
பக்த அன்பர்களே வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் திருவிழா என்றுதான் சதுரகிரியில் சொல்லுகிறார்கள் ,
நாம் பார்க்க வேண்டிய ஒன்று கட்டாயம் மறந்து விடாதீர்கள் ஒவ்வருவருடமும் வரும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று இத்திருவிழ நடை பெறுகிறது ,

நமக்கு ஆண்டவன் கொடுத்த இறையருள் போதும் என்று நினைபவர்கள் கூட இதை ஒரு திரு விழாவாக வேடிக்கை பார்க்க வாருங்கள் , அதன் பின் உங்கள் உணர்வுகளை நீங்களும் பதிவில் இடுங்கள் . பதினெண் சித்தர்களுக்கும் அரோகரா