வியாழன், 29 அக்டோபர், 2009

ஆகாய கங்கை பயணம்

எனது நண்பர் சரவணின் அண்ணா வரமுடியாத காரணத்தால் எங்கள் பயண திட்டம் மாறியது . நாங்கள் வியாழன் அன்று இரவே பஸ்ஸில் போய்விடலாம் என்று முடிவெடுத்து எல்லோரும் கிளம்பிவிட்டோம் . பஸ் பயணம் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது .
.
காரணம் தனியாக போயி பழக்க பட்ட எனக்கு கூடஐந்து பேரை கூட்டி செல்வது சற்று சிரமமான காரியமாக பட்டது . காரணம் எல்லோரும் வயதில் மூத்தவர்கள் மெதுவாகத்தான் கிளம்புகிறார்கள் . ஆதலால் எல்லோரையும் ஏக காலத்தில் பஸ்சில் ஏற்றி இறக்குவது என்பது கொஞ்சம் சிரமமான காரியமாக பட்டது . எனக்கு ,

ஒருவழியாக இரவு பனிரெண்டு மணியை அடைந்தேன் . சரி காலையில் கிளம்பலாம் என்று அங்கிருந்த பயனியர் நிழற்குடையில் கீழ் ரொம்ப கஷ்ட்டப்பட்டு உறங்கினோம் . எனக்கு உறக்கம் வரவில்லை காரணம் புது இடமாக இருந்ததாலோ என்னவோ எனக்கு உறக்கம் வரவில்லை . ஒரு வழியாக விடிந்து ஆறு மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தோம் . மலை ஏற அரம்பித்ததுதான் ஆச்சரியம் எனக்கு எனதுதாயார் வயதில் அறை நூற்றாண்டை கடந்தவர் . ஆனால் அவர் நடந்த வேகம் என்னால் நம்பவே முடியவில்லை இன்னும் காரணம் எங்கள் வீட்டு மாடி ஏற சிரமப்படும் எனது தாயார் சதுரகிரியில் கரடு முரடான பாதையை அடைந்தார் என்றால் நம்ப முடியுமா ? ஆஸ்துமா வேறு உள்ளது அவருக்கு . ரொம்ப தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு உண்மையில் கடவுள் கருணையினால் மூன்று மணி நேரத்தில் எளிதாக கடந்துவிட்டார் அப்பாதையை ,

நானும் எனது நண்பர் ராஜாவும் , எங்களுடன் பெரியாகுளது நண்பர் ஜெயகுமார் அவர்களும் மூன்று பேர் மட்டும் கோரக்கர் குகை போன்றவற்றை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் ,

எனது அம்மா அவர்களை முன்னே அனுப்பி விட்டு நாங்கள் கோரக்கர் குகை மற்றும் மேலும் எங்களுக்கு தெரிந்த பதஞ்சலி முனிவரின் சீடர்கள் வழிபட்ட குகை போன்றவற்றை பார்த்து விட்டு இவர்கள் பினால் நாங்கள் சென்றோம் . ஆனால் ஜெயகுமார் உடன் நான் பலமுறை சதுரகிரி சென்றுள்ளேன்

அல்லது நான் போயிருக்கும் சமயம் அவர் அங்கிருந்து கலந்து கொண்டு பேசுவோம் நிறைய விசயங்கள் அறிவு பூர்வமாக சொல்லி இருக்கிறார் ,. நானும் அவரும் நிறைய விவாதங்கள் செய்திருக்கிறோம் ஒவ்வரு தடவையும் எனக்கு அவர் புதுமையான மனிதராக தெரிகிறார் . காரணம் அவர் இடம் தன்ன்னம்பிகை அதிகம் அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ,. ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் தன்னம்பிக்கை முக்கால் பங்கு வகிக்கிறது . இரண்டாவது அவர் அந்த மலையில் இருபத்து கிலோ மீடர் நடந்தாலும் அவர் முகத்தில் களைப்பு என்பதே தெரியவில்லை ,. சிரித்த முகத்துடன் அவர் இருக்கும் பாவனை போன்ற விசயங்கள் நாம் அவரை பார்த்து கற்று கொள்ள வேண்டியது அதிகம் .

சரி விசயத்திற்கு வருவோம் . எனது தாயார் என்னால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வரை மலை ஏறி வந்ததே பெரிய விஷயம் ஆதலால் நான் இங்கே இருந்து கொள்கிறறேன் நீங்கள் தவசி மற்றும் மலை மேல் உள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னார் . சரி என்று நாங்கள் எபொழுதும் போல கிளம்பினோம் .

என்னுடன் எனது பெரிய தாயார் மற்றும் அங்கு வந்திருந்த சிவபக்தரான மோகன் அய்யா ஜெயகுமார் ராஜா மற்றும் இன்னும் சிலருடன் நாங்கள் தவசி வழியாக சென்று பெரிய மகா லிங்கம் மற்றும் வெள்ளை விநாயகர் போன்ற இடங்களை தரிசித்து வரலாம் என்று எல்லோரும் கிளம்பி அன்று நலல் படியாக எல்லா இடத்தையும் தரிசித்து வந்தோம் . எனக்கு ஏனோ மோகன் அய்யாவை ரொம்ப பிடித்து விட்டது ,. இப்பயணத்தில் காரணம் மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் அம்மலையில் ஏறி வந்தார் ,. அவரிடைய இடுப்பு பகுதி இல எதோ பிரச்சினை துண்டை இடுப்பில் நன்றாக இறுக்கி கட்டி கொண்டு அவர் மலையில் கஷ்டப்பட்டு ஏறியதை நினைத்தால் உண்மையில் அவரையும் அந்த மகாலிங்கம்தான் ஏற்றி விட்டிருக்கிறான் ,.


சரி இனி அடுத்த இடுகையில் ஆகாய கங்கைக்கு சென்ற அனுபவங்களை இடுகையில் இடுகிறேன் . நண்பர்களே என்னால் இவ்விடுகையில் புகைபடங்களை உப்லோஅது செய்தால் காலதாமதம் ஆவதால் நண்பர்கள் தயவு செய்து எனது கூகிள் பிசாசா வெப் ஆல்பம் பகுதியில் எனது புகை படங்கள் எல்லாம் உள்ளது அதை பார்த்தல் உங்களுக்கு தேவையான புகை படங்கள் கிடைக்கும் . நேரமின்மை காரணங்களால் என்னால் இந்த இடுகையில் இட முடிய வில்ல மன்னிக்கவும்,

புதன், 28 அக்டோபர், 2009

சதுரகிரியில் கிடைக்கும் கடுக்காய்கள்

சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். சந்தோஷமான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய்ப் பறக்கிறான்.

பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ் கிறது.

உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"கூறுவேன் தேகமது என்னவென்றால்குருபரனே

எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.


'உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை,
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும்.சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற் றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.


மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடு கிறார். கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கி னால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.


கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்

.பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.


கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.


ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?


அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.


கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.


கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்."காலை இஞ்சி கடும்பகல் சுக்குமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்விருத்தனும் பாலனாமே.'காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.தென்னாட்டவருக்கு திரிபலா...திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.


உடல் வலிமை பெற...நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.பல் நோய்கள் தீர...கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.மூல எரிச்சல் தீர...கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.


எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!
இந்த இடுகை நக்கீரன் இணயத்தளத்தில் இருந்தது கடுகாயின் சிறப்பம்சம் எல்லோருக்கும் தெரியபடுதவே எனது இடுகையிலும் இட்டு உள்ளேன் , தவறாக என்ன வேண்டாம் . மற்றும் சதுரகிரியில் கடுக்காய் மரங்கள் நிறைய உள்ளது , அங்கு மலைமேல் செல்லும் பொழுது அதிர்ஷ்டம் இருந்தால் பார்த்து எடுக்கலாம் , நன்றிநக்கீரன் இணைய தளம்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3277