வியாழன், 29 அக்டோபர், 2009

ஆகாய கங்கை பயணம்

எனது நண்பர் சரவணின் அண்ணா வரமுடியாத காரணத்தால் எங்கள் பயண திட்டம் மாறியது . நாங்கள் வியாழன் அன்று இரவே பஸ்ஸில் போய்விடலாம் என்று முடிவெடுத்து எல்லோரும் கிளம்பிவிட்டோம் . பஸ் பயணம் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது .
.
காரணம் தனியாக போயி பழக்க பட்ட எனக்கு கூடஐந்து பேரை கூட்டி செல்வது சற்று சிரமமான காரியமாக பட்டது . காரணம் எல்லோரும் வயதில் மூத்தவர்கள் மெதுவாகத்தான் கிளம்புகிறார்கள் . ஆதலால் எல்லோரையும் ஏக காலத்தில் பஸ்சில் ஏற்றி இறக்குவது என்பது கொஞ்சம் சிரமமான காரியமாக பட்டது . எனக்கு ,

ஒருவழியாக இரவு பனிரெண்டு மணியை அடைந்தேன் . சரி காலையில் கிளம்பலாம் என்று அங்கிருந்த பயனியர் நிழற்குடையில் கீழ் ரொம்ப கஷ்ட்டப்பட்டு உறங்கினோம் . எனக்கு உறக்கம் வரவில்லை காரணம் புது இடமாக இருந்ததாலோ என்னவோ எனக்கு உறக்கம் வரவில்லை . ஒரு வழியாக விடிந்து ஆறு மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தோம் . மலை ஏற அரம்பித்ததுதான் ஆச்சரியம் எனக்கு எனதுதாயார் வயதில் அறை நூற்றாண்டை கடந்தவர் . ஆனால் அவர் நடந்த வேகம் என்னால் நம்பவே முடியவில்லை இன்னும் காரணம் எங்கள் வீட்டு மாடி ஏற சிரமப்படும் எனது தாயார் சதுரகிரியில் கரடு முரடான பாதையை அடைந்தார் என்றால் நம்ப முடியுமா ? ஆஸ்துமா வேறு உள்ளது அவருக்கு . ரொம்ப தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு உண்மையில் கடவுள் கருணையினால் மூன்று மணி நேரத்தில் எளிதாக கடந்துவிட்டார் அப்பாதையை ,

நானும் எனது நண்பர் ராஜாவும் , எங்களுடன் பெரியாகுளது நண்பர் ஜெயகுமார் அவர்களும் மூன்று பேர் மட்டும் கோரக்கர் குகை போன்றவற்றை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் ,

எனது அம்மா அவர்களை முன்னே அனுப்பி விட்டு நாங்கள் கோரக்கர் குகை மற்றும் மேலும் எங்களுக்கு தெரிந்த பதஞ்சலி முனிவரின் சீடர்கள் வழிபட்ட குகை போன்றவற்றை பார்த்து விட்டு இவர்கள் பினால் நாங்கள் சென்றோம் . ஆனால் ஜெயகுமார் உடன் நான் பலமுறை சதுரகிரி சென்றுள்ளேன்

அல்லது நான் போயிருக்கும் சமயம் அவர் அங்கிருந்து கலந்து கொண்டு பேசுவோம் நிறைய விசயங்கள் அறிவு பூர்வமாக சொல்லி இருக்கிறார் ,. நானும் அவரும் நிறைய விவாதங்கள் செய்திருக்கிறோம் ஒவ்வரு தடவையும் எனக்கு அவர் புதுமையான மனிதராக தெரிகிறார் . காரணம் அவர் இடம் தன்ன்னம்பிகை அதிகம் அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ,. ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் தன்னம்பிக்கை முக்கால் பங்கு வகிக்கிறது . இரண்டாவது அவர் அந்த மலையில் இருபத்து கிலோ மீடர் நடந்தாலும் அவர் முகத்தில் களைப்பு என்பதே தெரியவில்லை ,. சிரித்த முகத்துடன் அவர் இருக்கும் பாவனை போன்ற விசயங்கள் நாம் அவரை பார்த்து கற்று கொள்ள வேண்டியது அதிகம் .

சரி விசயத்திற்கு வருவோம் . எனது தாயார் என்னால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வரை மலை ஏறி வந்ததே பெரிய விஷயம் ஆதலால் நான் இங்கே இருந்து கொள்கிறறேன் நீங்கள் தவசி மற்றும் மலை மேல் உள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னார் . சரி என்று நாங்கள் எபொழுதும் போல கிளம்பினோம் .

என்னுடன் எனது பெரிய தாயார் மற்றும் அங்கு வந்திருந்த சிவபக்தரான மோகன் அய்யா ஜெயகுமார் ராஜா மற்றும் இன்னும் சிலருடன் நாங்கள் தவசி வழியாக சென்று பெரிய மகா லிங்கம் மற்றும் வெள்ளை விநாயகர் போன்ற இடங்களை தரிசித்து வரலாம் என்று எல்லோரும் கிளம்பி அன்று நலல் படியாக எல்லா இடத்தையும் தரிசித்து வந்தோம் . எனக்கு ஏனோ மோகன் அய்யாவை ரொம்ப பிடித்து விட்டது ,. இப்பயணத்தில் காரணம் மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் அம்மலையில் ஏறி வந்தார் ,. அவரிடைய இடுப்பு பகுதி இல எதோ பிரச்சினை துண்டை இடுப்பில் நன்றாக இறுக்கி கட்டி கொண்டு அவர் மலையில் கஷ்டப்பட்டு ஏறியதை நினைத்தால் உண்மையில் அவரையும் அந்த மகாலிங்கம்தான் ஏற்றி விட்டிருக்கிறான் ,.


சரி இனி அடுத்த இடுகையில் ஆகாய கங்கைக்கு சென்ற அனுபவங்களை இடுகையில் இடுகிறேன் . நண்பர்களே என்னால் இவ்விடுகையில் புகைபடங்களை உப்லோஅது செய்தால் காலதாமதம் ஆவதால் நண்பர்கள் தயவு செய்து எனது கூகிள் பிசாசா வெப் ஆல்பம் பகுதியில் எனது புகை படங்கள் எல்லாம் உள்ளது அதை பார்த்தல் உங்களுக்கு தேவையான புகை படங்கள் கிடைக்கும் . நேரமின்மை காரணங்களால் என்னால் இந்த இடுகையில் இட முடிய வில்ல மன்னிக்கவும்,

5 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

Anonymous said...
Dear தேவன் மாயம்

it is not impossible this time

because only limited good soul live the earth so most of the bad and worst soul around us.

if you want more details come full moon day early morning at 2.00 am Sathura kiri malai then the time we meet one Sittar his name Sankaralinga swamial he know like this many art ( vithaikkal)

Note that time you don't speak any lines to sittar he know everthing your full story and 7 Jenmmam... so be careful to talk..

ok if wish joint with us..

V.R.David Raj
Bangalore.///

அன்புள்ள நண்பரே!

உங்கள் இடுகை கண்டேன்! என் பதிவில் டேவிட் ராஜ் என்பவர் நடுக்கு வாதத்துக்கு சங்கரலிங்க சாமிகள் என்ற சித்தர் மருந்தளிப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி விபரம் தெரிந்தால் எனக்குச்சொல்லமுடியுமா?

prabakar.l.n சொன்னது…

nanbare thankalukku uriya pathil nan koduthuvitten emailil parunkal

Prakash சொன்னது…

நான் கடந்த 19-10-2009 காலை சதுரகிரி வந்திருந்தேன். அன்று பகல் 12.30 மணிக்கு சுந்தர மஹாலிங்கத்தைத் தரிசனம் செய்துவிட்டு பின்பு கஞ்சி மடத்தில் உணவு உண்டு 2 மணிக்கு சந்தன மஹாலிங்கத்தையும் தரிசனம் செய்தேன். அன்று இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலையும் சுவாமி தரிசனம் செய்து புறபட்டேன்.என்னுடன் வந்திருந்த பெரிவர் ஒருவர் தவசிப்பாறை மற்றும் பெரிய மஹாலிங்கம் சென்றால் அங்கு வழிபடும் சித்த்ர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று சொன்னதால் மேலே போய்ப் பார்க்காமல் வந்து விட்டேன். தாங்கள் இணைத்துள்ள படங்களில் தெளிவாகப்பார்க்க முடிகிறது.

தமிழில் உள்ளீடு செய்ய http://nhm-writer.software.informer.com/1.5/download/ என்ற இணைப்பில் இருந்து NHM Writer என்ற இலவச மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.பயன்படுத்த மிகவும் எளிமையானது

prabakar.l.n சொன்னது…

nanbare prakasam 19/10/2009 andru naanum sathuragiri malaiyil irunthen nan ennudaiya sathuragiri ammavasai payanam endra idukaiyil ulla padankalai paarunkal athil nankal ammavasai andru edutha pugai padankal kooda idam petrullathu aanalum unkalai santhikaathathu enathu thurathathirstam nandri nanbare thangaludaiya men porul tharaverakki thalathiruku

பெயரில்லா சொன்னது…

dear Prabakar,

Mirracle of saduragiri, i will meet to Mr. Jaikumar,very different character, please contact me my mail ID


By
Saravanan. A.R.S

sars_sk@yahoo.com