வியாழன், 17 செப்டம்பர், 2009

சதுரகிரியின் தலவரலாறு


ஸ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் இடது புறமாக சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார் . அதுவும் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார் . சாய்ந்த நிலையில் உள்ள லிங்கத்திற்குவிளக்கம் நான் சென்ற போது ஒரு வயதான தாயார் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டார் .

தாயார் கூறியது சதுரகிரி மலையில் ஓரமாக மாடு மேய்க்கும் இடையர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மாடுகளை மேய்த்து திரும்பி சாயும்காலம் நேரம் பால் கறந்து அதில் ஜீவனம் பண்ணுபவர்கள் . அப்படி பால் கறக்கும் பொழுது ஒரு மாடு மட்டும் , விலகியே செல்லும் . அதை கவனித்த மாடு மேய்ப்பவர் அந்த காரம் பசுவை வலுகட்டாயமாக அமைதி படுத்தி பால் கர்றக்க முயற்சித்தார் . ஆனால் மாடு பால் கொடுக்க வில்லை .

மாடு மேய்ப்பவருக்கு ஒரு சந்தேகம் கிளம்பியது . அடுத்த நாள் இந்த ஒரு காரம் பசுவை மட்டும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார் . அப்பொழுது அந்த மாடு மட்டும் தன் கூட்டத்திலிருந்து விலகி தனியாக சென்றது . மாடுகரரும் அதை அபடியே மறை முகமாக பின் தொடர்ந்தார் . அபொழுது மாடு ஒரு மரத்தடியில் சிறிய லிங்க வடிவ பாறையின் மேல் பாலை தானாக சொரிந்து கொண்டிருந்தது .



அதை பார்த்து மாடு மேய்ப்பவருக்கு வந்தது கோபம் தன் கையில் வைத்திருந்த தடியால் காரம்பசுவிருக்கு ஒரு அடி கொடுத்தார் . பின் அங்கிருந்த பாறையையும் ஓங்கி அடித்தார் . அப்பொழுது விழுந்த அடியில் அந்த லிங்கம் சாய்ந்தது . அடித்தவுடன் அந்த பாறையை பார்த்தார் அந்த இடையன் . அங்கே இறைவன் அவன் முன் தோன்றி என் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என கூறி மறைந்தார் . இது சுந்தர மகாலிங்க மூர்த்தி வரலாறு .

கருத்துகள் இல்லை: