வியாழன், 17 செப்டம்பர், 2009

சதுரகிரி இன் முக்கிய நிகழ்வுகள் . பூஜை



ஒவ்வரு மாதம் அம்மாவசை அன்று இறைவனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கும் . நான் இன்னும் ஒரு தடவை கூட அம்மாவசை பூஜைக்கு செல்லும் பாக்கியம் . அடியேனுக்கும் கிடைக்க வில்லை . கால மின்மை காரணமாக அடியேனுக்கு அம்மாவசை பூஜையை பார்க்கும் பாக்கியம் கிட்ட வில்லை .. அடுத்து ஒவ்வரு பிரதோசமும் இங்கு வெகு சிறப்பாக செயல் படுகிறது . இங்கு காணும் பிரதோஷம் பூஜை கயிலையில் எம்பெருமான் திருவடியை நேரில் காண்பது போல .



அடுத்து ஒவ்வரு பௌர்ணமி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படும் . பௌர்ணமி பூஜை காலம் பற்றிய விவரங்களுக்கு பிரபாகர் மதுரை 9944494045, 9976642060 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் பூஜை நேரம் இரவு சுமாராக ஆறு மணி லிருந்து இரவு இரண்டு மணி வரை நடக்கும் . முதலில் எம்பெருமான் சுந்தர மகா லிங்கம் பெருமானுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பூஜை நடக்கும் . அனைத்து விதமான அபிஷேகங்களும் உண்டு .

அடுத்து சுந்தர மூர்தி அடியார்க்கு க்கு நடக்கும் அபிஷேகமும் எம்பெருமானுக்கு போல அனைத்து அபிஷேகங்களும் முறையாக நடக்கும். நமது அடியார்கள் சிலர் தேவார மற்றும் திரு வாசக பதிகங்களையும் இடையில் மனம் ஒன்றி பாடி கொண்டிருப்பார்கள் . அப்பொழுது நமேக்கே தோன்றும் நம் இருப்பது பூமியிலா இல்லை தந்தையும் தாயும் நடனம் புரியும் சிவலோகதில என்று நமது மேனி சிலிர்க்கும் . அந்த பால் போன்ற சந்திர ஒளியில் நிஷப்தமான சூழ்நிலையில் கணீர் என்ற குரலில் அன்பர் கல் பாடும் தேவார திருவாசக பதிகங்கள் மனதில அப்படியே பதியும் . அதில் உள்ள உண்மையும் புரியும் நமக்கு நல்கதியும் கிடைக்க பெருவூம் .
அடுத்து சந்தன மகாலிங்கம் சந்நிதியில் பூஜை நடக்கும் அதுவும் முன் பூல வே நடக்கும் . அங்குள்ள சந்தன விநாயகர் மற்றும் சந்தன முருகன் . மற்றும் என்னையும் படிக்கும் உங்களையும் காத்தருளும் சந்தனமா தேவிக்கும் முறைப்படி அனைத்து விதமான அபிஷேகங்களும் நடக்கும். அது மட்டும் இல்லை அங்கு பதினெண் சித்தர்கள் சிலைக்கும் சட்டை நாதா முனிவரின் குகைக்கும் நவகிரகங்களுக்கும் முறைப்படி பூஜை கல் நட்டக்கும். அதன் பின்னர் கடைசியாக பலாவடி கருப்பண்ணசுவாமி கு இரவு இரண்டு மணி போல பூஜை தொடங்கி முடிக்கப்படும் . இனி அடுத்து காலையில் ஆறு மணிக்கு தன் கோவில் நடை திறக்க படும் .



அடுத்த நிகழ்வு புரட்டாசி மாடதம் வரும் நவராத்திரி பூஜை ரொம்பவும் விசேஷம் . அதிலும் குறிப்பாக மாங்கல்ய பலம்ம் இல்லாத பெண்கள் இங்கு வந்து இருபத்தி ஒரு நாள் கேதார கவரி விரதம் இருந்து சந்தநல மகாலிங்கத்தை பூஜித்து வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் மாங்கல்யம் காப்பற்றப்படும் . இது சந்தனமா தேவியின் வாக்கு . பொய்ததில்லை .


அடுத்து மகா சிவராத்திரி பூஜை விசேஷமா நடை பெரும் .
தமிழ் மாசி மாதம்அண்டு மகா சிவராத்திரி வரும் .

வெளி நாடுகளில் வாழும் அன்பர்கள் சிவபக்தர்கள்

அனைவரும் கட்டாயம் மகா சிவராத்திரி அன்று

பெருமானுக்குநடுக்கும் பூஜையை கட்டாயம் காணவேணும் .
காண
கண் கோடி வேண்டும் .

மகா
சிவராத்திரி க்கு எப்படி செல்வது என்ற வெளி நாடு வாழ் அன்பர்கள் அடியேனைதொடர்புகொள்ளலாம்.
பிரபாகர்
மதுரை 99444 94045 , 9976642060 என்ற மொபைல்எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .

நாம் எப்படி வாழ் நாளில் ஒரு முறையேனும் கைலாயத்தை தரிசிக்க விரும்புகிறோமோ

அது போல வாழ் நாளில் ஒரு முறையாவது மகா லிங்கத்தை தரிசிக்க வேணும் .
மற்ற கோவில் களுக்கு நாம் போலாம் என்று நினைப்போம்.
ஆனால் ,பல காரணங்களுக்காக அது தள்ளி போகும் .

ஆனால் மகா லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று நினையுன்கள்.
இறைவன் உங்களை அவரிடம் ஏதேனும் ஒரு விதத்தில் உங்களை அந்த மலைக்கு அழைத்து வந்து விட்டார்
இது நான் அனுபவத்தில் நிறைய பேர் சொல்லி கேள்வி பட்ட உண்மை .

கருத்துகள் இல்லை: