சதுரகிரி ஒரு மூலிகை வனம் என்பதில் ஐயம் இல்லை . அதற்கு சிறு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன் . ரெட்டை லிங்கம் சந்நிதி தாண்டிய வுடன் நாவல் ஊற்று என்ற இடம் உள்ளது . அந்த ஊற்றில் உள்ள நீரை பருகினால் நீரின் தன்மை கொஞ்சம் துவர்ப்பு உடையதாக இருக்கும் . ஆனால் சுவையாகவும் இருக்கும். அந்த தண்ணியை தொடர்ந்து பருகினால் சர்க்கரை வியாதி ஓடி ஒளிந்து கொள்ளும் . இது எப்படி சாத்தியம் என்று நினைப்பு உங்கள்கு ஓடும் . இதோ விளக்கம் தருகிறேன் கூடவே . அங்கு உள்ள நாவல் மரத்து அடியில் ஊற்று உள்ளது நாவல் மரம் நூற்றாண்டை சேர்ந்தது .
நாவல் மரத்து அடியில் உள்ள ஊற்றின் நீர் அம்மரத்தின் வேரிலிருந்து கசிகிறது . நாவல் மரத்தின் துவர்ப்பு தன்மையை அந்த நீர் பெற்று வருகிறது . அதுவே சக்கரை வியாதி முதல் இன்னும் சில வியாதிகளையும் கட்டு படுத்தும் .
அது போல அங்குள்ள கோரக்கர் தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் போன்ற தீர்த்தம் மும் பல மூலிகை வேர் ,இலை ,தலை, இவற்றின் ஊடே பட்டு வருவதால் அது மூலிகை தீர்த்தமாக மாறுகிறது . நாம் அதில் குளிக்கும் பொழுது நமக்கும் அது பல வியாயதிகளை கட்டு படுத்திகிறது . இதற்கு மேல் அங்கு உள்ள மூலிகை விசயங்களை சொல்ல எனக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும் வலை அன்பர்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக