வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சதுரகிரி ஊஞ்சல் கருப்பு சுவாமி செல்லும் வழி .

சதுரகிரி சந்தன மகா லிங்கத்தின் சந்நிதியின் நேர் செல்லும் ஒற்றையடி பாதையின் வழியாக நாம் செல்ல வேண்டும் . சரியா ஒன்னரை கிலோ மீட்டர் cசென்றவுடன் . வன பத்ரா காளியம்மன் கோவில் வரும் . இந்த வழி முதலில் ஆரம்பிப்பது சந்தன மகாலிங்கத்தின் சந்நிதியின் நேர் எதிர் பாதை . இது சாப்டூர் வாழை தோப்பு செல்லும் பாதையும் கூட ஆனால் ஒரு ௨ கிலோ மீட் தூரத்தில் பாதை பிரிந்து ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடத்திருக்கு சென்றுவிடும் . ஆதலால் மக்கள் வழி காட்டி இல்லமால் அங்கு செல்ல வேண்டாம் . என்று அறிவுறுத்த படுகிறது . சரி வன பத்திர காளியம்மனை வழி பட்டு பயணத்தை தொடர்ந்தூம் என்றால் சரியாக ஒரு கிலோ மீட்டர்
சென்றவுடன் வாழை தோப்பு செல்லும் பாதையிலிருந்து அடர்ந்த வனத்துக்குள் சிறய ஒற்றாடி பாதை என்று கூட சொல்ல முடியாது . அவ்வளவு சிறியதாக இருக்கும் . அதன் வழியேஇரண்டு கிலோ மீட்டர் நடந்தால் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இருக்கும் இடத்தை அடையலாம் . ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் பெரிய சந்நிதி ஒன்றும் அல்ல . ஒரு பெரிய மரத்தின் அடியில் ஊஞ்சல் கருப்பு இருக்கிறார் . மரமும் ஒரு கற்பக விருச்சம் போன்றதுதான் .சரியான அடர்ந்த வானம் ஆகும் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் இவரும் சதுரகிரி இன் காவல் தெய்வம் ஆவார்
ஊஞ்சல் கருப்பு மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருத படுகிறார் . அவர் முன் அமர்ந்து தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும் . இது அங்கு அவர் முன் அமர்ந்து தியானம் செய்தவர் சொன்னது .

கருத்துகள் இல்லை: