சதுரகிரியில் நிகழ்ந்த அதிசய சம்பவம்
சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்:கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)தனிச்சுற்றுக்கு மட்டும்முகவரி:ந.ராதாகிருஷ்ணன்6,பழைய நெசவாளர் காலனி,7 வது தெரு,மதுரை ரோடு,அருப்புக்கோட்டை.செல் எண்:9865926214.மற்றும்த.ச.தவசிமணி (இணை ஆசிரியர்)திரைப்படபாடலாசிரியர்25,கணபதி தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-௩. இன்னும் இது போன்ற மகத்தான சம்பவங்கள் நடந்துள்ளன . அது இனி வரும் நாட்களை கட்டாயம் உண்டு நண்பர்களே .
Srhort Cut Astrology Part 13 to 15
1 நாள் முன்பு

1 கருத்து:
திரு.பிரபாகர் உங்கள் வலை தளம் மிக மிக அருமை.
நன்றி.
அன்புடன்.சசி.இராஜசேகர்,துபாய்.
+971 529441971
கருத்துரையிடுக