ஞாயிறு, 22 நவம்பர், 2009

அடக்கம் தெரிந்தவர்கள் செயல்இப்படித்தான் இருக்கும்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

4 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன்\\

நீதி நல்லவர் இயல்பை படம் பிடித்து காட்டுகிறது..

கேசவன் .கு சொன்னது…

/// அடக்கத்தில் சிறந்தவர் ///


நல்லறிவு புகட்டு வரிகள் !!

hayyram சொன்னது…

gud post

regards
ram

www.hayyram.blogspot.com

san சொன்னது…

Hi , PRABHA , JUST WAITING FOR YOUR NEXT POST , I THINK U ENJOYED MOST IN THIS MONTH TRIP IN SADHURAGIRI , I WANNA COME WITH YOU TO SADHURAGIRI ATLEAST A TIME YA , LET'S WILL PRAY WITH GOD , TO COMBINE BOTH OF US ,I WANNA LEARN FROM U MANY MORE THINGS.
REGARDS
SANKAR