திங்கள், 21 செப்டம்பர், 2009

சதுரகிரியில் சிறப்பான பௌர்ணமி பூஜை


சதுரகிரியின் மற்றும் ஒரு சிறப்பு மதம் தோறும் இங்கு நடக்கும் பௌர்ணமி பூஜை .
இபூஜையின் நேரம் சுமாராக இரவு ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை நடக்கும் .
எனக்கு தெரிந்து மற்ற கோவில் களில் நடக்கும் பௌர்ணமி பூஜை யை விட இங்கு பல சிறப்புகள் உள்ளன .
ரம்மியமான மலை சூழலில் பௌர்ணமி நேரம் தொடங்குவதை பொறுத்து பௌர்ணமி பூஜை நடக்கும் . அதை அன்பர்கள் காலண்டர் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
பௌர்ணமி பூஜை எபொழுது தொடங்கும் என்று தெரிந்து வைத்து கொண்டு அன்பர்கள் மலை ஏற ஆரம்பித்தால் பல அசௌகரியங்களை தடுத்து கொள்ளலாம் . என் என்றால் நான் முதன் முறை செல்லும் பொழுது பௌர் நமி பூஜை இரவு தானே தொடங்குவார்கள் . நாம் மதியம் மூன்று மணிக்கு மேல் மலை ஏற ஆரம்பித்தால் போதும் என்று நினைத்தேன் . அப்டிதான் மலை ஏறவும் செய்தேன் . ஆனால் வழியில் சில அன்பர்களுடன் பேசி கொண்டும் , அவர்களுக்கு சில உதவி கலை செய்து கொண்டும் நான் மேல செல்ல மணி இரவு ஒன்பது ஆகி விட்டது . அப்பொழுது சுந்தர மகாலிங்கத்திற்கு பூஜை முடிந்து விட்டது ,


சரி இவ்ளோதான் பௌர்ணமி பூஜை என்று நான் பக்கத்திலிருந்த மடத்தில் படுத்து உறங்கி விட்டேன்

அன்று நான் சரியான வழி முறை இல்லாததால் தான் இப்படி நடந்தது. அன்பர்களுக்கு என் இதை சொல்கின்றேன் என்றால் நினைத்தவுடன் எல்லோரோராலும் சதுரகிரி மலைக்கு போக முடியாது . அங்கு செல்பவர் யாராக இருந்தாலும் மலை மீது நடந்து தான் செல்ல வேண்டும் . அதிக தூரத்தில் இருந்து வரும் அன்பர்கல் சரியான வழிகாட்டுதலின் பேரில் வந்தால் பயண நேரம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை மிச்சம் ஆகும் .
பௌர்ணமி பூஜை காண கிடைக்காத ஒன்று .



பௌர்ணமி பூஜைக்கு எபொழுது மலையடிவாரத்திலிருந்து கிளம்பலாம் .
தூரத்தில் இருந்து வரும் அன்பர்கள் மதியம் வெயில் நேரமாக இருக்கும் அதற்கு முன்னால் செல்ல வேண்டும் என்றால் காலை ஆறு மணிக்கு அடிவாரத்திலிருந்து பயணத்தை தொடங்கலாம் . காலையில் ஏற ஆரம்பித்தால் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கொள்ளலாம் .
காலை பத்து மணிக்குள் பலாவடியை அடைந்து விடலாம் .

அதன் பிறகு மலை மேல் நீராடி விட்டு இறைவனை தரிசனம் செய்து விட்டு முடயும் என்றால் அதே வேகத்தில் பெரிய மகாலிங்கம் தரிசனம் முடித்து மதிய உணவுக்கு கஞ்சி மடம் வந்துவிடலாம் . மத்திய உணவு உண்டு விட்டு கால்களுக்கு கொஞ்ச ஓய்வு கொடுக்கும் விதமாக குட்டி தூக்கம் போடலாம் . அப்புறமென்ன இரவு ஆறு மணியிலிருந்து பௌர்ணமி பூஜை ஆரம்பிக்கும் இரவு ஒரு மணிக்கு மேல் பலாவடி கருப்பண்ண சுவாமி பூஜை முடியும் . அதை பார்த்து விட்டு


அடுத்தநாள் காலை ஆறுமணிக்கு திரும்பவும் மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தால் காலை பத்து மணிக்குள் மலையடிவாரம் வந்து விடாலாம் . சுருக்கமாக சொன்னால் முதல் தடவை பௌர்ணமி பூஜைக்கு வரும்பொழுது இரண்டு நாள் தேவை படும் . புதிதாக வருபவர்கள் .மறுதடவை நீங்கள் வரும் தொலைவை கணக்கு பண்ணி அவரவர்கள் கால நேரத்தை மிச்சம் பண்ணிகொள்ளலாம் . 9944494045,9976642060 . prabakar madurai. பூஜை நேர விவரங்கள் பௌர்ணமி கால விவரங்கள் அறிய இந்தஎண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை: