புதன், 23 செப்டம்பர், 2009

சதுரகிரியில் பெரிய மகாலிங்கம் செல்வது எப்படி ?

படத்தின் மேல கர்சரை வைத்து அழுத்துங்கள் படம் பெரியதாக தெரியும் . தவசி குகை அப்புறம் பெரிய மகாலிங்கம் புகைப்படம் இருக்கும் நன்றி தினமலர்
















பெரிய மகாலிங்கம் செல்லும் வழி மிகவும் குறுகலான பாதை . ஆனால் பக்தர்கள் செல்ல கூடியா அளவுக்கு இருக்கும் . பெரிய மகா லிங்கம் செல்லும் பொழுது யாருடைய துணையும் இல்லாமல் செல்வது மிகவும் தவறான செயல் ஆகும் வழி காட்டி இல்லாமல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறது ,. ஒரு மணி நேரம் மலை மேல் ஏறி செல்ல வேண்டும் . மலைக்கு செல்லும் வழி அனந்த வள்ளி அம்மன் கோவில் பின் புறம் செல்கிறது . அதில் சென்றால் இரண்டு நிமிடங்களில் பாதை இரண்டு பிரிவுகளாக செல்லும் ஒன்று தவசி குகை செல்லும் வழி . இன்னொன்று பெரிய மகாலிங்கம் செல்லும் வழி . நான் சொல்லும் வழியை பின் பற்றி அன்பர்கள் யாரும் மேலே செல்ல வேண்டாம் . ஒரு அடையாளத்துக்குத்தான் சொல்கிறேன் . பெரிய மகாலிங்கம் செல்லும் வழியில் இருந்து ஒரு மணி நேரம் மலை மேல் ஏறினால் பெரிய மகாலிங்கத்தை அடைந்து விடலாம் . இன்றும் பௌர்ணமி மற்றும் அமாவாசை பூஜைக்கு பெரிய மகாலிங்கத்தை தரிசிக்க சித்தர்கள் வருவதாக செய்தி . அடியேனுக்கு சித்தரை காணும் பாக்கியம் கிட்ட வில்லை இல்லை அவர் என்னுடன் வேறு ஏதுனும் ரூபத்தில் காட்சி அளித்தார்களா என்றும் தெரிய வில்லை . எது எப்படியோ நம்பிக்கை தான் வாழ்கை அதை நாம் மறந்து விட கூடாது .


பெரிய மகாலிங்கம் மிக பிரமாண்டமாக உள்ளார் . இறை நம்பிக்கை உள்ளவர்கல் பெரிய மகா லிங்கத்தை பார்த்த உடனே அதன் அழகில் மயங்கி விடுவர் . அப்பெரிய மகாலிங்கத்தை ஒரு பெரிய விருட்சத்தின் வேர் பிடித்து கொண்டு இருக்கிறது , அப்பெரிய மகாலிங்கத்தின் பினால் அவ்விருட்சத்தின் வேர் சிவபெருமானின் ஜடா முடி போல் பின்னி உள்ளது . என்னே இயற்கையின் அழகு காண கண் கோடி வேண்டு அன்பர்களே . சாதரணமாக அவ்வளவு பெரிய லிங்கத்த ஒரு மரத்தின் வேர் தாங்கி கொண்டு நிக்கிறது என்றால் அதை விட அதிசயம் என்ன வேண்டும் .

பெரிய மகாலிங்கத்துக்கு மகா சிவராத்திரி அன்றைக்கு நடு நிசி ஒரு மணிக்கு மேல் பூஜை நடை பெரும் . மகா சிவராத்திரி அன்று அந்த இருண்ட வன பகுதிக்குள் பகலில் செல்லவே பயமாய் இருக்கும் . அந்த வன பகுதிக்குள் மகா சிவராத்திரி அம்மாவாசை கு மு வரும் . அப்படிப்பட்ட காரிருள் சூழ்ந்த நிசப்தமான நடுநிசிஇல தான் பூஜை நடக்கும்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கட்டயாம் காண வேண்டிய பூஜை இது இரவு முழுது கண் விழித்து பூஜை செய்பவர்கள் சிவராத்திரி க்கு பெரிய மகாலிங்கத்திற்கு நடக்கும் பூஜை யை ஒரு தடவை கண்டாலே போதும். அவர் கல் பிறவா நிலை அடைந்து விடுவார்கள் அய்யா .

கருத்துகள் இல்லை: