செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சதுரகிரியின் வள்ளலார்மடம் அது கஞ்சி மடம்
வள்ளலார் பற்றி நான் சொல்ல தேவையில்லை அன்பர்கள் அறிந்து இருப்பார்கள் . தனி மனிதன் பசியை போக்குவதில் அவர் இறைவனை கண்டார் . நாமும் திக்கு தெரியாத அடர்ந்த வனத்திற்குள் வீற்றிருக்கும் எம்பெருமானை தரிசிக்கும் வரும் பக்தர்கள் யாரும் வெறும் வயிறுடன் போக கூடாது . இறையருளுடன் இறைவனால் கொடுக்க படும் உணவு அருளையும் பெற வேண்டும் . என்பதே இந்த கஞ்சி மடத்தின் நோக்கம் . மிகையாக நான் சொல்லல வில்லை . இதை நான் அங்கு இருந்து உணர்ந்து அதை சொல்கிறேன் . என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு தடவையும் எதாவது ஒரு தானிய வகைகள் வங்கி கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். அடியேன் செய்த உதவியை சொல்லி காட்ட வில்லை . பலரும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இதை வெளியிட்டுள்ளேன் .
அன்ன தானமே அருவாய் நிற்கும் என் அப்பனை காணும் இயல்பு வழி !" - ஸ்ரீ பிரும்ம ஜோதி "


சதுரகிரியில் ஒரு வள்ளலார் போன்ற மடம் உள்ளது . அது கஞ்சி மடம் . இது சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கும் சுந்தர மூர்த்தி சந்நிதிக்கும் நடுவில் உள்ள்ளது . கஞ்சி ம்டம்தின் முன் பெயர் பலகை இருக்கும் , அதை படித்து அன்பர்கள் புரிந்து கொள்ளலாம் . இன்னும் சில மடம் உள்ளது இதை மட்டும் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் மற்ற மடங்கள் குறிப்பிட்ட நாள்கள் இயங்குபவை .

இது வருடம் முழுதும் இயங்கும் . விழா காலம் அல்லாத காலங்களில் மலை ஏறும் அன்பர்கள் மலை அடிவாரத்தில் மடத்தின் கிளை உள்ளது அங்கு சென்று சொன்னால் நீங்கள் எத்துனை பேர் வந்து உள்ளீர்கள் என்று சொன்னால் அத்துணை அன்பர்களுக்கும் உணவு தயாரிக்க பட்டு அங்கு இருக்கும் . அன்பர்கள் மலை ஏறினவுடன் குளித்து தரிசனம் முடித்தவுடன் அடுத்து வயிற்று பசியை போக்க வேண்டும். madathiruku ponaal இன்முகத்துடன் வர வேற்று உபசரிப்பார்கள் .


இம்மடம் பலரின் உதவியில் இயங்குகிறது அங்கு வரும் அன்பர்கள் உணவு உண்டு பின் விருப்பம் இருந்தால் மடத்திற்கு ஏதேனும் பொருள் உதவி செய்யலாம். சரி அன்னதானதிருக்கு செய்யும் உதவி ஆண்டவனின் அருளை நேரில் பெறுவதை போல .


சரி என்ன என்ன அன்னதானதிருக்கு கொடுக்காலம் ,


1.அரிசி (என்ன வகை என்றாலும் கைப்பிடி அரிசியிலிருந்து மூட்டை அரிசி வரை அவர் அவர் விருப்பம் )
2,பலசரக்கு சாமான்கள் (மளிகை பொருள்கள் )
3.விவசாயம் செய்யும் அன்பர்கள் தங்களில் நிலங்களில் நன்கு அறுவடையாக நீங்கள் செயும் தானியங்கள் ஒரு படி மட்டும் இந்த அன்னதானதிருக்கு கொடுத்து பாருங்கள் உங்கள் மகசூல் நன்றாக இருக்கும் .
4.குழந்தை வாரம் இல்லாத அன்பர்கள் தாங்களே முன்வந்து சிறு சிறு விழா காலங்கள் (அம்மாவாசை பூஜை , பௌர்ணமி பூஜை.பிரதோச கால பூஜை கு வரும் அன்பர்களுக்கு) போன்ற நேரங்களில் தங்களே நின்று தயிர் சாதம் லெமன் சாதம் போன்ற எளிய வகை அன்னதான்கள் கொள்ளலாம். கட்டாயம் அதில் வரும் ஒரு ஏழை பக்தனின் வயிறு நிறைய உங்கள் வயிறு நிறையும் . மனமும் நிறையும் . இதும் உண்மை .
5.புளி
6.மிளகாய்
7.பூண்டு
8.கடுகு சீரகம்
9.மஞ்சள்
10.பருப்பு வககைகள்
இவற்றை முடிந்த மட்டும் சிறு பொட்டலங்களில் கொடுத்தால் கூட அது உங்களில் புண்ணிய கணக்கில் கட்டாயம் சேரும் அய்யா .

இம்மடத்தின் நிர்வாகி தொலை பேசி என்:- 04563325433மேலும் மடத்திற்கு உதவி தானம் செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் அடியேனிடம் கேளுங்கள் . தாங்கள் பொருட்கள் நூறு சத விகிதம் அன்னதானதிருக்கு மட்டும் தன் என்பதை தெளிவு படுத்திகிறேன் எனது அலை பேசி என்

9944494045.9976642060. prabakar madurai .

கருத்துகள் இல்லை: