செவ்வாய், 6 அக்டோபர், 2009

தவசிப்பாறை பயணம்


வணக்கம் நண்பர்களே ,



நான் வியாழகிழமை நடந்த பிரதோச நிகழ்ச்சியை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டேன் . அதில் பல இடங்களில் எடிட் செய்யப்பட்டுதான் வந்தது , காரணம், எனக்கு, நேரம்மின்மைதான் .
பல சிரமங்களிநூடே இந்த இந்த வலைப்பதிவை நான் தொடகிறேன் .

எனது தொழில் நிமித்தம் காரணமாக என்னகு நேரம் கிடைப்பது மிகவும் அரிது . கிடைக்கும் நேரத்தை மகாலிங்கதிருக்கு சேவை செய்கிறேன் . எனது தமிழ் டைப் இல் குறை இருந்தால் பொறுத்து அருளுமாறு வேண்டுகிறேன் . நன்றி,

சரி விசயத்திற்கு வருகிறேன் வியாழன் அன்று மாலை நேர பிரதோஷம் முடித்துதேதி காலை அன்று இரவு எல்லோரும் உறங்க சென்றோம் . ஐயப்பன் , பிரதீப் இருவரும் அதிகாலை மூன்று மணி பூஜைக்கு தங்களால் எழுந்திருக்க முடியாது என்று சொல்லி விட்டனர் . நீங்களும் ஸ்ரீநிவாசன் சார் ,போயி வாருங்கள் என்று சொல்லி படுத்துவிட்டார்கள் . சரி எண்று , நான் அலாரம் வைத்து விட்டு உறங்கினேன். புலர்ந்தது பொழுது, அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு எழுந்து இருட்டிற்குள் ஒன்றும் தெரியவில்லை ஏன் என்றால் அங்கு மின்சாரம் கிடையாது

ஆதலால் சிறிய ஹரிக்கன் விளக்கை தொங்க விட்டிருப்பார்கள். அது மடத்திற்குள் தான் . வெளியில் கும்மிருட்டு நான் மெதுவாக எழுந்து டார்ச் லைட் பிடித்து கொண்டு காலை கடன்களை முடித்து கொண்டு வந்தேன் .




அதிகாலை 2.50 மணி தண்ணீர் ஜில் என்று இருந்தது நமசிவாயத்தை மனதில் இருத்தி தண்ணீரை தலையில் கொட்டினேன் .
மழை வேறு சிறு தூறலாக தூரி கொண்டு உள்ளது . உடல் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது . குளித்து முடித்து விட்டு ஸ்ரீநிவாசன் சார் எழுப்பி விட்டு வந்தேன் , ஆயத்தமாகி சரியாக 3 மணிக்கு சந்தன மகாலிங்கம் கோவில்க்கு சென்றேன் .

அதிகாலை, வேளையிலும் அங்குள்ள பூசாரிகள் சுறு சுறுப்பாக இறைவனை துயில் எழுப்பும் பணியினை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்கள் . எனக்கு தெரிந்த பல சிவாலயங்களில் காசுக்கவும் அரசாங்கம் கொடுக்கும் சம்பளதுக்குதான், இறைவனுக்கு ;பூஜை புனஸ்காரங்கள் நடக்கும் . அதுவும் சில ஆத்மார்த்தமாக பண்ண கூடிய அர்ச்சகர்கள் இருப்பார்கள் அவர்களை நான் குறை சொல்ல வில்லை . ஆனால் சம்பளத்துக்கு கடமையை செய்யும் அர்ச்சகர்கள் தயவு செய்து சந்தன ,சுந்தர , மகாலிங்கம் சந்நிதிகளில் நடக்கும் ஆத்மார்த்தமான பணிகளை பாருங்கள் ., அந்த மலை காட்டுக்குள் அவர்கள் கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் நேர்த்தியை பாருங்கள் அடடா கண் கொள்ள காட்சி .


பூசாரி சந்தன மகாலிங்கத்திற்கு அபிசேக நீரை ஊற்றினார் . நான் திருவாசகம் திருப்பள்ளி எழுச்சி பாடலை பாட ஆரம்பித்தேன் . எனக்கு அவ்வளவு சங்கீத ஞானம் கிடையாது . ஆனாலும் அவ்வழு அமைதியான சூழலில் எனது குரல் மலைகளில் பட்டு எதிரொலித்தது . கயிலையில் எம்ம்பெருமானை கண்டது போல அடுத்தடுத்து நான் தேவார திருவாசாக பதிகங்களை ஒவ்வொன்றாக பாட ஆரம்பித்தேன் . எனக்கு மாணிக்கவாசகர் எழுதிய தில் பிடித்து . திருவாசகத்தில் உள்ள பிடித்த பத்து பதிகத்தில் உள்ள பத்து பாடல் களுமே அந்த பாடல்களுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது . கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பாடல் கல் அவை ,


அதிகாலை மூன்று மணிக்கு தேவார திருவாசக பதிகங்களை பாட ஆரம்பித்த நான் நான்கு முப்பது மணிக்கு பூஜை நிறைவடைந்து தீபாராதனை பார்த்த பிறகு தான் நிறுத்தினேன் . என்னவோ தெரியவில்லை பாடலைகளில் ஒன்றி விட்டேன் .
அங்குல பூசாரிகளிடம் பேச்சு கொடுத்தேன் . அய்யா இவ்வளுவு நெக்குருகி ஆத்மார்த்தமாக இறைவனுக்கு சேவை செய்கிறீகளே . நீங்கள் தங்குவதெல்லாம் எங்கு என அவர்களை கேட்டேன் . தங்குவதெல்லாம் இங்கேதான் அய்யா பூஜை நேரம் போக மீத நேரம் இங்குள்ள மாடுகளை கவனித்து கொள்வேன் . நந்தவனத்தில் உள்ள பூக்களை பறித்து இறைவனுக்கு மாலை தொடுப்பேன் . என்னுடன் துணைக்கு இன்னொரு பூசாரியும் உளார் என்று சொன்னார் .



இவர்களில் மாரியப்பன் என்பவர் கொஞ்சம் வித்யாசமானவர் . இவர் பூஜை க்கு தேவையான பணிவிடைகள் செய்வது பூஜை முடிந்த பின் அங்குள்ள சங்கு வில் அவர் எழுப்பும் ஒலி அந்த சதுரகிரி மலையே எதிரொலிக்கும் . இவர் சங்கு ஊது அழகு மாய கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் இனிமையை ஒத்து இருக்கும் . பூஜை முடிந்தது இவர் மூன்று முறை சங்கு ஊதினால் பூஜை அத்துடன் நிறைவடையும் .


பூஜையை முடித்து கொண்டு கீழே இறங்கினோம் . மணி ஐந்து வாய் நெருங்கியது . மடத்திற்குள் வந்த உடன் பிரதீப் அய்யப்பன் இருவரையும் எழுப்பி விட்டோம் . இருவரும் எழுந்ததும் , என்ன 'பிரபா ஸ்ரீனி சார் காலை தரிசனம் முடிந்ததோ .ஆமாம், என்று அவர்களை அவசர படுத்தினோம் காரணம் .
அதிகாலை சீக்கிரம் கிளம்பினால்தான் தவசி குகைக்கு வெயில் ஏறுவதற்கு முன் சென்று அடையலாம் . அவர்களும் குளித்து ரெடி ஆனார்கள் .


நாங்கள் பௌர்ணமி மடத்து நிர்வாகி சிவசங்கு அய்யாவிடம், சொல்லி தவசிக்கு கிளம்ப தயார் ஆனோம் . சிவசங்கு அய்யா தம்பி கொஞ்சம் பொறுங்க காலையில் வெறும் வயிற்றுடன் மேல ஏறினால் களைப்பு தட்டி விடும். உங்களுக்கு, ஆறு மணி க்குள் உப்புமா கிளறி கொடுத்து விடுகிறோம் .
வழியில் நீங்கள் , உணவருந்தி விட்டு மேல ஏறலாம் களைப்பு தெரியாது என்று சொன்னார்.




சரி, என்று அவர், கொடுத்த உணவை கையில் எடுத்து கொண்டு நாங்கள் கிளம்பினோம்.
சுந்தர மகாலிங்கம் சந்நிதியின் பின்புறம் தவசிக்கு செல்லும் வழி உள்ளது . அதன் வழியாக மலை மேல் ஏற ஆரம்பித்தோம். மணி ஏழு, ஆகிவிட்டது சப்த கன்னிமார் ஓடையை அடையும் பொழுது மேலும் அறை மணி நேரம் கூடுதலாக ஆகி விட்டது . எங்களுடன் வந்த ஐயப்பன்சென்னையில்,இல் பணி புரியும், நண்பர் .
மனிதர் வாயைத்திறந்தால் நகைசுவைதான். பிரதீப் ,ஸ்ரீநிவாசன் , நான், என அனைவரையும் காமெடி ஆக்கி நகைசுவையில் கலக்கி விட்டார் . ஆனாலும் அந்த வனத்திற்குள் ஐயப்பன் போன்ற மனிதர்கள் இல்லையென்றால் கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்யும் .


ஐயப்பன் போன்ற நண்பர்களால் பயணம் மிகவும் கலை கட்டியது . தவசி ஏறும் பாதை மிகவும் கடினமாக இருந்தது . எங்கள் நால்வரில், அய்யப்பன் தான் வயது குறைந்தவர் . ஆதலால் அய்யப்பன் வெகு விரைவாக மலை ஏறி விட்டார் . ஆனால் நாங்கள் எல்லோரும் வயது முப்பதை நெருங்குபவர்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது .

ஐயப்பன் முன்னாள் ஓடி, ஓடி , ஒவ்வரு, இடமாக நின்று ரசித்து பார்த்தார் . நாங்கள் பொறுமையாக நடந்து ஒவ்வரு இடமாக ரசித்தோம்



ஒரு வழியாக தவசியை அடைந்தோம் . அங்கு குகையின் வாயிலுக்கு முன்னாள் ஒருபத்து நிமிடம் ஓய்வு எடுத்தோம் . பின்னர் டார்ச் லைட் களை, எடுத்து கொண்டு குகை வாயில் சென்று படுத்து கொண்டு தரையில் நீச்சல் அடித்து கொண்டுதான் உள்ளே செல்ல முடியும் .
பிரதீப் நானும் வருவேன் ,என்று சொன்னார் பிரதீப் கொஞ்சம் பெருத்த உடல் வாகு உடையவர் அதலால் நான் பயந்தேன். காரணம், குகையின் அளவே இரண்டு அடி உயரம் தான். பக்கவாட்டில் அகலம் வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகம் சரி, வாங்க என்று, அவரையும் அழைத்து கொண்டு பின்னால் தரையில் ஊர்ந்து கொண்டு உள்ளே சென்றோம் .



உள்ளே, பத்து அடி தூரம் சென்றால் கொஞ்சம் முட்டி போட்டு தவழ்ந்து செல்லும் அளவுக்கு இடம் கிடைத்தது . முட்டி போட்டு ஒரு பத்து அடி தூரம் சென்ற பின் கொஞ்சம் குனிந்து கொண்டு செல்லும் அளவு வழி கிடைத்து குனிந்து கொண்டே அடி தூரம் சென்றோம் . ஆகா அங்குஆறு பேர் உக்கார்ந்து இருக்க கூடிய ஆளவுக்கு இடம் இருந்தது . கையில், கொண்டு வந்து இருந்த நெய் பாக்கெட் ஐ உடைத்து ,அங்குள்ள, பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினோம் . பின்னர் நால்வரு ஒரு அறை மணி நேரம் செய்தோம் .அமைதியாக, த்யானம் முடித்து குகையில்ருந்து வெளியேற ஆரம்பித்தோம் ,அப்பொழுதுதான் ,தெரிந்தது அம்மூவரும் சொன்னார்கள் .

பிரபா, குகையினுள் நுழையும் பொழுது கூட தெரியவில்லை. ஆனால், வெளியேறும் பொழுது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . என்று . அமைதியாக ஒவ்வருவராக வெளியேறினோம் . குகையில் இருந்து ,வெளியே வந்தோம். உள்ளே, சென்று வந்த களைப்பில் நண்பர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள் .



மலையில், உச்சியின் மேல் அமர்ந்து அங்கு வரும் ஜில் , என்ற காற்றின் அனுபவத்தை வாங்குவது எவ்வளவு அழகு, அதை என் நண்பர்கள் அனுபவித்து கொண்டிருந்தார்கள் . மலையின் மேல் இருந்து பார்த்தல் சுந்தர மகாலிங்கம் அண்ட் சந்தன மகாலிங்கம் சந்நிதி கள் , சிறிய, அளவில் தெரிந்தன . சும்மாவா சுந்தர சந்தன மகாலிங்கத்தின் சந்நிதிக்கு நேர், மலை மேல் ஐந்து கிலோ மீடர் உயரத்தில் இருக்கிறோம் . என்னுடன் வந்த பாலு என்ற ஒரு வழி காட்டி அங்கிருந்த ஒரு மூலிகையினை பறித்து கொடுத்து இதை சாப்பிடுங்கள் , என்றார்.
நானும், சாப்பிட்டேன் . கொஞ்சம் கசப்பு துவர்ப்பு சுவையுடன் இருந்தது .


என்னவென்று கேட்டேன் பெயரை சொல்ல மறுத்து விட்டார் . ஆனால் அல்சர் போன்ற வியாதிகள் ஒரு வாரம் தொடர்ந்து சாபிட்டால் குணமாகும் என்று சொன்னார் . ஆச்சரிய பட்டேன் நான் . நேரமாகிறது கிளம்பலாம் என்று சொன்னேன்.
நண்பர்கள் ரெடி ஆகி மலை மேல் மறுபடியும் பயணத்தை துவக்கினோம் ,.
இப்பொழுது, பெரிய மகாலிங்கத்தை நோக்கி செல்கிறோம் . தவசி பாறையின் மேல் ஏறினோம் . அங்கு ஒன்பது கற்கள் பெரிய பெரிய கற்கள்
அவை நவகிரக கற்கள் என்று சொல்கிறார்கள் . அவ்வளவு பெரிய கல்லை யார் அங்கு கொண்டு வந்து போட்டது சொல்லி வைத்து போல ஒன்பது கற்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் அதிசயத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன் . அதை வணக்கி விட்டு பின் மேலே நடந்தோம் , சரியாக ஒரு கிலோ மீடர் தொலைவில் இடைக்காடர் வனத்தை அடைந்தோம் . நண்பர்களே அடுத்த பதிவில் மீதம் சொல்கிறேன் நேரம் சரியாக உள்ளது

6 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அருமையான அனுபவம்.

ஒன்னு சொன்னால் கோவிச்சுக்கமாட்டீங்கதானே?

எழுத்துப்பிழையைக் கொஞ்சம் கவனிச்சால் அற்புதமான இடுகைகளாக இருக்கும். நேரம் இல்லையென்றால் நண்பர்கள் யாருக்காவது அனுப்பிப் பிழைதிருத்தம் செஞ்சுக்கலாம். நான்கூட செஞ்சு தருவேன். பிரச்சனை இல்லை.

பெயரில்லா சொன்னது…

குகைக்குள் ஊர்ந்து சென்று தியானம் செய்ததைப் படித்தபோது உண்மையிலேயே பயமாக இருந்தது.

மிகவும் பாக்கியம் செய்தவர், சித்தர்களுடன் இருந்துவிட்டு வந்துள்ளீர்கள்.

Unknown சொன்னது…

நண்பர் துளசி கோபால் அவர்களுக்கு மிகவும் நன்றி . த்ணகளுடைய கருத்துரையை நான் ஏற்கிறேன் . naanum ungalai ஒரு ஆசிரியராக எனது வலைப்பதிவில் நான் உங்களை பதிவு செய்கிறேன் . தாங்கள் உங்களுடைய ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் . தங்களுடைய கருத்துரைக்கு மிகவும் நன்றி . prabakar1982@gmail.com sathuragiri.ning.com

Unknown சொன்னது…

ippathivil peyar illatha nanbar oruvar karuthu veliyittu ullar nan paakiyam seithavan endru unmaithan nanbare sivan enna ninaithaano ennai aravanaithu akkukaikul ennai azhaithu sendraan . marakka mutiyaatha anubavam . siddhar kalai kaanum anubavum enaku kidaithathu ayya athu nilamayil porul arithu athai nan velipadaiyaaka yarukku koora vilali nanbare unmaiyil paakiyasaalithan naan

Rajesh. CTR சொன்னது…

Prabhakar, it was nice experience reading your visit ti Thavasi paarai.
If u have any photos of thavasi cave, post them here for us.

Unknown சொன்னது…

sure rajesh sir. i ll send ur mail k