செவ்வாய், 6 அக்டோபர், 2009

சதுரகிரியின் இந்த பிரதோச பௌர்ணமி வழிபாடு

இம்முறை நான் சதுரகிரி செல்லும் பொழுது , எனது இரு சக்கர வாகனதிலையே புறப்பட்டு விட்டேன் .
பிரதோச பூஜை இம்முறை சரியாக வியாழக்கிழமை வருவதால் நானும் திடீரென்று எடுத்த முடிவுதான் , சரி இல்லதில்ருந்து கிளம்பியாச்சு திருமங்கலம் வழியாக கல்லுபட்டியை வந்து அடைந்தேன் .

கல்லுபட்டியிலிருந்து பேரையூர் வழியாக சென்றால் பதிநைந்து கிலோ மீடர் குறையும் என்று ஒரு நண்பர் கல்லு பட்டியில் சொன்னார் . சரி என்று பேரையூர் வழியாக சென்றேன் . பாதை கொஞ்சம் கரடு முரடுதான் இருந்தாலும் பதினைந்து கிலோ மீடர் குறைவதால் ஒரு அறை மணி நேஅரம் மிச்சம் . தம்பி பட்டியை அடைந்தேன் .

தம்பி பட்டியில் ஒரு பலசரக்கு கடையில் கஞ்சி மடதிருக்கு பருப்பு அரிசி வகைகள் கொஞ்சம் வாங்கி கொண்டு கடை காரரிடம் விசாரித்தேன் .
அய்யா , இங்கு மாவூத்து மகாலிங்கம் என்ற கோவில் உண்டாமே.

இங்கு இருக்கும் மகாலிங்கம் தான் பின் நாளில் இந்த கோவிலில் இருக்கும் . மகாலிங்கம் தான் சதுரகிரி மலை மேல் குடி கொண்டதாக சொல்கிறார்களே உணமையா அப்படி என்றால் அதற்கு செல்லும் வழி சொல்லுங்கள் அய்யா என்றேன் .

கடைகாரரோ என்ன அய்யா அப்டி கேட்டு விட்டீர்கள் அவனின் பெருமையை சொல்ல வாய் வலிக்குமோ . இதோ தாரளமா என்று சொல்ல ஆரம்பித்தார் .
அய்யா இங்கு இருக்கும் மகாலிங்கம் தான் பின் நாளில் சதுரகிரி மலையில் குடி கொண்டதா காலம் காலமா சொல்ல கேட்டு இருக்கேன் .
மாவூத்து கு மேல ஒரு மணி நேரம் மலை மேல் நடந்தால் பெருமாள் மட்டை என்ற இடம் உண்டு . அங்கு நமது பெருமான் பெருமாள் அகவும் அவதாரம் எடுத்து உள்ளார் . அங்கு தான் பச்சை மால் அவனது மனைவியும் மாடுகளை மேய்க்கும் தொழிலை கொண்டவர்கள் இவர்கள் அங்கு மாடு மேய்க்கும் பொழுது அவனது மனைவியிடம் பால கறந்து கொடுத்து விடுவான் .

பாலை எடுத்து கொண்டு அவன் மனைவியும் நேராக வீடு சென்று விடுவாள் . ஆனால் ஒருநாள் இந்த மாவூத்து மகாலிங்கம் ஒரு பெரியவர் உருவில் சதுரகிரியில் இருந்து அம்மா எனக்கும் கொஞ்சம் பால் கொடுத்து விட்டு போம்மா என்று கேட்டு உள்ளார் . அபொழுது இந்த பெண்ணும் ஒரு துறவி கேட்டு மறுக்க முடியாமல் அவர்க்கும் பால் ஈந்து விட்டு செல் வாள்பால் குறைவதை கண்ட பச்சைமால் தன் மனைவியிடம் என் பல் குறைகிறது என்று கேட்டான் . மனைவயோ இப்படி ஒரு துறவி கேட்டார் கொடுத்தேன் என்று சொல்லவும் . அவனுக்கு கோபம் பொய் சொல்கிறாய் என்று சொல்லி விட்டான் .
அவனது மனைவியால் இதை பொறுக்க முடியவில்லை உடனே தான் பால் கொடுக்கும் துறவியிடம் பொய் அய்யா தங்களால் என் கணவரிடம் நான் பொய் சொல்கிறேன் என்ற குற்ற சாட்டுக்கு ஆள் ஆகி விட்டேன் . என்று சொல்லி மன்றாடினால்உடனே அவர் அவனது மனைவியை சடாரி யாக மாற்றி மாவூத்து உடயகிரினாதர் கோவிலில் காவல் தெய்வமாக மாற்றி விட்டார் .

பின்னர் அவனது உறவினர்களும் திசை கொருவராக காவல் தெய்வங்களா க மாற்றி சதுரகிரியில் அமர்த்தி விடுக்கிறார் . இதை அறிந்த பச்சைமால் நேராக தானி பாறை வழியாக சென்று சுண்டரமகாளிங்கத்தை தரிசித்து தன் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரவும் இறைவன் நேரில் தோன்றி உனக்கு என்னப்பா வேண்டும் என்று கேட்க , அவனோ., இறைவா நீ இருக்கும் இடத்தில் எனக்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்க்க இறைவனும் இடம் அளித்தார் . இன்றும் சுந்தர மகாலிங்கத்தின் சந்நிதியின் பின் புறம் பச்சை மால் உரை கொண்ட இடமும் உள்ளது அவனையும் தெய்வமாக மக்கள் வணங்குகிண்டறனர் .

இன்றும் மவூத்து மகாலிங்கத்தின் சந்நிதியின் அருகில் சடாரி இருக்கின்றாள் . ஆனால் கிராமத்து மக்கள் தவறபுரிந்து கொண்டு அவளுக்கு கிடா வெட்டி கோழி அறுத்து படையல் இடுகின்றனர் . அது மிகவும் தவறு என்று அந்த கடைகாரர் நீண்ட கதையை சொல்லி முடித்தார் .


அது மட்டும் இல்லை சதுரகிரி வரும் ஒவ்வருவரும் முதலில் மவோஊத்து மகாலிங்கத்திடம் தரிசான்ம் பெற்று அனுமதி வங்கியபின்னரே சதுரகிரி செல்ல வேண்டும் என்று அவர் சொன்னார் . அப்படி அவர் சொல்லவும் எனக்கு சரி அங்கு போய்விட்டு போகலாம் என்று தோன்றியது.

உடனே அதற்கு உண்டான வழியயை கேட்டேன் சொனார் . நானும் அவ்வழியே சென்று மாவூத்து வைசென்று அடைந்தேன் . ஆஅக என்ன அழகு கோவில் இருக்கும் இடம் மிகவும் ரம்மியமான சூழ்நிலை அடாடா பெருமாள் மட்டைக்கு செல்லும் பாதையின் அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது . கோவிலின் எதிரே மிக பெரிய திருக்குளம் உள்ளது மக்கள் அதில் குளித்து விட்டு இறைவனை தரிசனம் செய்கிண்டறனர் .

நானும் அக்குளத்தில் குளித்தேன் அப்பொழுது அக்குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம்ம் என்னை சூழ்ந்து கொண்டு கடித்தன குலத்தின் நீரோ மிகவும் ஜில் என்று இருந்தது . நீராடி விட்டு இறைவனை தரிசனம் செய்தேன் . உதயகிரி நாதர் மிகவும் அழகு . அவரின் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் உக்கார்ந்து இருந்தேன் . அப்பொழு பக்கத்தில் ஒரு சாமியார் அய்யா தர்மம் என்று தனது திருவோடு நீட்டினர் . தர்மம் பண்ணிவிட்டு அய்யா அருகில் அமருங்கள் தங்களிடம் சில சந்தேகம் கேட்க்க வேண்டும் என்று சொன்னேன் ,.
அவரும் அமைதியாக சொல்லப்பா என்ன வேண்டும் என்று கேட்டார் அய்யா ஆனந மதுரையிலிருந்து வருகிறேன் . அதலால் எனக்கு இங்கு பெருமாள் மட்டைக்கு செல்லும் வழி தெரியவில்லை கொஞ்சம் சொல்ல முடியுமா என்றேன்


சொல்கிறேன் ஆனால் அங்கி தனியாக செல்ல முயற்சிக்காதே என்று ஆரமதிலே எச்சரிகையுடன் ஆரம்பித்தார் . இங்கு இருந்து மூன்று வழிகள் உள்ளன அப்பா ,
அவைகளில் மவூத்து கோவில் பக்கத்தில் மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் வழியில் யானை கால கூட்டம் அதிகம் இருக்கும் . இருந்தாலும் கைடுடன் சென்றால் பிரச்சினை இல்லை யானை இருந்தால் அவர்களுக்கு தெரியும் உடனே பாதுகாப்ப கூட்டி கொண்டு வந்து விடுவார்கள் . என்று சொன்னார் . பெருமாள் மட்டைக்கு நேர் எதிரே தெரியும் மலை மேல் ஏறினாய் என்றால் ஒரு மணி நேரதில் நே அங்கு அடைத்து விடலாம் . புரட்டாசி சனிக்கிழமை மட்டும் தன் அங்கு மிகவும் பிரபலம் . புரட்டாசி மாதம் வரும் சனிகிலமைகளைல் அங்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்று சொன்னார் . சரி அய்யா பெருமாள் எப்படி இந்த மழைக்கு வந்தார் என்ன விவரம் என்று கேட்டேன் . அவர் சொன்னார் பெருமாள் வேறு சிவன் வேறு என்று யாரடா சொன்னது . அனைவரும் ஒன்றே ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று சொன்னார் எனக்கு சரியான சவுக்கடி கொடுத்து போல் இருந்தது . உண்மைதான் என்று உணர்ந்தேன் .


அப்புறம் அவராகவே ஆரம்பித்தார் ப்ருமால் மட்டைக்கு சென்றால் அங்கு இருக்கும் பெருமாள் வணங்கி விட்டு இபொழுது யாரும் சும்மா வருவதில்லை . சில கிராமத்து ஆட்கள் அங்கு மது கொண்டு சென்று அருந்தி விட்டு ஆடு போன்ற ஜீவா ராசிகளை கொன்று அதை பெருமாளுக்கு படைஇக்கிறார்கள் . பெருமாள் எந்த காலத்தில் ஆடு கோழி சாபிடார் அய்யா .

கலி முத்தி விட்டது என்றார் . சரி விசயதிருக்கு வருவோ பெருமாள் மட்டையிலிருந்து அப்படியே மூன்று மணி நேரம் மலை வழியாக சென்றால் சதுரகிரியை அடைந்து விடலாம் என்று சொன்னார் . நான் ஆச்சரியப்பட்டேன் ஆமாம் அப்பா அது கொஞ்சம் காட்டுக்குள் கஷ்டமான வழிப்பாதை என்று வேறு சொன்னார் .

சரி என்று நான் கிளம்புறேன் என்று அவரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினேன் . அவரும் பாத்து போப்பா என்று வழியனுப்பி வைத்தார் .


நான் திரும்பவும் வந்தவழியே வந்து மகாராஜபுரம் என்ற இடத்தை அடைந்தேன் . அங்கிருந்து தானிபாரைக்கு சற்று சுருக்கமான வழி உள்ளது அவ்வழியே சென்றேன் பதினைந்து நிமிடங்களில் தானிபாரை அடிவாரத்தில் இருக்கும் கஞ்சி மடத்தை அடைந்தேன் . மடத்தின் உள்ளே சென்று எனது வாகனத்தை நிறுத்தி விட்டு வந்தேன் .

மடத்தின் நிர்வாகி ராமசாமி அய்யா என்னை வரவேற்றார் வாங்க பிரபாகர் நலமா அம்மா நலமா என்று விசாரித்தார் . அப்புறம் நான் கொண்டு வந்த அன்னதான பொருள்களை அய்யா விடம் கொடுத்து விட்டு அய்யா நான் பிரதோச பூஜையை முடித்து விட்டு இன்று இரவே கீழே இறங்கிவிடுவேன் .

என்று சொன்னேன் அதற்க்கு அவர் தம்பி வேணம் காடு பன்றிகள் நிறைய இபோழு திரிகின்றன இரவில் தங்கள் இறங்க வேண்டாம் . பகலில் இறங்குங்கள் அதன் நல்லது என்றார் .

என்னால் அவரது பேச்சை தட்ட முடியவில்லை காரணம் வயது முதிர்ந்தவர் . அந்த காடுக்குலே பழக்க பட்டவர் அவர் சொன்ன சரியாக இருக்கும் . ஆதாலால் காலையில் கீழே இறங்கலாம் என்று இருந்தேன் .


தானிபாரை நுழைவு வழியாகா உள்ளே செல்ல ஆரம்பித்தேன் . ஆகா எத்துனை தடவை வந்தாலும் அபோழுதன் புதிதாக அங்கு வருவது போல் எனக்கு தோன்றியது . தானிபாரை விநாயகரை கும்பிட்டு விட்டு ராஜயோககாளியமனை தரிசிதி விட்டு பின்னர் தனிபாரை பேசி அம்மன் கருப்புசாமியை தரிசிக்க சென்றேன் .

அங்கு இருக்கும் பூசாரி என்னை கண்டு கொண்டார் . வாங்க தம்பி நீங்கதானா தூரத்தில் இருந்து பாக்கும் பொழுது எனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொல்லி விட்டு பின்னர் நலம் விசாரித்தார் . நலம் என்று சொல்லி விட்டு பூஜை பொருளை கையில் கொடுத்தேன் .

அதை வங்கி கொண்டவர் என்ன தம்பி சனிக்கிழமை சனிபெயசிகுதன் வந்து சென்றீர்கள் அதற்குள்ளாக திரும்பவும் வியாயலகிழமை வந்து உள்ளீர்களே ஏதும் விஷயமா என்று கேட்டார் . நான் புண் முறுவல் பூத்து கொண்டே இல்லை அய்யா குரு பிரதோஷம் இன்றைக்கு அதை பார்கவே அஆவளுடன் வந்தேன் என்று சொன்னே .

அவர் அப்படியா என்று வினவி கொண்டே பூஜையை ஆரம்பித்தார் . பூஜையை முடித்து கொண்டு அதற்கும் கொஞ்சம் பக்கத்தி புளிய மரத்தடியில் இரு முனிவர்களின் ஜீவா சமாதி உள்ளது . அவர்கள் பெயர் விவரம் என்னால் அபொழுது இருந்த அவசரத்தில் என்னால் அறிய முடியவில்லை பிறிதொரு சந்தர்பத்தில் கட்டாயம் நான் அதை அன்பர்களுக்கு தெரிவிக்கிறேன் .


அங்கேயும் சென்று தரிசனம் செய்து விட்டு மலை யை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் . குதிரை ஊற்றை அடைந்தேன் . அங்கு கை கால் அலம்பி கொண்டு மீண்டும் மேல நடக்க ஆரம்பித்தேன் . இரண்டு கிலோ மீடர் தொலைவு நடந்து அதிரிமகாரிஷி ஊற்றைஅடைந்தேன் . அங்கு குடி நீர் அருந்தி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தேன் சங்கலி பாறையை கடந்தவுடன் மெட்ராஸ் இல் இருந்து மைலாபூர் நண்பர் ஒருவர் அறிமுகம் ஆனார் அவருடன் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி நண்பர்ரும் அறிமுகம் கிடைத்தது . நான் அவர்களுடன் பேசி கொண்டே நடந்தேன் . முறையே அவர்கள் பெயர் ஸ்ரீநிவாசன் -மைலாபூர்

பிரதீப் -டுடிகோரின் ஐயப்பன்-கன்னியாகுமரி இவர்களுடன் பேசி கொண்டே நடந்தேன் . மூவரும் பேசி கொண்டே பசுமிதி பாறையை

அது பச்சை மாலை தானிபாறை வழியாக காமதேனு பசு அவ்வழியாக கூட்டி சென்றதா சொல்வார்கள் . இறைவனை காண .


காராம் பசுதடம் தாண்டியவுடன் கோரக்கர் குகையை அடைந்தூம் . நாங்கள் நால்வரும் அங்கிருந்த சுக்கு காபி கடையில் அமர்ந்து சுக்கு காப்பி பருகிநூம் . பின் கோரக்கர் குகைக்கு செல்லும் பாதையில் கீழே இறங்கிநூம் . நான் , பிரதீப் மற்றும் ஐயப்பன் எல்லாம் இறங்கிவிட்டோம் , ஆனால் ஸ்ரீநிவாசன் சார் மட்டும் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தார் . யாரும் எதிர்பார்க்கவில்லை அவர் ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு தாவி இரங்கும் பொழுது தவறி விட்டார்
முட்டியில் நல்ல அடி அவர்க்கு இருந்தாலும் சமாளித்து கொண்டு இரங்கி விட்டார்


எண்கள் மூவருக்கு அவர் விழுந்தும் தூக்கி வாரி போட்டு விட்டது (
.ன் என்றால் கை கால் அடி பட்டு விட்டால் யாராக இருந்தாலும் அவர்களை கீழே கொண்டு செல்வது சிரமம் . சுமை தூகிகள் வரவழைத்து தன் தூக்க முடியும் . அது அந்த வன பகுதிக்குள் அவ்வழு சரியாக செல் போன் வொர்க் ஆகாது . அப்படியே ஆனாலும் அவர்க வர குறைந்த பட்சம் மூன்று மணிநேஅரம் பிடிக்கும் .)

நான் அவரை பல முறை விசாரித்தேன் . சார் அடி ஒன்றும் படவில்லையே காலை தநீரில் நன்றாக கழுவுங்கள் என்று காலை பிடித்து பார்த்தேன் ஒன்றும் வலி இல்லை பிரபா என்று சொல்லி விட்டார் . சரி என்று கோரக்கர் தரிசன முடித்து கொண்டு பதஞ்சசலி முனிவரி சீடர்கள் லிங்கம் வைத்து வழிபட்ட குகை ஒன்று உள்ளது . அதையும் பார்த்து விட்டு செல்லலாம் என்றேன் . மூவரில் இருவர் ஏற்கனவே வந்து இருக்கின்றனர் . அப்டிய அப்படி ஒருகுகை இருப்பதாய் நீங்கள் சொல்லித்தான் இன்று எனக்கு தெரியும் என்றனர் அந்த இருவரும் கோரசாக

சரி என்று மூவரையும் அழைத்து கொண்டு நான் அவர்களை அக்குகை இருக்கும் இடத்திருக்கு அழைத்து சென்றேன் . மூவரில் ஒருவருக்கும் நீச்சல் தெரியாதாம் .

ஆனால் அக்குகை இருக்கும் இடத்திருக்கு நேர் கீழே பாத்து அடி ஆழ சுனை ஒன்று உள்ளது . பக்தர்கள் நியர பேர் அதில் நீராடி விட்டு லிங்கத்தை தரிசனம் செய்வர் .

அது செலும் வழியும் மரத்தின் வேறை பிடித்து கொண்டு தொங்கி கொண்டே அக்குகையை அடைய வேண்டும்
மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நான் தயங்கினேன்
ஆனால் ஸ்ரீநிவாசன் சார் மட்டும் தைரியமாக பிரபா ப்ளீஸ் நான் கட்டாயம் வந்து பாக்க வேண்டும்
எது ஆனாலும் சரி நான் பார்த்து விட்டுதான் வருவேன்
நான் ஒரு முடிவூடதன் இங்கு வந்து இருக்கேன் . என்று இரண்டு பொருள் பட சொன்னார் .
அவர் சொல்லவும் என்னால் மறுக்க முடியவில்லை . சரி வாருங்கள் என்று நான் அவரையும் அழைத்து கொண்டு மரத்தின் வேரை பிடித்தி பாறையின் மேல் காலை ஊன்றி மெதுவாக மேலே சென்றேன் . ஸ்ரீனிவாசனும் தைரியமாகத்தான் பிடித்து வந்தார் . சரி அவர் நன்றாக வருகிறார் என்று நான் அங்குள்ள சுனை நீரி குதித்தேன் . நீராடி விட்டு மேலே வரலாம் என்ற பொழுது தான் அது நடந்தது


வேரை பிடித்து கொண்டு இறங்கிய ஸ்ரீநிவாசன் சார் பாறையை பிடிக்க அது வழுக்கு பாரையதாளால் அவர் பிடி நழுவி கீழே விழுந்தால் எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியவில்லை . பிரதீப் ஐயப்பன் எல்லோரும் அக்கரையில் இருந்து பதறினார்கள் . நல்ல வேலை ஆழம் குறைவான இடத்தில் அவர் விழுந்தார் . ஆதலால் அவர் பிழைத்து கொண்டார் . ஆனாலும் மனிதர் தைரியத்தை கைவிடவில்லை பரவாயில்லை பிரபா நான் கட்டயாம் குகையையும் அங்கு உள்ள இறைவனையும் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தார் . அவரின் அன்புள்ள் பக்திக்கு இறைவன் இறங்கினார் . அவரும் அந்த வழுக்கு பாறையில் மேல் ஏறி இறைவனை கண்குளிர தரிசனம் செய்தார் .


பின் மெதுவாக கீழே இறங்கி திரும்பவும் மகாலிங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பிதூம் . பேசி கொண்டே நடந்தூம் ரெட்டை லிங்கம் நாவல் ஊற்று மற்றும் பிளவடியயி தரிசனம் செய்து . பிலாவடிக்கும் மேலே நீராடும் இடத்தை அடைந்தோம் . அங்கு நீராடி விட்டு சுந்தரமகாலிங்கம் சந்நிதியை அடைந்தோம் . அங்கு இறைவனின் அற்புத தரிசனம் கண்டோம் .

இறைவனின் தரிசனத்தை காணும் பொழுது மலை ஏறி வந்த களைப்பு உடல் வலி என்று எதுவும் தெரியவில்லை . தரிசனத்தை முடித்து கொண்டு ஸ்ரீநிவாசன் சார் பிரபா எனக்கு ராஜா மடம் நன்றாக தெரியும் அங்கு தங்கலாமே என்று சொன்னார் . நாங்கள் மூவரும் சரி என்று சொன்னூம் அங்கு பொய்எங்களது பொருள் உடமைகளை வைதூம் . அங்கு ராஜா மடத்தார் நன்றாக உபசரித்து உணவு இட்டனர் . உணவு அருந்திவிட்டு சார் பிரதோச பூஜைக்கு நேரம் ஆகி விட்டது நாம் மேல சந்தனமகாலிங்கம் பாக்கலாம் . ஆதலால் வாருங்கள் போகலாம் . என்று சொன்னேன் ஸ்ரீநிவாசன் சார் ஐயப்பன் பிரதீப் அனைவரும் சரி என்று சொன்னார்கள் . ஸ்ரீநிவாசன் ஸ்ரீ மடத்ய்தின் நிர்வாகியிடம் விவரம் கூறிவிட்டு உடமைகளை எடுத்து கொண்டு சந்தன மகாலிங்கம் பார்க்க கிளம்பினோம் . பேசி கொண்டே ஏறினோம் . சந்தனமகளிங்கத்தை அடைந்து அங்கும் தரிசனம் முடித்து விட்டு எனக்கு தற்சமயம் அறிமுகம் ஆனா பௌர்ணமி மடத்திற்கு அவர்களை அழைத்து சென்றேன் . அங்கு சிவசங்கு அய்யா இருந்தார் இன்முகத்துடன் வாங்க பிரபா நலமா என்று விசாரித்தார் . நலம் என்று சொன்னேன் . நண்பர்களையும் அறிமுக படுத்தி வைத்தேன் . பின்னர் மடத்தினுள் என்னக்ளுது உடமைகளை வைத்து விட்டு பிரதோச பூஜைக்கு கிளம்பிநூம் . மீண்டும் சந்தன மகாளினகத்தை அடைந்தோம் . அங்கு பிரதோச பூஜைக்கு எல்லாம் தயாரகி கொண்டிருந்தது நாங்கள் அமரவும் பூஜையை ஆரம்பித்தார்கள் .


நண்பர்களே பெருமைக்காகவோ இல்லை ஆர்வ முகுதியலூ சொல்ல வில்லை . பிரதோச வழி பாடு பண்ண வேண்டும் என்றால் ஆகா அது சதுரகிரி என்னும் புண்ணிய தளம் தான் . எம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் அடடா என்ன அழகு இப்பிறவியின் பயனை நான் அடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த ரம்மியாமான மலை சூழலில் அமைதியாக நடை பெற்ற அந்த ப்ரடோசத்தின் அருமையை நான் எண்ணங் வென்று சொல்ல அதை பார்த்து உணர மட்டும் தான் முடயும் . அதை சொன்னால் புரியாது . பின் தேவாரம் திருவாசம் படித்தோம் .

என்ன ஒரு தரிசனம் நாங்கள் நால்வரும் பாக்கியம் செய்தவர்கள் . அதிலும் குறிப்பாக பிரதீப் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் நமது ஹிந்து மத நம்பிக்கைகளில் மூழ்கி அவரும் பிரதோச வழிபாடு செய்தது . மிக சிறப்புபின் இரவு உணவு முடித்து அனைவரும் உறங்க சென்றோம் . திரும்ப அதிகாலை மூன்று மணிக்கு சந்தன மகாலிங்கம் பூஜை நடைபெறும் என்று சொன்னார்கள் . நான் எனது செல் போனில் அலாரம் வைத்து விட்டு உறங்கினேன் . அனைவரும் உறங்கினோம் . அடுத்தது தவசி பாறை பயணம் அடுத்த இடுகையில்

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

http://maps.google.com/maps/ms?hl=en&ptab=0&ie=UTF8&oe=UTF8&msa=0&msid=109609011494968496562.000454f1b016c9233cf4b&ll=9.753724,77.634888&spn=0.326855,0.4422&t=h&z=11

வருத்தப்படாத வாலிபன். சொன்னது…

நல்ல இடுகை நண்பரே . அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

prabakar.l.n சொன்னது…

nan varuthapadatha vaalipan nandri thankaludaiya pinnottathiruku , adutha idukaiyum veli vanthullathu paarukalen

ஜெட்லி சொன்னது…

நல்ல கட்டுரை ஜி....
நானும் ஒரு நாள் சதுரகிரி போவேன்...

prabakar.l.n சொன்னது…

நண்பர் வருத்தப்படாத வாலிபன் அவர்களுக்கு தங்களுடைய மெயில் முகவரியை எனக்கு அளித்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதில் அளிக்க சவ்கரியமாக இருக்கும் . நன்றி . தங்களுக்காக அடுத்த இடுகை கூடிய விரைவில் வெளியிடுகிறேன் . நன்றி நண்பரே .

prabakar.l.n சொன்னது…

நண்பர் ஜெட்லீ அவர்களே . போவேன் என்று சொல்ல வேண்டம் . நான் இன்று வருகிறேன் . தாங்கள் எனக்கு உதவ முடியமா என்று கேளுங்கள் காத்து இருக்கிறேன் சதுரகிரி பக்த அன்பர்களுக்கு உதவ .www.santhanamahalingam.blogspot.com

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

சுவாரசியமான பதிவு.

உங்கள் பணி சிறக்கட்டும்

prabakar.l.n சொன்னது…

nandri swamiji varugaiku nandri

MGRamalingam சொன்னது…

Dear Mr:prabakar,
Thanks a lot for your detailed explanation about
sathuragiri.I have noted down your
phone numbers.When sathuragiriyar
calls me to have a darshan of him,I will contact you.Please don't
change your telephone numbers.Please send your mail id.
I pray the Al-Mighty to bestow His blessings upon you to render devotinal service to siva- devotees.Please add about siddhars.
I am fond of having siddhars darshan.For this, chathuragiriyar should pave the way for me.
ohm sundaramahalingaya namaha.
Thanking you,
Yours,
MG ramalingam
mgramalingam17@yahoo.co.in.