நான் உடன் அருள் ஜோதி
நான் வலது சதீஎஷ் இடது அருள் அவரோட அண்ணா
எனது நண்பர் திருப்பூர் சங்கர் அவர்கள் என்னிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு வாருங்கள் , தலைவரே வீக் எண்டு தானே சதுரகிரி போய் வரலாம் என்று சொன்னார் நானும் சரி என்று தலை ஆட்டி வைத்தேன் ,.
அவரும் வெள்ளி கிழமை இரவுஒன்பது மணிக்கு மேல் தான் புற படுவேன் , . எனக்கு எனது ஆய்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஆய்வு பணி உள்ளது , முடிந்தால் எனது காரில் வந்து விடுகிறேன் இல்லை என்றால் பஸ் பிடித்து வருகிறேன் நாம் மதுரையில் சந்திக்கலாம் என்று சொன்னார் ,.
நானும் சரி என்று இருந்தேன் திடீர்னு எனது நண்பர் கரூர் இல் இருந்து சதீஷ் அவர்கள் நானும் வருகிறேன் சங்கர் கிட்ட நான் பேசிட்டேன் ,. என்று சொன்னார் ,.
சரி வரட்டும் அவர்கள் வர நடு நிஷிக்கு மேல் ஆகிவிடும் நாம் அதற்குள் ஒரு தூக்கம் போட்டு விடாலாம் என்று நினைத்து படுத்தேன் ,.
இரவு ஒரு மணி சங்கரிடம் இருந்து போன் வந்தது தலைவரே நான் இரவு சாபிட முடியவில்லை எனக்கு பசிக்கிறது எனக்கு எதாவது ,. சிறிது உணவு மட்டும் ரெடி பண்ணுங்கள் என்று சொன்னார் ,.
அம்மா வேறு இல்லை நான் சரி என்று நாமலே சமையல் செய்து விடலாம் என்று நள மகாராஜா போல மாறி சமையல் செய்ய ஆரம்பித்தேன் ,. என்னவோ என்னால் முடிந்ததை செய்து வைத்தேன் ,.
ஒரு வழியாக நான் சமையலை முடிக்கவும் , சதீஷ் சங்கர் வந்து சேரவும் சரியாக இருந்தது ,.
சங்கர் சதீஷ் நான் எல்லாருமே அதிகாலை மூன்று மணிக்கு உணவு அருந்தினோம் ,. என்னுடைய வாழ் நாளில் அதிகாலை அந்நேரத்தில் உணவு அருந்தியது அதுதான் முதல் தடவை ,.
எனக்கு அதும் கொஞ்சம் பிடித்திருந்தது அதிகாலை உணவு சாபிடுவது ஒரு ரசனைதான் ,.
சரி எல்லோரும் கிளம்பினோம் சரியாக ஆறு முப்பது மணிக்கு தானிபாரை அடிவாரத்தை அடைந்தோம் ,. விறு விறு பாக மலை ஏறஆரம்பித்தோம் ,. நாங்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே அத்தி ஊற்று பகுதியை அடைத்தோம் அங்கு நாங்கள் கண்ட காட்சி அப்டியே திகைக்க வைத்தது .,
இப்பொழுது சதுரகிரியில் மழை காலம் இல்லை ,. ஆதலால் அங்காங்கே வரும் ஊற்றுகளில் தான் மக்கள் மற்றும் சுமை தூக்குவோர்கள் குடி நீர் எடுப்பார்கள் ,. அதில் முக்கியமானவை அத்தி ஊற்று அப்புறம் நாவல் ஊற்று ,. மலை ஏறும் நிறைய பேர் அங்கு உள்ள நீரை தான குடி நீராக பயன் படுத்துகிறார்கள் .
அங்கு பாண்டி சேரியை யை சார்த்ந்த பக்த அன்பர்கள் அந்த ஊற்று நாறடித்து விட்டார்கள் ,. அதில் மலம் கழித்து விட்டு கால் கழுவது, குளிப்பது பல் தேய்த்து எச்சில் ஐ, அதில் துப்புவது கடவுளே உண்மையில் என்னால் பொருது கொள்ள முடிய வில்லை ,.
இந்த பாழாய் போன மீடியாக்கள் ஒவ்வரு இடத்தையும் காட்டும் ப்போது அதை இங்கெல்லாம் அசுத்த படுத்தாதீர்கள் என்று சொன்னால் சிலருக்கு காவது அது சென்று அடையும் அதையெல்லாம் விட்டு விட்டு லாப நோக்கத்தில் எதையாவது சொல்லி விடுகிறார்கள்,.
மக்களும் அங்கு எப்டி செல்ல வேண்டும் அங்கு இதல்லாம் செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருபதைஎல்லாம் அசுத்த படுத்தி முனிவர்களின் ரிஷிகளின் சாபதைதான் வாங்கி கொண்டு செல்கிறார்கள் ,.
நானும் சென்று தன்மையாக அய்யா இது குளிக்கும் இடமோ இல்லை கால் அலம்பும் இடமோ இல்லை இது வெயில் காலங்களில் பக்தர்கள் தாகம் தீர்க்கும் நீர் ஊற்று அய்யா அதுவும் மகத்துவம் வாய்ந்த அத்தி மரத்தின் அடியில் தோன்றும் மருத்துவ குணம் உள்ள நீர் ஊற்று
தயவு செய்து வெளியில் வாருங்கள் அதை பாழ் படுத்த வேணாமே என்று பண்புடன் கூறினேன் ,.
அனால் அவர்கள் இங்கு அப்டி ஒன்றும் போர்ட் ஏதும் வைக்க வில்லை ,. என்று அவர் கல் பாட்டுக்கு குளித்து கொண்டு இருந்தார்கள் ,.
சரி என்று நாங்கள் நொந்து கொண்டே மலை மேல ஏற ஆரம்பித்தோம் ,. ஐந்து படிகள் ஏறி இருப்போம் ,
'" யோவ் அறிவு இல்லையா உங்களுக்கு என்று ஒரு குரல் நங்கள் திடுக்கிட்டு திரும்பினோம் "
எங்களுக்கு பினால் வந்து கொண்டிந்த சுமை தூக்கும் தொழிலாளி அவருடைய குரல் தான் அது ஏன்யா நீங்க எல்லாம் சாமி கும்பிட வந்திங்களா இல்லை பெருமைக்கு சுற்றி பாக்க வந்திங்களா ? என்று, வினவினர் .,
அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது அவர் ஊற்று நீரில் குளித்து கொண்டிருந்தவர்களை பார்த்து காரமா வார்த்தையால் விளாசி கொண்டிருந்தார் ,.
ஏன்யா நாங்க சுமை தூக்கி களைச்சி போய் வரோம் ,. எங்களுக்கு தண்ணி குடிக்க இந்த ஊற்று நீர்தான் இதை போய் இப்படி அசுத்த படுத்துகிறீர்களே ,.
அறிவு இல்லையா என்று கேட்டார் அதற்கு ,.
அந்த அன்பர்கள் போர்ட் இல்லாததால் தெரியாமல் குளித்து விட்டோம் என்று சொல்லி கொண்டிருந்தார் , .
அதற்கு சுமை தூக்கும் பெரியவர் ஐந்து வயது குழந்தைக்கு தெரியவில்லை என்று சொல்லுங்கள் ஒத்துகொள்கிறேன் ,. ஆனால் நன்றாக படித்து ஐம்பது வயது ஆனா உங்களுக்கு குடி நீர் ஓடை என்பது தெரிய வில்லையா ,.
ஏன்யா பொய் சொல்லுகிறீர்கள் ஆண்டவன் சந்நிதனதிருக்கு வரும் நீங்க நல்ல வரம் வாங்கி போங்கள் என்று விளாசி கொண்டிருந்தார் ,.
நாங்கள் மௌனமாக சிறிது கொண்டே மேலே சென்றோம் ,.
அருமை நண்பர் திருப்பூர் சங்கர் சொனார் பாருங்கள் மென்மையாக சொல்லி கேட்காதவர்கள் ,. கோவிலுக்கு வந்து கேட்க கூடாததை எல்லாம் கேட்டு செல்கிறார்கள் ,.. என்று கூறினார் ,.
சங்கிலி பாறை கொஞ்சம் ஏறினோம் சுமை கொண்டு சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் சுமை அழுத்தம் தாங்க முடியமால் திணறினார் ,.
நான் சங்கரிடம் எங்களுடைய பொருள்களை கொடுத்து விட்டு ,. விடுங்க அக்கா நான் கொஞ்ச நேரம் தூக்கி கொண்டு வந்து கொடுக்கிறேன் ,. என்று சொன்னேன் ,.
பக்கத்தில் இருந்த சுமை தூக்கும் இன்னொரு அன்பரும் ஆமாம் தம்பி கொஞ்சம் உதவி செய்ங்க இன்னைக்கு அந்த பெண் மணிக்கு உடம்புக்கு முடிய வில்லை என்று சொனார் ,.
சரி என்று நானும் தலையில் வாங்கி வைத்து விட்டேன் ,. அனால் சுமை அளவு முப்பது கிலோ விருக்கும் ,. கடவுளே என்னால ரெண்டு கிலோ மீட்டார் தூரம் தான் கொண்டு வர முடிந்தது ,. அதற்குள் அந்த பெண்மணியே போதும் தம்பி இதற்குள் மேல் பாதை கடினம் இல்லை நான் எடுத்து செல்கிறேன் என்று சொனார் .
அப்பத்தான் எனக்கு உயிரே வந்தது காரணம் என்னாதான் நான் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்னாலும் சுமை தூக்குவது என்பது எனக்கு முதல் தடவை ,.
இறைவ உண்மையில் சுமை தூக்கும் தொழிலாளி இன் வியர்வை ஒன்றும் ஒரு பொற்காசுகள்
உண்மையிலே ரொம்ப கழ்டம் சுமை தூக்குவது என்பது அதிலையும் என்பது டிகிரி உச்சி கோணத்தில் அந்த சுமையை தூக்கி கொண்டு மேலே ஏறுவது என்பது சாதார காரியம் இல்லை
அந்த பெரியவர் அவர்களை கடிந்தி கொண்டது கூட எனக்கு நியாமாக பட்டது ,.
ஒரு வழியாக நாவல் ஊற்று அடைந்து அங்குள்ள தண்ணீரை பருகினோம் ,.
நாவல் ஊற்று தாண்டி செல்லும் பொழுது யானை கூட்டங்கள் படிக்கு ஒன்று வீதம் மலம் கழித்து வைத்திருந்தது ,. கிராம வழக்கில் யானை லத்தி போடிருகிறது என்று சொல்வார்கள் ,. எங்களுக்கு கொஞ்சம் திகில் அடிக்க ஆரம்பித்தது ,. காரணம் ஒன்று இரண்டல்ல குறைந்த பட்சம் ஏழு அல்லது எட்டு யானை கல ஒன்றாக வந்திருக்க வேண்டும் ,.
நாவல் ஊற்றுகளில் இருந்து பிலாவடி செல்லுவரை பாதையின் இருபுறங்களில் மரங்களின் கிளைகளை ஒடித்தும் புல்களை பியதும் எரிந்து விட்டு செண்டிகிறது ,. நங்கள் சென்ற நேரதிருக்கு குறைந்த பட்சம்ஐந்து மணி நேரம் முன்னத அவைகள் வந்து சென்றிக்க கூடும் ,.ஒரு சில இடங்களில் யானை லத்திகள் சூடாக இருந்தது ,.
அப்பொழுது எங்களுடன் பட்டீஎச்வரன் கோவில் லை (கோயம்புத்தூர்) சேர்ந்த இரு பக்த அன்பர்கள் பேச்சு துணைக்கு இணைந்து கொண்டார்கள் ,. எல்லூம் பேசி கொண்டே நடந்தோம் ,.
அதில் பட்டிஸ்வரன் கோவில் அன்பர்களில் ஒருவர் இரவு தண்ணி அடித் விட்டு மலை ஏறி இருப்பர் போல நாவல் ஊற்று தாண்டவும் அவர் குடலே வெளி வரும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டிருந்தார் ,.
நான் சொன்னேன் கவலை படாதிங்க உங்க குடல் உடல் இரண்டையுமே இறைவன் சுத்த படுத்தி உள்ளார் என்று கூறினேன் .,
எல்லோரும் சிரித்து கொண்டே மேலே ஏறினார் ,.
ஒரு வழியாக பிளவடியை அடைந்த நாங்கள் அங்கு உடனே கிளம்பி சுந்தர மகாலிங்கம் சந்நிதியை அடைந்தோம் ,.
குளித்து விட்டு சாமி தரிசனம் செய்தோம் மணி பனிரெண்டை நெருங்கியது .
அப்பொழுது கிழே பார்த்த பாண்டி சேரி அன்பர்கள் மேலே தவசி போக வழி தெரியாமல் திணறி கொண்டிருந்தார்கள் ,.
சதீஷ் என்னை கூபிடர் பிரபா நீங்க போயி வழி காட்டி விட்டு வாங்க வழி காட்டி கூட யாருமே இல்லை , . என்று கூறினார் ,.
ஆனால் சங்கர் சொன்னார் தல நாம இன்று இரவே திருப்பூர் போக வேண்டும் ,. வேணாம் வாங்க கேளே இறங்கலாம் என்று கூறினார் ,.
சரி என்று நான் ஒரு முடிவு செய்தேன் சங்கர் நீங்கள் மெதுவாக கீழே இறங்குங்கள் ,.
நான் இவர்களுக்கு வழி காட்டி விட்டு உங்களை பிடித்து விடுவேன் ,. என்று சொன்னேன் .
நான் பாண்டிச்சேரி குரூப் ஐ கூட்டி கொண்டு தவசி பெரிய மகாலிங்கம் காட்டி கூட்டி வர மணி சரியாக ஐந்து முப்பது ஆகி விட்டது ,.
நாங்கள் வரவும் கடைக்கார அம்மா தம்பி உங்களுடன் வந்த இரண்டு பெரும் உங்களை வர சொல்லி விட்டு கீழே சென்று விட்டார்கள் ,.
எனக்கு பகீர் என்றது காரணம் கையில் டார்ச் இல்லை ,. நான் சரி காட்டுக்குள் சுற்றும் நமக்கு எதுக்கு புது டிரஸ் நைட் டிரஸ் போடும் நு நான் நைட் டிரஸ் லையே சுற்றுஇ விட்டு வந்தேன் ,. சரி என்று வேகமா மாக முடிவு எடுத்தன் இருட்டுவதற்குள் எப்டியும் கீழே இரங்கி விடுவது என்று
ஒரு மணி நேரத்திற்குள் இறங்க வேண்டும் இல்லை என்றால் இருட்டி விடும்
பாண்டிச்சேரி அன்பர்களில்டம் விடை பெற்று கொண்டு வேகமா மாக கீழே இறங்கினோம் ,. நான் வேகமா கீழே இறங்க இன்னொரு காரணம் உண்டு காலையில் வரும் பொழுதுதான் யானை கூட்ட்டம் வந்து போனதிருக்கு அடையாளங்கள் இருந்தது ,. இருட்டில் யானை இருந்தால் கிட்டே செல்லும் வரை நமக்கு தெரியாது ,.
படு வேகமா கீழே இறங்கினேன் ,. வழுக்கு பாறை வந்த உடன் தஞ்சாவூர் அன்பர்களிட சங்கர் " பிரபா மேலே இருந்து வருவார் ., நீங்கள் அவரிடம் டார்ச் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி இருக்கார் .
அவர்களும் நான் வரும் வேகத்தை பார்த்து நீங்க பிரபாகர் தானே என்றனர் ,. நானும் ஆமாம் என்றேன் ,.
டார்ச் ஐ என்னிடம் கொடுத்து இந்தாருங்கள் என்றனர் ,. நான் வேண்டாம் நீங்கள் மேலே செல்கிறீர்கள் இருட்டிற்குள் என்ன செய்வீர்கள் ,. டார்ச் கையில் எடுத்து செல்லுங்கள் யானை கூட்டம் இருபது போல தெரிகிறது கவனமாக செல்லுங்கள் ,.
என்று கூறினேன் ,. அவர் கல் உடனே ஆகா நாங்கள் இதுதான் முதல் தடவை வருவது என்று கூறினார்கள் ,.
எனக்கு சிறிது கலக்கம் வழி ஏதும் மாறி விட கூடாதே என்று சரி நீங்கள் முன்னே செல்லுங்கள் ஏன் நண்பர் களிடம் சொல்லி விட்டு உங்களை நான் பிடித்து விடுகிறேன் ,. மெதுவாக மேலே ஏறுங்கள் என்று சொனேன் ,. நான் சொன்ன பொழுது மணி ஆறு பதினைந்து ,.
சரியாக பத்து நிமிடத்தில் நான் அடிவாரம் வந்து விட்டன் ,. சங்கரிடம் விஷயத்தை சொன்னேன் ,. சங்கர் முதலில் அதெல்லாம் வேணாம் தல நாம ஊருக்கு கிளம்பிலம் என்று சொன்னார் , நான் விடா பிடியாக இல்லை பாவமா இருக்கு சங்கர் புதிது என்று சொன்னார்கள் நான் மேலே விட்டு விட்டு அதிகாலை கிளம்பி வந்து விடுகிறேன் ,. என்று சொன்னேன் .
சரி போங்கள் என்று சங்கர் சொல்லி விட்டார் ஆனால் சதீஷ் மட்டும் முடியாது நீங்கள் வர வில்லை என்றால் நானும் உங்களுடன் மேலே வருவேன் ,. என்று சொன்னார் ,.
நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்து விட்டார் ,. சரி வாருங்கள் என்று சொல்லி அவரை அழைத்து கொண்டு நான் மலை ஏறும் பொழுது மணி ஏழு முப்பது
கையில் பெண் டார்ச் மட்டும் இருக்கு அதும் மலை மேலே போகும் வரை தாக்கு பிடிக்குமா என்று தெரிய வில்லை ,
அவர் மலை ஏறுவது புதிது அதும் ஒரே நாளில் இரண்டாவது நாளில் திரும்ப மீண்டும் ஏறுவது என்பது சிரமம் இருட்டிற்குள் அவரை அழைத்து செல நான் பட்ட பாடு
அவர் கொஞ்சம் உடல் பெருத்த வாகு ஆதலால் அவருடைய பின்னங்கால்களில் நரம்பு இழுத்து பிடித்து கொண்டது ,. அதுவும் சரியாக நாவல் ஊற்று க்கு மேல் ஏறும் பொழுது
அங்குதான் யானை தண்ணீர் குடிக்க வரும் ,. எனக்கு ஒன்னும் புரிய வில்லை ., இருட்டுக்குள் அவரை விட்டு விட்டு நான் மேலே சென்று யாரையும் கூடி கொண்டு வர முடியாது ,
நாங்களும் அங்கு ரொம்ப நேரம் இருக்க முடியாது ,. சரி என்று இறைவன் மேல பாரத்தை போட்டு விட்டு நரம்பு பிடித்த கால் உடனே அவரை யன் தோளில்தாங்கி கொண்டு
நான் மலை ஏறினேன் சில இடங்களில் திருவாசகம் பதிகங்களை பாடி கொண்டே சென்றேன் ,.
இருட்டிற்குள் ஒன்றும் புல படவில்லை பாதை வேறு கடினமாக உள்ளது ,.
வடிவேலு சொல்வது போல நேத்தைக்கு பாத்த விட இன்னைக்கு கொஞ்சம் பெரிசா தெரியிரானே என்று நினைத்து கொண்டே சதீஸ் ஐ சுமந்து கொண்டே சென்றேன் ,.
அதும் வனதுர்க்கை கோவிலுக்கு முன் எனக்கு கால் சுத்தமாக வர வில்லை என்று அலற ஆரம்பித்து விட்டார் , . அவரால் கால் வலி வே porukka mutiya வில்லை
எனக்கு என்ன செய்வது என்றுதெரிய வில்லை ,. ஒரு சின்ன வேலை செய்தேன் ,.
நம்மளுக்கு பின்னால் yethuvo வருவது போல உள்ளது சதீஷ் எனக்கு பயமஹா irukirathu ,. வாருங்கள் ஓடிவிடலாம் என்று சொன்னேன் ,. யானையோ கரடியோ தெரிய வில்லை வருவது நன்றாக தெரிகிறது சதீஷ் என்று சொன்னே ,.
அவ்வளுவுதான் மனுஷன் கால் வழியும் இல்லை கை வழியும் இல்லை பில வாடி வரை நடந்தார் பாக்கலாம் ,. நானே அசந்து விட்டேன் ,.
சரியாக ஒன்பது முப்பது பிலாவடி வந்ந்து சேந்து விட்டோம் ,. சரியாக இரண்டு மணி நேரத்தில் மேலே வந்து விட்டோம் ,.
மீதி இன்னொரு நாள் இடுகையில் இட்கிஎன் நேரம் போடாத வில்லை அன்பர்களே நிறைய வேலை உள்ளது மன்னியாவும்
Astrology யோகங்கள் ஒரு விளக்கம்!
1 வாரம் முன்பு