சதுரகிரியில் நிறைய நீரோடைகள் அப்புறம் ஊற்றுகள் உள்ளன. அவைகள், எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும் . மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோ மீடர் நடந்தால் முதலில் தென் படுவது மலைகளின் பள்ளத்தாக்குகளின் வழியாக வரும் நீரோடைதான் . மலை அடிவாரத்தில் வந்து விழும் நீரோடை குளிர் அல்லது மழை காலங்களில் தான் நீர் நன்றாக ஓடும் . ஆனால்
ஊற்றுகளில் ஆண்டு முழுவது தண்ணீர் இருக்கும்.
அது சில ஊற்றுகளில் தான் இருக்கும் . முதலில் தென்படுவது குதிரை ஊற்று அதை அடுத்து அத்தி ஊற்று அதற்கும் மேல போனால் கோரக்கர் சுனை . அதற்கும் மேலே போனால் நாவல் ஊற்று
அதற்கு மேல போனால் பிலாவடி கருப்பு கிட்ட தைல கிணறு மற்றும் ஊற்றுகள் உள்ளது . மேல சுவாமிக்கு அபிஷேகம் நீர் எடுக்கும் ஊற்றுகள் இரண்டு அவை . ஒன்று சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ள ஆகாய கங்கை.
இரண்டு, சுந்தர மகாலிங்கம் சந்நித்தியயை ஒட்டி வரு நீரோடை சந்திரகிரி தீர்த்தம் . இவை, இரண்டும் அபிஷேக தீர்த்தம். இவைகளில், குளிக்கவோ கைகால் அளம்பவோ இங்கு தடை செய்ய பட்டுள்ளது . பொதுவாக
ஊற்றுகள் எல்லாமே குடி நீர் ஆகா பயன் படுத்த படுகிறது
. மலை ஏறுபவர்கள் ஆங்காங்கே இந்த ஊற்று நீரை குடி நீராக பயன் படுத்தலாம் .
தயவுசெய்து அன்பர்கள் யாரும் ஊற்று நீரை தவறாக பயன் படுத்த வேண்டாம்
சில நண்பர்கள் கை கால் தெரியாமல் அலம்பி விடுகிறார்கள் . ஆதலால் மற்றவர்கள் அதை அறியாமல் குடி நீராக பயன்படுத்துவார்கள் ஆதலால் மக்கள் அதை தவிர்க்கவும்.
சதுர கிரியில் ஊஞ்சல் கருப்பு செல்லும் வழியில் குளிராட்டி தீர்த்தம் உள்ளது . அங்கு சென்று தீர்த்தத்தை கேன் களில் செல்வோரும் உண்டு . அப்புறம் சித்தர்கள் குறிபேட்டில் உள்ளது போல மஞ்சள் வேதி உதைகை நீர் போன்ற ஊற்றுகளும் உண்டு . அந்த மாதிரி மிக முக்கியமான ஊற்றுக்கள் உண்டு . என்று தான் என்னால் சொல்ல முடியும் . அது எங்கு உள்ளத்து என்று, என்னால் சொல்ல முடியாது .அதுமட்டும் இல்லை மழைக்காலங்களில் மலையின் மடிப்பு சரிவுகளிலிருந்து புதிது புதிதாக நீரோடைகள் தோன்றும் . எனது நண்பர் ஒருவர் சொன்னார் . நாம் நாவல் ஊற்று தாண்டியவுடன் அடுத்து வருவது வணதுர்கை அம்மன் சந்நிதி அது ஒரு மலையின் மடிப்பு சரிவில் உள்ளது . ஒரு தடவை நல்ல மழைகாலம் இவர் மழை பெய்தாலும் பரவால்லை என்று மலை ஏறி உள்ளார் . அப்பொழுது வணதுர்கை கோவில் இருக்கும் நீரோடையில் திடீரென்று மழை வெள்ளம் காட்டாறு போல பாய்ந்ததாம் . நண்பர் பயந்து போயி அங்கேயே இரவு முழுது தங்கி இருந்து விதித்த பின் மலை ஏறினாராம் . அவர் சொல்லவும் நமக்கு thikilaaka இருந்தது .