வியாழன், 24 செப்டம்பர், 2009

உதவி

அன்பர்கள் கணினி தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இந்த வலை பதிவை பலரின் பார்வையில் படுமாறு ஏற்பாடு செய்க நன்றி .

புதன், 23 செப்டம்பர், 2009

சதுரகிரியில் பெரிய மகாலிங்கம் செல்வது எப்படி ?

படத்தின் மேல கர்சரை வைத்து அழுத்துங்கள் படம் பெரியதாக தெரியும் . தவசி குகை அப்புறம் பெரிய மகாலிங்கம் புகைப்படம் இருக்கும் நன்றி தினமலர்
















பெரிய மகாலிங்கம் செல்லும் வழி மிகவும் குறுகலான பாதை . ஆனால் பக்தர்கள் செல்ல கூடியா அளவுக்கு இருக்கும் . பெரிய மகா லிங்கம் செல்லும் பொழுது யாருடைய துணையும் இல்லாமல் செல்வது மிகவும் தவறான செயல் ஆகும் வழி காட்டி இல்லாமல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறது ,. ஒரு மணி நேரம் மலை மேல் ஏறி செல்ல வேண்டும் . மலைக்கு செல்லும் வழி அனந்த வள்ளி அம்மன் கோவில் பின் புறம் செல்கிறது . அதில் சென்றால் இரண்டு நிமிடங்களில் பாதை இரண்டு பிரிவுகளாக செல்லும் ஒன்று தவசி குகை செல்லும் வழி . இன்னொன்று பெரிய மகாலிங்கம் செல்லும் வழி . நான் சொல்லும் வழியை பின் பற்றி அன்பர்கள் யாரும் மேலே செல்ல வேண்டாம் . ஒரு அடையாளத்துக்குத்தான் சொல்கிறேன் . பெரிய மகாலிங்கம் செல்லும் வழியில் இருந்து ஒரு மணி நேரம் மலை மேல் ஏறினால் பெரிய மகாலிங்கத்தை அடைந்து விடலாம் . இன்றும் பௌர்ணமி மற்றும் அமாவாசை பூஜைக்கு பெரிய மகாலிங்கத்தை தரிசிக்க சித்தர்கள் வருவதாக செய்தி . அடியேனுக்கு சித்தரை காணும் பாக்கியம் கிட்ட வில்லை இல்லை அவர் என்னுடன் வேறு ஏதுனும் ரூபத்தில் காட்சி அளித்தார்களா என்றும் தெரிய வில்லை . எது எப்படியோ நம்பிக்கை தான் வாழ்கை அதை நாம் மறந்து விட கூடாது .


பெரிய மகாலிங்கம் மிக பிரமாண்டமாக உள்ளார் . இறை நம்பிக்கை உள்ளவர்கல் பெரிய மகா லிங்கத்தை பார்த்த உடனே அதன் அழகில் மயங்கி விடுவர் . அப்பெரிய மகாலிங்கத்தை ஒரு பெரிய விருட்சத்தின் வேர் பிடித்து கொண்டு இருக்கிறது , அப்பெரிய மகாலிங்கத்தின் பினால் அவ்விருட்சத்தின் வேர் சிவபெருமானின் ஜடா முடி போல் பின்னி உள்ளது . என்னே இயற்கையின் அழகு காண கண் கோடி வேண்டு அன்பர்களே . சாதரணமாக அவ்வளவு பெரிய லிங்கத்த ஒரு மரத்தின் வேர் தாங்கி கொண்டு நிக்கிறது என்றால் அதை விட அதிசயம் என்ன வேண்டும் .

பெரிய மகாலிங்கத்துக்கு மகா சிவராத்திரி அன்றைக்கு நடு நிசி ஒரு மணிக்கு மேல் பூஜை நடை பெரும் . மகா சிவராத்திரி அன்று அந்த இருண்ட வன பகுதிக்குள் பகலில் செல்லவே பயமாய் இருக்கும் . அந்த வன பகுதிக்குள் மகா சிவராத்திரி அம்மாவாசை கு மு வரும் . அப்படிப்பட்ட காரிருள் சூழ்ந்த நிசப்தமான நடுநிசிஇல தான் பூஜை நடக்கும்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கட்டயாம் காண வேண்டிய பூஜை இது இரவு முழுது கண் விழித்து பூஜை செய்பவர்கள் சிவராத்திரி க்கு பெரிய மகாலிங்கத்திற்கு நடக்கும் பூஜை யை ஒரு தடவை கண்டாலே போதும். அவர் கல் பிறவா நிலை அடைந்து விடுவார்கள் அய்யா .

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சதுரகிரியின் வள்ளலார்மடம் அது கஞ்சி மடம்




வள்ளலார் பற்றி நான் சொல்ல தேவையில்லை அன்பர்கள் அறிந்து இருப்பார்கள் . தனி மனிதன் பசியை போக்குவதில் அவர் இறைவனை கண்டார் . நாமும் திக்கு தெரியாத அடர்ந்த வனத்திற்குள் வீற்றிருக்கும் எம்பெருமானை தரிசிக்கும் வரும் பக்தர்கள் யாரும் வெறும் வயிறுடன் போக கூடாது . இறையருளுடன் இறைவனால் கொடுக்க படும் உணவு அருளையும் பெற வேண்டும் . என்பதே இந்த கஞ்சி மடத்தின் நோக்கம் . மிகையாக நான் சொல்லல வில்லை . இதை நான் அங்கு இருந்து உணர்ந்து அதை சொல்கிறேன் . என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு தடவையும் எதாவது ஒரு தானிய வகைகள் வங்கி கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். அடியேன் செய்த உதவியை சொல்லி காட்ட வில்லை . பலரும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இதை வெளியிட்டுள்ளேன் .




அன்ன தானமே அருவாய் நிற்கும் என் அப்பனை காணும் இயல்பு வழி !" - ஸ்ரீ பிரும்ம ஜோதி "


சதுரகிரியில் ஒரு வள்ளலார் போன்ற மடம் உள்ளது . அது கஞ்சி மடம் . இது சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கும் சுந்தர மூர்த்தி சந்நிதிக்கும் நடுவில் உள்ள்ளது . கஞ்சி ம்டம்தின் முன் பெயர் பலகை இருக்கும் , அதை படித்து அன்பர்கள் புரிந்து கொள்ளலாம் . இன்னும் சில மடம் உள்ளது இதை மட்டும் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் மற்ற மடங்கள் குறிப்பிட்ட நாள்கள் இயங்குபவை .

இது வருடம் முழுதும் இயங்கும் . விழா காலம் அல்லாத காலங்களில் மலை ஏறும் அன்பர்கள் மலை அடிவாரத்தில் மடத்தின் கிளை உள்ளது அங்கு சென்று சொன்னால் நீங்கள் எத்துனை பேர் வந்து உள்ளீர்கள் என்று சொன்னால் அத்துணை அன்பர்களுக்கும் உணவு தயாரிக்க பட்டு அங்கு இருக்கும் . அன்பர்கள் மலை ஏறினவுடன் குளித்து தரிசனம் முடித்தவுடன் அடுத்து வயிற்று பசியை போக்க வேண்டும். madathiruku ponaal இன்முகத்துடன் வர வேற்று உபசரிப்பார்கள் .


இம்மடம் பலரின் உதவியில் இயங்குகிறது அங்கு வரும் அன்பர்கள் உணவு உண்டு பின் விருப்பம் இருந்தால் மடத்திற்கு ஏதேனும் பொருள் உதவி செய்யலாம். சரி அன்னதானதிருக்கு செய்யும் உதவி ஆண்டவனின் அருளை நேரில் பெறுவதை போல .


சரி என்ன என்ன அன்னதானதிருக்கு கொடுக்காலம் ,


1.அரிசி (என்ன வகை என்றாலும் கைப்பிடி அரிசியிலிருந்து மூட்டை அரிசி வரை அவர் அவர் விருப்பம் )
2,பலசரக்கு சாமான்கள் (மளிகை பொருள்கள் )
3.விவசாயம் செய்யும் அன்பர்கள் தங்களில் நிலங்களில் நன்கு அறுவடையாக நீங்கள் செயும் தானியங்கள் ஒரு படி மட்டும் இந்த அன்னதானதிருக்கு கொடுத்து பாருங்கள் உங்கள் மகசூல் நன்றாக இருக்கும் .
4.குழந்தை வாரம் இல்லாத அன்பர்கள் தாங்களே முன்வந்து சிறு சிறு விழா காலங்கள் (அம்மாவாசை பூஜை , பௌர்ணமி பூஜை.பிரதோச கால பூஜை கு வரும் அன்பர்களுக்கு) போன்ற நேரங்களில் தங்களே நின்று தயிர் சாதம் லெமன் சாதம் போன்ற எளிய வகை அன்னதான்கள் கொள்ளலாம். கட்டாயம் அதில் வரும் ஒரு ஏழை பக்தனின் வயிறு நிறைய உங்கள் வயிறு நிறையும் . மனமும் நிறையும் . இதும் உண்மை .
5.புளி
6.மிளகாய்
7.பூண்டு
8.கடுகு சீரகம்
9.மஞ்சள்
10.பருப்பு வககைகள்
இவற்றை முடிந்த மட்டும் சிறு பொட்டலங்களில் கொடுத்தால் கூட அது உங்களில் புண்ணிய கணக்கில் கட்டாயம் சேரும் அய்யா .

இம்மடத்தின் நிர்வாகி தொலை பேசி என்:- 04563325433



மேலும் மடத்திற்கு உதவி தானம் செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் அடியேனிடம் கேளுங்கள் . தாங்கள் பொருட்கள் நூறு சத விகிதம் அன்னதானதிருக்கு மட்டும் தன் என்பதை தெளிவு படுத்திகிறேன் எனது அலை பேசி என்

9944494045.9976642060. prabakar madurai .

meditationofsathuragiri

இவர் தான் சிவவாக்கியர் இவர் மற்று உள்ள சித்தர்கள் பற்றிய வரலாறு பின் வரும் தொடர்களில் நாம் அறியலாம் .
சதுரகிரியில் தியானம் என்பது இமையத்தில் தியானம் பண்ணுவதை போன்று மன அமைதியை தரும் . நமது அன்பர்கள் தியானம் மேல்நிலைதியானம் பயிண்டறவர்கள் வாருங்கள் எம்பெருமான் உள்ள இடம் எவ்வளுவு அமைதி என்று தியானம் பண்ண வருபவர்கள் உணர்ந்து கொள்வீர்கள் .


தியானம் பண்ண வேண்டும் எண்ணத்துடன் வருபவர்களுக்கு கவனிக்க வேண்டியவை .



1.விழாக்காலங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் . ஏன் என்றால் விழா காலங்களில் மக்கள் பெரும் கூட்டத்துடன் வருவார்கள் . அதுவும் ஆடி அம்மாவசை அன்று மட்டும் சுமார் நான்கு லட்சம் பக்தர்கள் இறைவனின் தரிசனத்திற்கு வரிசையில் நின்றனர் . அது போன்ற நாட்களை தவிர்ப்பது நல்லது .
2.அதே போல் மாதம் மாதம் வரும் பௌர்ணமி அல்லது அம்மாவாசை மற்றும் பிரதோச காலங்களில் கொஞ்சம் கூட்டம் இருக்கும் . மற்ற நாள் கலீல் கூட்டம் இருக்காது . அப்பொழுது வந்தால் தியானம் செய்ய இலகுவாக இருக்கும் . சுவாமியின் முன்னாடி மணிகணக்கில் இருந்து தவம் பண்ணலாம் . மற்ற நாள்களில் மக்களில் வருகையால் சிறிது சல சல ப்பாக இருக்கும் .

3.அம்மாவாசை முடிந்த பின் மூன்று நாள் கல் கழித்து கூட்டம் குறைவாக இருக்கும் . பௌர்ணமி முடிந்தும் மூன்று நாள் கல் கழித்து கூட்டம் குறைவாக இருக்கும் . அப்பொழுது தியானம் பண்ணுவதற்கு ஏற்ற காலங்கள் . ஆனால் கவனிக்க அபொழுது சுவாமிக்கு விழகாலன் போல சிறப்பான பூஜை இருக்காது. ஆனால் நான்கு கால பூஜைகள் எப்பொழுதும் உண்டு .

4.தியானம் பண்ண வரும் அன்பர்கள் யாராக இருந்தாலும் கவனிக்க வேண்டிய ஒன்று கூட்டம் அதிகம் இல்லாத சமயங்களில் வரும் நாம் நமது உடமைகளை தக்க பாதுகாப்பான இடத்தில் தான் வைக்க வேண்டும் . சில வருடங்களுக்கு முன்பு வரை திருட்டு என்பது மகா லிங்கத்திடம் இல்லை . ஆனால் தற்சமயம் மட்டும் ஏனோ சில அன்பர்கள் அடுத்தவர்கள் பொருகளின் மேல் தங்களின் கவனத்தை திருப்பி உள்ளார்கள் . தவறுதான் என்ன செய்ய மக்கள் அதிகம் வரும் பொழுது நிறைய அன்பர்கள் தங்களது பகட்டை காட்டிக்கொள்ள அவர்கள் கொண்டு வரும் . செல்போன் இம்போர்ட் டார்ச் லைட் போன்றவைகளின் மேல் ஈர்க்கப்பட்டு திருட்டுகளில் இறங்கிவிடுகிறார்கள் . ஏன் என்றால் அவர்கள் கிராமபுரத்தில் உள்ளவர்கள் . இதையெல்லாம் கண்டு இருக்க மாட்டார்கள் . இவையெல்லாம் கண்ட பிறகு ஆசையென்னும் பேய் அவர்களயும் பிடித்து கொண்டு திருட்டு போன்ற துணிகர செயல்களில் ஈடுபட வைத்து விடுகிறது . யாராக இருந்தாலும் திருட்டு என்ற குணம் உள் நுழைந்தால் கஷ்டம் அவர் கலை கடவுள் காப்ற்றுவது. அதே சமயம் . இன்னொரு விஷயம் நாமும் பாதுகாப்போடு இருபது முக்கியம் அல்லவா நண்பர்களே .

சதுரகிரியில் மன அமைதி பெற விரும்புவர்கள் கவனிக்க

சதுரகிரியில் மன அமைதி பெற விரும்புவர்கள் . கட்டாயம் இரண்டு நாள் தங்கி இருந்து மலையில் ரம்மியமான சூழலில் இருந்தாலே கிடைத்து விடும் நகர் புற டென்ஷன் இவையெல்லாம் அங்கு இருக்காது என் என்றால் . அங்கு செல்போனே இல்லை . காட்டுக்குள் இரண்டு நாள் அமைதியான வன வாசம் சென்றால் எப்படி இருக்குமோ அப்டிதான் . நமது மனது அந்த ரெண்டு நாளும் மற்றவற்றை நினையாமல் இருந்தாலே போதும் . அங்கு உள்ள அழகில் மயங்கி விடலாம் .


தியானம் பண்ணுபவர்களுக்கு அது மிக சிறந்த இடம் . தியான பண்ண தவசு குகை சிறந்த இடம் . அப்புறம் பெரிய மகா லிங்கம் சந்நிதயும் சிறந்த இடம் . அதையும் விட்டால் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடமும் மிக சிறப்பு அது இல்லாமல் பல இடங்கள் உள்ளன . அந்த மலையின் நலன் கருதி சித்தர்களின் நன்மை கருதி அவற்றை நான் வெளியிட விரும்ப வில்ல அன்பர்கள் மன்னிக்கவும் . சில விசயங்களை சித்தர்கள்

திங்கள், 21 செப்டம்பர், 2009

சதுரகிரியில் சிறப்பான பௌர்ணமி பூஜை


சதுரகிரியின் மற்றும் ஒரு சிறப்பு மதம் தோறும் இங்கு நடக்கும் பௌர்ணமி பூஜை .
இபூஜையின் நேரம் சுமாராக இரவு ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை நடக்கும் .
எனக்கு தெரிந்து மற்ற கோவில் களில் நடக்கும் பௌர்ணமி பூஜை யை விட இங்கு பல சிறப்புகள் உள்ளன .
ரம்மியமான மலை சூழலில் பௌர்ணமி நேரம் தொடங்குவதை பொறுத்து பௌர்ணமி பூஜை நடக்கும் . அதை அன்பர்கள் காலண்டர் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
பௌர்ணமி பூஜை எபொழுது தொடங்கும் என்று தெரிந்து வைத்து கொண்டு அன்பர்கள் மலை ஏற ஆரம்பித்தால் பல அசௌகரியங்களை தடுத்து கொள்ளலாம் . என் என்றால் நான் முதன் முறை செல்லும் பொழுது பௌர் நமி பூஜை இரவு தானே தொடங்குவார்கள் . நாம் மதியம் மூன்று மணிக்கு மேல் மலை ஏற ஆரம்பித்தால் போதும் என்று நினைத்தேன் . அப்டிதான் மலை ஏறவும் செய்தேன் . ஆனால் வழியில் சில அன்பர்களுடன் பேசி கொண்டும் , அவர்களுக்கு சில உதவி கலை செய்து கொண்டும் நான் மேல செல்ல மணி இரவு ஒன்பது ஆகி விட்டது . அப்பொழுது சுந்தர மகாலிங்கத்திற்கு பூஜை முடிந்து விட்டது ,


சரி இவ்ளோதான் பௌர்ணமி பூஜை என்று நான் பக்கத்திலிருந்த மடத்தில் படுத்து உறங்கி விட்டேன்

அன்று நான் சரியான வழி முறை இல்லாததால் தான் இப்படி நடந்தது. அன்பர்களுக்கு என் இதை சொல்கின்றேன் என்றால் நினைத்தவுடன் எல்லோரோராலும் சதுரகிரி மலைக்கு போக முடியாது . அங்கு செல்பவர் யாராக இருந்தாலும் மலை மீது நடந்து தான் செல்ல வேண்டும் . அதிக தூரத்தில் இருந்து வரும் அன்பர்கல் சரியான வழிகாட்டுதலின் பேரில் வந்தால் பயண நேரம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை மிச்சம் ஆகும் .
பௌர்ணமி பூஜை காண கிடைக்காத ஒன்று .



பௌர்ணமி பூஜைக்கு எபொழுது மலையடிவாரத்திலிருந்து கிளம்பலாம் .
தூரத்தில் இருந்து வரும் அன்பர்கள் மதியம் வெயில் நேரமாக இருக்கும் அதற்கு முன்னால் செல்ல வேண்டும் என்றால் காலை ஆறு மணிக்கு அடிவாரத்திலிருந்து பயணத்தை தொடங்கலாம் . காலையில் ஏற ஆரம்பித்தால் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கொள்ளலாம் .
காலை பத்து மணிக்குள் பலாவடியை அடைந்து விடலாம் .

அதன் பிறகு மலை மேல் நீராடி விட்டு இறைவனை தரிசனம் செய்து விட்டு முடயும் என்றால் அதே வேகத்தில் பெரிய மகாலிங்கம் தரிசனம் முடித்து மதிய உணவுக்கு கஞ்சி மடம் வந்துவிடலாம் . மத்திய உணவு உண்டு விட்டு கால்களுக்கு கொஞ்ச ஓய்வு கொடுக்கும் விதமாக குட்டி தூக்கம் போடலாம் . அப்புறமென்ன இரவு ஆறு மணியிலிருந்து பௌர்ணமி பூஜை ஆரம்பிக்கும் இரவு ஒரு மணிக்கு மேல் பலாவடி கருப்பண்ண சுவாமி பூஜை முடியும் . அதை பார்த்து விட்டு


அடுத்தநாள் காலை ஆறுமணிக்கு திரும்பவும் மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தால் காலை பத்து மணிக்குள் மலையடிவாரம் வந்து விடாலாம் . சுருக்கமாக சொன்னால் முதல் தடவை பௌர்ணமி பூஜைக்கு வரும்பொழுது இரண்டு நாள் தேவை படும் . புதிதாக வருபவர்கள் .மறுதடவை நீங்கள் வரும் தொலைவை கணக்கு பண்ணி அவரவர்கள் கால நேரத்தை மிச்சம் பண்ணிகொள்ளலாம் . 9944494045,9976642060 . prabakar madurai. பூஜை நேர விவரங்கள் பௌர்ணமி கால விவரங்கள் அறிய இந்தஎண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்