ஞாயிறு, 22 நவம்பர், 2009
அடக்கம் தெரிந்தவர்கள் செயல்இப்படித்தான் இருக்கும்
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
சதுரகிரியில் அருவிகளின் ஊடே ஒரு பயணம்
அம்மாவசை இரவு அன்று தங்குவதற்கு காரணம் , என்னுடன் தங்கிய நண்பர்கள் சொன்னார்கள் அம்மாவசை இரவு அன்று சித்தர்கள் பெரிய மகாலிங்கம் சுவாமியை பூஜிக்க வருவார்கள் என்று , எனக்கு அதில் உடன் பாடும் இல்லை அப்படி அவர் கல் வருவதாக இருந்தாலும் மனிதர்கள் அதிகம் இல்லாத இடங்களில் தன் சிவலிங்கம் வைத்து பூஜிப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் , சரி நல்லது எதுவாக இருந்தாலும் அம்மாவசை ஒரு இரவு அந்த கானகத்தின் உள்ளே தங்கி விடுவது என்று முடிவு எடுத்து விட்டேன் , நான் மற்றும் ஜெயகுமார் மதுரையிலருந்து மாரிசாமி மற்றும் அனுபனடியை சேர்த்தவர் ஒருவர் பெயர் தெரிய வில்லை , இவர்கள் மட்டும் தங்குவதா முடிவு எடுத்தோம்
மழையில் காரணமாக மற்ற நண்பர்கள் எல்லாம் நாம்மல ஆகாது குளிருல விரைசிடனும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்
நாங்கள் மட்டும் இருந்தோம் அவர் எதோ கொஞ்சம் பழைய சாக்குகளை வைத்து கொஞ்சம் டென்ட் அடித்து மலையில் நனையாமல் உக்கார மட்டும் இடம் ஏற்பாடு பண்ணினார் , கவனிக்க உட்கார மட்டும்தான் இடம் இருந்தது ,
பெரிய மகாலிங்கத்தில் ஒரு சிறப்பு நாமலே பூஜை பண்ணிக்கலாம் , நாங்கள் கொண்டு சென்று இருந்த பூஜை பொருட்களை விந்து இரவு ஒன்பது மணிக்கு பூஜையை போட்டோம் , மழை விட்ட பாடு இல்ல ஒன்பது மணிக்கு மேல் மழை நன்றாக வலுத்தது , எ
அவ்வளவுதான் எங்களால குளிர் தாங்க முடில குளிருக்கு போர்த்தி கொள்ள பெட்ஷீட் கூட இல்லை , கொஞ்ச நேரத்தில் நாங்க உட்காந்திருந்த இடங்களில் மழை நீர் உட்புகுந்துதது அவ்வளவுதான் அன்றைய இரவு தூக்கம் போச்சு , தூக்கம் போனாலும் பரவாயில்லை இங்கு கும்மிரிட்டு இரவில் விலங்குளின் நடமாட்டம் அருகில் எங்களுக்கு கேட்கிறது , எங்களுக்குள் கொஞ்சம் பயம் ஆரம்பித்தது இருத்தலும் ஒருத்தருக்கு ஒருத்தர் அதை காட்டி கொள்ளாமல் உடனே ஜே ஒரு காரியம் செய்தார் , கொஞ்சம் விறகுகளை போட்டு தீமூட்டினார் தீ மூடவும் மிருகங்கள் நாமட்டும் சத்தம் கொஞ்சம் குறைந்தது
எங்களுக்கும் கொஞ்சம் பயம் பிறந்தது , அப்புறம் சொன்னார் ஒரு சின்ன அகல் விளக்கு இருதால் கூட மிருகங்கள் கிட்டே நெருங்காது என்று
அந்த குளிரிலும் சித்தர்கள் பற்றிய விவாதம் எங்களுக்கு அனல் பறக்க நடந்தது .
எனக்கும் சித்தர் ஆசிவாதம் கிடைத்ததாக உணர்ந்தேன் , புலர்ந்தது பொழுது மலையில் பெரிய மகாலிங்களிருந்து நாங்கள் கீலி ஒரு வழியாகஒரு , வழியாக மகாலிங்கம் சுந்தர நாங்கள் கேளே அடைய முக்கால் மணி நேரம் நடந்தால் தன் முடியும்.
எனக்கு இப்பவே வியர்த்து கொட்டியது , என் என்றால் ஜே வால் நடக்க சிரமமா உள்ளது கால் வலி என்று உட்காந்து விட்டார் . எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
அடிவாரம் செல்வதற்கு ஒன்னரை மணி நேரம் இருக்கிறது அதும் வேகமா க நடந்தால் தன் ,
எல்லோரும் ஒரு நிமிடம் அப்டியே ஸ்தம்பித்து விட்டோம் ,
நினைத்து பாருங்கள் தண்ணி ஓடிகொண்டிருக்கும் ஒரு ஓடையில் அதும் விலங்குகள் உள்ள நடு கானகதிற்குள்ளே நாங்கள் இருகிறோம் . நான் சுந்தர மகாலிங்கத்தை வணகினேன் எப்டியாவது வெளியில் கொண்டு விடு விடப்பா என்று .
கொஞ்ச நேரத்தில் ஜே வலி இருந்தாலும் பரவால்லை நான் இறங்குகிறேன் வாங்க என்று சொன்னார் . சரி என்று மெல்ல காலை விந்தி விந்தி நடக்க அரபிதார்
நாங்கள் பிடித்து கொள்ளலாம் என்று அருகே சென்றால் கூட வேணாம் என்று தடுத்து விட்டார் ,
கீழே விழுந்ததில் அவருக்கு காலில் நல்ல அடி , பாறையில் அவர் கல் ன்றாக அடி வங்கி உள்ளது பார்த்தாலே தெரிகிறது , சிறிது தூரம் பாறையின் ஊடாக நடக்க ஆரபிதோம் , சிறிது தூரத்தில் பாறை மறைந்து மலை சரிவுகள் தெரிய ஆரம்பித்தது . அப்படியே மலை சரிவுகளை பிடித்து ஏறி மேலே ஏறினோம் அது சங்கிலி பாறையை வந்து அடைந்தது , எனக்கு இப்போத்தான் மூச்சே வந்து .
ஏன் என்றால் அடி பட்ட காலுடன் இவர் என்னால் நடக்க முடிய வில்லை என்றால் அவர் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நடந்தால் தான் உதவி கேட்க்க முடியும் ., அப்டியே உதவி கேட்டாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களை யார் அங்கு போக சொன்னது . என்று தான் கேட்பார்கள் . என் என்றால் நாங்க போனது வனத்துறையினரால் தடை செய்ய பட்ட பகுதி . அதனால் தன் எனக்கு சங்கிலி பறை வந்து மூச்சே வந்தது என்று சொன்னேன் . அப்புறம் எல்லாம் பேசி கொண்டே கீழே வந்தோம் . வந்து அவர் அவர் வாகனங்களில் அவர் அவர் திசை நோக்கி பயண பட்டோம்
நான் நிறைய முறை சென்று வந்து உள்ளேன்
ஆனால் என்னால் இந்த முறை சதுரகிரி பயணம் மறக்க முடியாத ஒன்று திகில் அட்வென்ச்சர் எல்லாம் கலந்த கலவையாக எப்டியோ நல்ல படியாக முடிந்தது ஹர ஹர மகாதேவ்
இதை எழுதும் எழுதும் பொழுது எனக்கு மெய் சிலிர்த்தது காரணம் அவ்வளவு திகிலான அனுபவம் . அதை அனுபவித்தேன் நான்
புதன், 18 நவம்பர், 2009
சதுரகிரியின் மகாலிங்கத்தின் அறிய புகை படம்
இந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .
இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .
ஞாயிறு, 15 நவம்பர், 2009
பதினொன்று நவம்பர் அன்று சதுரகிரியில்
என்னிடம் மலை காலம் என்பதால் என்னிடம் உள்ள கேமரா வாய் கொண்டு செல்ல வில்ல இல்லை என்றால் அர்விகளின் அழகை படம் பிடித்து ஆணை வருக்கும் டேத்ரிய படுத்திருப்பேன் , மொத்தத்தில் பூலோக சொர்க்கம் என்றால் மழைகாலத்தில் அருவிகளுடன் கூடிய சதுரகிரி தான் , அதில் மாற்றமே இல்லை , உண்மையில் இறவன் இல்லை என்று வாதிடுனவர் கூட இந்த இயற்கையின் அழகில் இறைவனை காணலாம் ,
மொத்தத்தில் என் வாழ் நாளில் சதுரகிரியின் அற்புதமான உண்மையான இயற்க்கை அழகை ரசித்தேன் , என்னால் ஒரு நாள் தான் அங்கு இருக்க முடிந்தது . மீண்டும் ஒரு தடவை செல்ல என் மனம் துடிக்கிறது , இறைவன் ஆணையிட்டால் செல்வேன் மீண்டும் , அதன் அழகை ரசிப்பேன் . நண்பர்களே இன்னும் இரண்டு நாட்கள் மலை உள்ளாதாக வானிலை அறிக்கை உள்ளது சோ இந்த ஆமாவசைக்கு அங்கு செல்லலாமா என்று ஒரு எண்ணம் உள்ளது நாளை மதியம் அங்கு செல்கிறேன் வர விரும்பும் அன்பர்கள் உங்களுக்கு வழிகாட்டி தேவை என்றால் சொல்லுங்கள் வருகிறேன் ,
9944494045, 9597710769 prabakar mdu thirunagar
வியாழன், 29 அக்டோபர், 2009
ஆகாய கங்கை பயணம்
.
காரணம் தனியாக போயி பழக்க பட்ட எனக்கு கூடஐந்து பேரை கூட்டி செல்வது சற்று சிரமமான காரியமாக பட்டது . காரணம் எல்லோரும் வயதில் மூத்தவர்கள் மெதுவாகத்தான் கிளம்புகிறார்கள் . ஆதலால் எல்லோரையும் ஏக காலத்தில் பஸ்சில் ஏற்றி இறக்குவது என்பது கொஞ்சம் சிரமமான காரியமாக பட்டது . எனக்கு ,
ஒருவழியாக இரவு பனிரெண்டு மணியை அடைந்தேன் . சரி காலையில் கிளம்பலாம் என்று அங்கிருந்த பயனியர் நிழற்குடையில் கீழ் ரொம்ப கஷ்ட்டப்பட்டு உறங்கினோம் . எனக்கு உறக்கம் வரவில்லை காரணம் புது இடமாக இருந்ததாலோ என்னவோ எனக்கு உறக்கம் வரவில்லை . ஒரு வழியாக விடிந்து ஆறு மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தோம் . மலை ஏற அரம்பித்ததுதான் ஆச்சரியம் எனக்கு எனதுதாயார் வயதில் அறை நூற்றாண்டை கடந்தவர் . ஆனால் அவர் நடந்த வேகம் என்னால் நம்பவே முடியவில்லை இன்னும் காரணம் எங்கள் வீட்டு மாடி ஏற சிரமப்படும் எனது தாயார் சதுரகிரியில் கரடு முரடான பாதையை அடைந்தார் என்றால் நம்ப முடியுமா ? ஆஸ்துமா வேறு உள்ளது அவருக்கு . ரொம்ப தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு உண்மையில் கடவுள் கருணையினால் மூன்று மணி நேரத்தில் எளிதாக கடந்துவிட்டார் அப்பாதையை ,
நானும் எனது நண்பர் ராஜாவும் , எங்களுடன் பெரியாகுளது நண்பர் ஜெயகுமார் அவர்களும் மூன்று பேர் மட்டும் கோரக்கர் குகை போன்றவற்றை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் ,
எனது அம்மா அவர்களை முன்னே அனுப்பி விட்டு நாங்கள் கோரக்கர் குகை மற்றும் மேலும் எங்களுக்கு தெரிந்த பதஞ்சலி முனிவரின் சீடர்கள் வழிபட்ட குகை போன்றவற்றை பார்த்து விட்டு இவர்கள் பினால் நாங்கள் சென்றோம் . ஆனால் ஜெயகுமார் உடன் நான் பலமுறை சதுரகிரி சென்றுள்ளேன்
அல்லது நான் போயிருக்கும் சமயம் அவர் அங்கிருந்து கலந்து கொண்டு பேசுவோம் நிறைய விசயங்கள் அறிவு பூர்வமாக சொல்லி இருக்கிறார் ,. நானும் அவரும் நிறைய விவாதங்கள் செய்திருக்கிறோம் ஒவ்வரு தடவையும் எனக்கு அவர் புதுமையான மனிதராக தெரிகிறார் . காரணம் அவர் இடம் தன்ன்னம்பிகை அதிகம் அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ,. ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் தன்னம்பிக்கை முக்கால் பங்கு வகிக்கிறது . இரண்டாவது அவர் அந்த மலையில் இருபத்து கிலோ மீடர் நடந்தாலும் அவர் முகத்தில் களைப்பு என்பதே தெரியவில்லை ,. சிரித்த முகத்துடன் அவர் இருக்கும் பாவனை போன்ற விசயங்கள் நாம் அவரை பார்த்து கற்று கொள்ள வேண்டியது அதிகம் .
சரி விசயத்திற்கு வருவோம் . எனது தாயார் என்னால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வரை மலை ஏறி வந்ததே பெரிய விஷயம் ஆதலால் நான் இங்கே இருந்து கொள்கிறறேன் நீங்கள் தவசி மற்றும் மலை மேல் உள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னார் . சரி என்று நாங்கள் எபொழுதும் போல கிளம்பினோம் .
என்னுடன் எனது பெரிய தாயார் மற்றும் அங்கு வந்திருந்த சிவபக்தரான மோகன் அய்யா ஜெயகுமார் ராஜா மற்றும் இன்னும் சிலருடன் நாங்கள் தவசி வழியாக சென்று பெரிய மகா லிங்கம் மற்றும் வெள்ளை விநாயகர் போன்ற இடங்களை தரிசித்து வரலாம் என்று எல்லோரும் கிளம்பி அன்று நலல் படியாக எல்லா இடத்தையும் தரிசித்து வந்தோம் . எனக்கு ஏனோ மோகன் அய்யாவை ரொம்ப பிடித்து விட்டது ,. இப்பயணத்தில் காரணம் மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் அம்மலையில் ஏறி வந்தார் ,. அவரிடைய இடுப்பு பகுதி இல எதோ பிரச்சினை துண்டை இடுப்பில் நன்றாக இறுக்கி கட்டி கொண்டு அவர் மலையில் கஷ்டப்பட்டு ஏறியதை நினைத்தால் உண்மையில் அவரையும் அந்த மகாலிங்கம்தான் ஏற்றி விட்டிருக்கிறான் ,.
சரி இனி அடுத்த இடுகையில் ஆகாய கங்கைக்கு சென்ற அனுபவங்களை இடுகையில் இடுகிறேன் . நண்பர்களே என்னால் இவ்விடுகையில் புகைபடங்களை உப்லோஅது செய்தால் காலதாமதம் ஆவதால் நண்பர்கள் தயவு செய்து எனது கூகிள் பிசாசா வெப் ஆல்பம் பகுதியில் எனது புகை படங்கள் எல்லாம் உள்ளது அதை பார்த்தல் உங்களுக்கு தேவையான புகை படங்கள் கிடைக்கும் . நேரமின்மை காரணங்களால் என்னால் இந்த இடுகையில் இட முடிய வில்ல மன்னிக்கவும்,
புதன், 28 அக்டோபர், 2009
சதுரகிரியில் கிடைக்கும் கடுக்காய்கள்
பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ் கிறது.
உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"கூறுவேன் தேகமது என்னவென்றால்குருபரனே
எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
'உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை,
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும்.
சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற் றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.
மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடு கிறார். கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கி னால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.
உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்
.பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்."காலை இஞ்சி கடும்பகல் சுக்குமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்விருத்தனும் பாலனாமே.'காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.பல் நோய்கள் தீர...கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.மூல எரிச்சல் தீர...கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!
இந்த இடுகை நக்கீரன் இணயத்தளத்தில் இருந்தது கடுகாயின் சிறப்பம்சம் எல்லோருக்கும் தெரியபடுதவே எனது இடுகையிலும் இட்டு உள்ளேன் , தவறாக என்ன வேண்டாம் . மற்றும் சதுரகிரியில் கடுக்காய் மரங்கள் நிறைய உள்ளது , அங்கு மலைமேல் செல்லும் பொழுது அதிர்ஷ்டம் இருந்தால் பார்த்து எடுக்கலாம் , நன்றிநக்கீரன் இணைய தளம்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3277
திங்கள், 19 அக்டோபர், 2009
ஞாயிறு, 18 அக்டோபர், 2009
தீபாவளி அம்மாவசை பயண கட்டுரைகள்
சனி, 10 அக்டோபர், 2009
சதுரகிரி புகை படங்கள்
பெரிய மகாலிங்கம்
பெரிய மகாலிங்கத்தின் பின் புறம் . என்னே இயற்கையின் அழகு பாருங்கள் இறைவன் தன் ஜடா முடியை விரித்து விட்டாற்போல ஆகா அற்ப்புதம்
தவசி பாறையின் மேல உள்ள நவகிரக கற்கள் அடர்ந்த வனத்தின் மலை உச்சியில் இவளவு பெரிய பாரன்ன்கர்களை யார் போற்றுபார்கள் யோசிக்க் அவேண்டிய விஷயம்
இது ஏ .சி பாறை மிகவும் அற்புதமான இடம் காற்று நன்றாக வரும் இவிடத்தில் . மலையின் முகட்டில் இருப்பதால் காற்று இருபத்திநான்கு மணி நேஅரமும் ஜில் என்று தான் வரும் . இதிலிருந்து மற்ற மலையியின் அழகை ரசிக்கலாம்
இதுவும் ஏ.சி பாறைதான்
ஏ.சி பாறை ஸ்டில்
ஏ.சி பாறை ஸ்டில்
ஏ.சி பாறையிலிருந்து கீழே சந்தன சுந்தர மகாலிங்கத்தின் அழகு காட்சி
இதுவும் ஏ.சி பாறை காட்சி
தவசி பாறை காட்சி இதி அப்பாவியாய் நிற்கும் நண்பர் விமல் கடலூர்
தவசி பாறை குகை நுழைவு வாயில் இது இவ்வளுவு தான் அகலம் இருக்கும் இதற்குள்லாகதான் ஊர்ந்து செல்ல வேண்டும் . குகையின் முன் நண்பர் பிரகாஷ் பெங்களூர் அவர்கள்
தவசி பாரயில்ருந்து கிளிக் யது . மழையின் ஒரு பகுதி
மலையின் மற்றொரு பகுதி
எனது நண்பர்களுடன் நன்சதுரகிரி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள்
நானும் எனது நண்பர் சரவனுனும் நடந்த சென்ற பொழுது எங்களுக்கு தெரியாமலையே எனது நண்பர் சந்துரு எடுத்த புகைப்படம்
தானிப்பாரையிலிருந்து விநாயகர்கோவில் செல்லும் வழி
புதன், 7 அக்டோபர், 2009
தவசியிலிருந்து பெரியமகாலிங்கம் பயணம்
தவசிப் பாறையின் மேல் இருந்த நவகிரகக் கற்களை வணங்கி விட்டு அதற்குச் சற்று கீழே இறங்கி ஏசி பாறையினுள் நுழைந்தோம் .ஆஹா அற்புதம் இயற்கையின் அழகான ரம்மியமான படைப்புகளில் இந்த ஏசி பாறையும் ஒன்று .
ஏசி பாறையிலிருந்துச் சதுரகிரி மலையின் அழகை பார்ப்பது சினிமாஸ்கோப்பில் படம் பார்ப்பது போல அவ்வளவு அழகாக இருக்கும் . ஏசி பாறையில் இருந்து தவறி விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காது . அவ்வளவு ஆபத்தான இடமும் கூட.
ஏசி பாறையிலிருந்து மேலே ஏறி இடைக்காடர் வனம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம் . இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடைக்காடர் வனத்தை அடைந்தோம் . அதற்குள் பிரதீப் பிரபா, 'பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு நாம் மேலும் பயணத்தை தொடரலாமே' . என்று சொன்னார் . எனக்கும் அது சரி என்றே பட்டது காரணம் இடைக்காடர் வனத்தில் குரங்குகள் தொல்லை இல்லை . இங்கு சாப்பிட்டால் கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கும் . என்று நினைத்து சரி என்றேன் . ஆனால் வழிகாட்டி பாலுவோ, ' பிரபா, வாருங்கள் யமவனதிற்குப் போகும் பாதை இருக்கிறது . அது வழியாக போனால் கொஞ்சம் தூரத்தில் நீரோடையில் தண்ணீர் தேங்கி இருக்கும். கை கால் அலம்பியபின் நாம் சாப்பிடலாம்' என்று சொன்னார் . நானும் சரியென்று சொன்னேன் . அனைவரும் கிளம்பினோம். சுமார் பத்து நிமிடத்தில் அந்த இடத்தையும் அடைந்து விட்டோம் .
அங்கு உள்ள ஒரு மர நிழலில் சாப்பாட்டுக் கூடையை வைத்து விட்டு தண்ணீர் தேடினோம். ஊஹூம், தண்ணீர்? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த ஓடையில் இல்லை . பாலு அதற்குள் அங்கு இருந்த காட்டு வாழைமரத்தின் இலைகளைப் பிடுங்கி வந்தார் . ஆளுக்கு ஒரு இலை எடுத்து எல்லோரும் வரிசையாக அமர்ந்தனர் . நாங்கள் கொண்டு வந்த உப்புமா எல்லோருக்கும் சரியாக இருந்தது . ஆனால் பிரதீபுக்குத்தான் உப்புமா போதவில்லை போலும்! ஆள் நெளிந்துகொண்டே இருந்தார் . அதை கவனித்த நான், ஸ்ரீநிவாசன் சார் கொண்டு வந்த ப்ரட் ஜாம் போன்றவற்றைக் கொடுத்து ஒரு வழியாக சமாளித்தேன் . இப்பொழுது பிரதீப் முகத்தில் சிறிது சிரிப்பு காணப்பட்டது. ஐயப்பன் இதை சொல்லியே என்னிடம் கிண்டல் அடித்துக் கொண்டு வந்தார் . அப்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னார் வழிகாட்டி பாலு. இந்த ஓடையை ஒட்டி இருக்கிற மலையில் இருக்கும் ஒரு வகையான மரங்கள் எல்லாம் அந்த காலத்தில் சித்தர் ரசவாதம் தயாரிக்கப் பயன்படுத்தினார்களாம். எனக்கு புரிந்தது. ஆனாலும் புரியாத மாதிரியே காட்டிக் கொண்டேன்.
பின் அந்த மரத்தின் இலைகளை பறித்து எங்கள் கைகளில் கொடுத்து, 'உங்கள் கைகளால் இந்த இலைகளைக் கசக்கித் தேய்த்துச் சாறு எடுங்கள்' என்றார். ஊஹூம். ஒருவர் கைகளில் கூடச் சாறு வரவில்லை ஆனால் பொன் நிறத்தில் ஒரு விதச் சாயம் எங்கள் கைகளில் ஒட்டியிருந்தது . பிறகுதான் சொன்னார், 'அக்காலத்தில் சித்தர்கள் தங்கம் தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகளில் இதுவும் ஒன்று' என்று! இந்த மரத்தின் இலைகளில் சாறு எடுப்பவன் சித்தன் ஆகிவிடுவான் என்று வேறு சொன்னார் . எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது எவ்வளோ பெரிய விசயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்கிறீகளே . என்றேன் . அதற்கு வழிகாட்டி பாலு சிறிது கொண்டே சொன்னார், 'தங்கம் தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த மலைக்குள் வந்தாலே காவல் தெய்வங்கள் அவன் மனது அறிந்து அவனைக் காவு வாங்கி விடும் . அப்படி மீறி வந்தாலும் இந்த மலையின் இந்த மூலிகையில் சாறு எடுத்தால்தான் தங்கம் கிடைக்க வழியே கிடைக்கும் . இதில் சாறு எடுக்கும் ரகசியம் சித்தனுக்குதான் தெரியும். இந்த ஓடை இருக்கும் மலை முழுவது இந்த மூலிகைதான் இருக்கும். அதனால்தான் இதைத் தங்க மலை என்று தன் நானும் என் சகாக்களும் கூறுவோம். இந்த மலை பக்கம் யாரையும் கூட்டி வர மாட்டோம் ஆனால் இன்றைக்குச் சாப்பாட்டுக்காக இந்த மலைப் பக்கம் வர வேண்டியதாக ஆனது' என்று சொன்னார் . நான் அப்படியே அசந்து உக்காந்து விட்டேன்.
பின்னே என்ன? தங்கம் உள்ள மூலிகை என் கண் எதிரே ஆனால் அதை எப்படி செய்வது என்ற சூத்திரம் நான் வணக்கும் சித்தன் உள்ளே . என்ன ஒரு விந்தை? இந்த மூலிகையை பார்த்து விடமாட்டோமா என்று தவம் இருந்தவர்கள் எத்தனை பேர்? இந்த மூலிகையைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர் எத்தனை பேர்? அதற்கு உயிரை கொடுத்தவர் எத்தனை பேர்? ஆனால் தங்கத்தைத் தன் காலடியில் போட்டு மிதித்தவர் இந்த மலையில் வாழும் சித்தர்கள். பின்னே, எங்கள் கண் எதிரே தங்கத்தை உருவாக்கும் மூலிகை ஒரு மலையைச் சுற்றி வளர்ந்து நிற்கிறது. அதை பார்க்கும் பாக்கியமாவது கிடைத்தது எங்களுக்கு. பின் அங்கிருந்துக் கிளம்பினோம் கிளம்பும் போது அனைவரும் ஒரே மாதிரியானக் காரியத்தை செய்தார்கள். அது என்னவென்றால், மூலிகை தேய்த்த கையைப் பார்த்ததுதான் . எங்கள் கைகள் பொன் நிறத்தில் எங்களை பார்த்துச் சிரித்தது .
எனது மனதிற்குள் சித்தனும் சிரித்தான் கடைசியில் நீயும் தங்கத்திற்கு ஆசைபடுபவனா என்று. நான் அப்பொழுது முடிவு எடுத்தேன். என் வாழ்க்கையில் தங்கம் தேவை இல்லை என்று .
பிறகு அனைவரும் திரும்பவும் தங்கமலையை விட்டு இடைக்காடர் வனம் வந்து சேர்ந்தோம் . அங்கிருந்து அப்படியே நான்கு கிலோ மீட்டர் நடந்தால் பெரியமகாலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் . பிரதீப் மட்டும் ஆழ்ந்த யோசனையில் வந்தார். ஐயப்பன், 'என்ன பிரதீப்? தங்கம் தயாரிக்கலாமா? நீங்க சாறு எடுங்க, நான் தயாரிக்கிறேன்' என்று பிரதீபை காமெடி பண்ணினார் . பிரதீப், 'ஆமாம் ஐயப்பன். கஷ்டமான வேலையை எனக்குக் கொடுங்கள். ஈசியான வேலையை நீங்க எடுத்துக்குங்க'ன்னு சொன்னார் . நான் சிரித்துக் கொண்டே இவர்களைப் பின் தொடர்ந்தேன் . இப்பொழுது நாங்கள் மலையின் மேல் உச்சியில் சமதளத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்திருப்போம் தீடீரென்று பாலு, வேறு பாதையில் பிரிந்து உள்ளே வேகமா சென்றார்
நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்தோம். ஏன் என்றால் அது ஒற்றை அடிபாதை. அவ்வழியே செல்லச் சிரமமாக இருக்கும். சரி என்று ஒரு இரண்டு நிமிடம் நின்றோம் . மனிதர் கைகளில் அருநெல்லிக்கனிகளைக் கொண்டு வந்தார் .
அக்கனிகள் செந்நிறத்தில் இருந்தது எனக்கு சந்தேகம். நான் பாலுவை மர்மப் புன்னகையோடுப் பார்த்தேன். பாலு, எதுவும் சொல்ல வேண்டாம் என்றார் சைகையில். நான் புரிந்து கொண்டுவிட்டேன் . நமது நண்பர்கள் அனைவரும் நெல்லிக் கனி சுவையாக உள்ளது என்று சாப்பிட்டனர் . நானும் இரண்டு நெல்லிக்கனிகளைச் சாப்பிட்டேன் . அக்கனிகள் சாதாரணக் கனிகளா? அவை எவ்வளவு மருத்துவக் குணம் வாய்ந்தது என்று எனக்கும் நன்றாகவே தெரியும். நண்பர்களுக்கு அதாவது பிரதீப், ஐயப்பன், ஸ்ரீநிவாசன் சார் இவர்களுக்குத் தெரியாது அதன் மகிமை .
நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி பெரிய மகாலிங்கத்தை அடைந்தோம் . ஆகா. அற்புதம் எம்பெருமான் வீற்று இருக்கும் அழகை காணக் கண் கோடி வேண்டும் . பெரிய மகாலிங்கத்தை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினோம் . பின் பெரிய மகாலிங்கத்தைச் சுற்றி, அவ்விடத்தை எல்லோரும் சுத்தப்படுத்தினோம் .
பெரிய மகாலிங்கத்திடம் ஒரு சிறப்பு. தமிழ் நாட்டில் எந்த சிவன் ஆலயம் அல்லது விஷ்ணு ஆலயம் அல்லது எந்த கடவுள் வீற்றிருக்கும் ஆலயம் ஆனாலும் அங்கு அர்ச்சகரோ இல்லை பூசாரியோ இருப்பார் அல்லது அதற்கென்று நியமிக்கப் பட்டவர்கள் மட்டும்தான் பூஜை செய்ய முடியும் . ஆனால் எம்பெருமான் இந்த அடர்ந்த வனத்திற்குள் இருந்து கொண்டு, யார் வந்தாலும் தன்னை உள்ளன்போடு பூஜிக்கலாம் என்று கம்பீரமாக வீற்றிருக்கிறார் .
பெரிய மகாலிங்கத்தின் அடியில் சிறிய மகாலிங்கமும் அதற்கு நேர் எதிரே நந்தியும் உள்ளனர். அவர்களுக்கு அபிஷேகம் தீபாராதனை போன்றவைகளை நாமே செய்து கொள்ளலாம். பௌர்ணமி அமாவாசை நாட்களில் அங்கு ஒரு சாது இருந்து பூஜை செய்வார் . மற்ற நாட்களில் நாமே பூஜை செய்து கொள்ளலாம் . இதிலிருந்து நாம் கற்று கொள்வது . எம்பெருமான், ஏழை பணக்காரன் கீழ்ச்சாதி மேல்ச்சாதி என்ற பாகுபாடு இல்லாமல் உள்ளன்போடு யார் பூஜித்தாலும் ஏற்றுக் கொள்வார் .
நாங்கள் அனைவருமே கொண்டு வந்திருந்த அபிஷேகப் பொருட்களுடன் பக்கத்தில் இருந்து ஊற்று நீர் அபிஷேகத்திற்கு எடுத்து வந்து நியம முறைப்படி எல்லாம் பண்ணினோம் . சமஸ்கிருத மந்திரங்கள் தெரியவில்லை அதலால் தேவார திருவாசக பாடல்களையே பாடினோம் . இறைவனும் ஏற்று கொண்டார் என்றுதான் நினைக்கிறேன் . பூஜை முடித்து பிறகு நடக்கத் தொடங்கினோம் .
நடக்குமுன் பெரிய மகாலிங்கத்தை ஒருதரம் சுற்றி வந்தோம் . பெரிய மகாலிங்கத்தை ஒரு கற்பக விருட்சம் தன் வேர்களால் பிடித்து கொண்டிருக்கிறது
அதை பார்ப்பதற்கு இறைவன் ஜடா முடி தரித்து இருப்பது போலவும் அந்த வேர்கள் இறைவன் பின்னால் அவ்வளவு அழகாக ஒரு பெண்ணின் கூந்தலை போல் விரிந்தும் நிற்கிறது. மெய் சிலிர்த்து போனேன், அதைக் கண்டு. உண்மையில் இதை எல்லாம் காண ஒரு கொடுப்பினை வேண்டும் .
மாடி வீட்டு வாழ்க்கை, படுக்கச் சொகுசான இடம், மூன்றுவேளை அறுசுவை உணவு, கவனித்துக் கொள்ள எனது அன்புள்ள தாயார், எனக்கு ஒன்று என்றால் பதறித் துடிக்கும் எனது பெரியன்னை என்று சுற்றம் சூழ நான் இருக்கும்போது, அனல் அடர்ந்த வனத்தினுள் என் இறைவன் ஒருவரும் வேண்டாம் என்று தானே இருக்கிறான் . என்ன வசதி அவனுக்கு இருக்கிறது? இருப்பதையெல்லாம் நமக்கு ஈந்து விட்டு அவன் நடுக்காட்டினுள் இருப்பது எதை உணர்த்துவதற்கு? மனக் கண்ணைத் திறந்தவர்களுக்குதான் அது புரியும் அவன் ஏன் இப்படி ஒரு இடத்தில் குடி கொண்டுள்ளான் என்று
பெரிய மகாலிங்கம் தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அடுத்து நடுக்காட்டு நாகர் நடுக்காட்டு பிள்ளையார் வெள்ளைப்பிள்ளையார் ஆகியோரை பார்க்கக் கிளம்பினோம் . இதை நாம் அடுத்த இடுகையில் பார்க்கலாமே. ஒரு சிறிய தத்துவத்துடன் முடிக்கிறேன் . எனது நண்பர் ஒருவர் மெயிலில் எனக்கு அனுப்பிய தத்துவம் இது
உங்களால் பறக்க முடியவில்லையா ?
ஓடுங்கள் ...
உங்களால் ஓட முடியவில்லையா ?
நடங்கள் ...
உங்களால் நடக்க முடியவில்லையா ?
தவழுங்கள் ..
ஆனால், எதைச்செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி
நகர்ந்து கொண்டே இருங்கள் ..
இனிய மாலை வணக்கம் .
செவ்வாய், 6 அக்டோபர், 2009
தவசிப்பாறை பயணம்
வணக்கம் நண்பர்களே ,
நான் வியாழகிழமை நடந்த பிரதோச நிகழ்ச்சியை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டேன் . அதில் பல இடங்களில் எடிட் செய்யப்பட்டுதான் வந்தது , காரணம், எனக்கு, நேரம்மின்மைதான் .
பல சிரமங்களிநூடே இந்த இந்த வலைப்பதிவை நான் தொடகிறேன் .
எனது தொழில் நிமித்தம் காரணமாக என்னகு நேரம் கிடைப்பது மிகவும் அரிது . கிடைக்கும் நேரத்தை மகாலிங்கதிருக்கு சேவை செய்கிறேன் . எனது தமிழ் டைப் இல் குறை இருந்தால் பொறுத்து அருளுமாறு வேண்டுகிறேன் . நன்றி,
சரி விசயத்திற்கு வருகிறேன் வியாழன் அன்று மாலை நேர பிரதோஷம் முடித்துதேதி காலை அன்று இரவு எல்லோரும் உறங்க சென்றோம் . ஐயப்பன் , பிரதீப் இருவரும் அதிகாலை மூன்று மணி பூஜைக்கு தங்களால் எழுந்திருக்க முடியாது என்று சொல்லி விட்டனர் . நீங்களும் ஸ்ரீநிவாசன் சார் ,போயி வாருங்கள் என்று சொல்லி படுத்துவிட்டார்கள் . சரி எண்று , நான் அலாரம் வைத்து விட்டு உறங்கினேன். புலர்ந்தது பொழுது, அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு எழுந்து இருட்டிற்குள் ஒன்றும் தெரியவில்லை ஏன் என்றால் அங்கு மின்சாரம் கிடையாது
ஆதலால் சிறிய ஹரிக்கன் விளக்கை தொங்க விட்டிருப்பார்கள். அது மடத்திற்குள் தான் . வெளியில் கும்மிருட்டு நான் மெதுவாக எழுந்து டார்ச் லைட் பிடித்து கொண்டு காலை கடன்களை முடித்து கொண்டு வந்தேன் .
அதிகாலை 2.50 மணி தண்ணீர் ஜில் என்று இருந்தது நமசிவாயத்தை மனதில் இருத்தி தண்ணீரை தலையில் கொட்டினேன் .
மழை வேறு சிறு தூறலாக தூரி கொண்டு உள்ளது . உடல் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது . குளித்து முடித்து விட்டு ஸ்ரீநிவாசன் சார் எழுப்பி விட்டு வந்தேன் , ஆயத்தமாகி சரியாக 3 மணிக்கு சந்தன மகாலிங்கம் கோவில்க்கு சென்றேன் .
அதிகாலை, வேளையிலும் அங்குள்ள பூசாரிகள் சுறு சுறுப்பாக இறைவனை துயில் எழுப்பும் பணியினை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்கள் . எனக்கு தெரிந்த பல சிவாலயங்களில் காசுக்கவும் அரசாங்கம் கொடுக்கும் சம்பளதுக்குதான், இறைவனுக்கு ;பூஜை புனஸ்காரங்கள் நடக்கும் . அதுவும் சில ஆத்மார்த்தமாக பண்ண கூடிய அர்ச்சகர்கள் இருப்பார்கள் அவர்களை நான் குறை சொல்ல வில்லை . ஆனால் சம்பளத்துக்கு கடமையை செய்யும் அர்ச்சகர்கள் தயவு செய்து சந்தன ,சுந்தர , மகாலிங்கம் சந்நிதிகளில் நடக்கும் ஆத்மார்த்தமான பணிகளை பாருங்கள் ., அந்த மலை காட்டுக்குள் அவர்கள் கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் நேர்த்தியை பாருங்கள் அடடா கண் கொள்ள காட்சி .
பூசாரி சந்தன மகாலிங்கத்திற்கு அபிசேக நீரை ஊற்றினார் . நான் திருவாசகம் திருப்பள்ளி எழுச்சி பாடலை பாட ஆரம்பித்தேன் . எனக்கு அவ்வளவு சங்கீத ஞானம் கிடையாது . ஆனாலும் அவ்வழு அமைதியான சூழலில் எனது குரல் மலைகளில் பட்டு எதிரொலித்தது . கயிலையில் எம்ம்பெருமானை கண்டது போல அடுத்தடுத்து நான் தேவார திருவாசாக பதிகங்களை ஒவ்வொன்றாக பாட ஆரம்பித்தேன் . எனக்கு மாணிக்கவாசகர் எழுதிய தில் பிடித்து . திருவாசகத்தில் உள்ள பிடித்த பத்து பதிகத்தில் உள்ள பத்து பாடல் களுமே அந்த பாடல்களுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது . கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பாடல் கல் அவை ,
அதிகாலை மூன்று மணிக்கு தேவார திருவாசக பதிகங்களை பாட ஆரம்பித்த நான் நான்கு முப்பது மணிக்கு பூஜை நிறைவடைந்து தீபாராதனை பார்த்த பிறகு தான் நிறுத்தினேன் . என்னவோ தெரியவில்லை பாடலைகளில் ஒன்றி விட்டேன் .
அங்குல பூசாரிகளிடம் பேச்சு கொடுத்தேன் . அய்யா இவ்வளுவு நெக்குருகி ஆத்மார்த்தமாக இறைவனுக்கு சேவை செய்கிறீகளே . நீங்கள் தங்குவதெல்லாம் எங்கு என அவர்களை கேட்டேன் . தங்குவதெல்லாம் இங்கேதான் அய்யா பூஜை நேரம் போக மீத நேரம் இங்குள்ள மாடுகளை கவனித்து கொள்வேன் . நந்தவனத்தில் உள்ள பூக்களை பறித்து இறைவனுக்கு மாலை தொடுப்பேன் . என்னுடன் துணைக்கு இன்னொரு பூசாரியும் உளார் என்று சொன்னார் .
இவர்களில் மாரியப்பன் என்பவர் கொஞ்சம் வித்யாசமானவர் . இவர் பூஜை க்கு தேவையான பணிவிடைகள் செய்வது பூஜை முடிந்த பின் அங்குள்ள சங்கு வில் அவர் எழுப்பும் ஒலி அந்த சதுரகிரி மலையே எதிரொலிக்கும் . இவர் சங்கு ஊது அழகு மாய கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் இனிமையை ஒத்து இருக்கும் . பூஜை முடிந்தது இவர் மூன்று முறை சங்கு ஊதினால் பூஜை அத்துடன் நிறைவடையும் .
பூஜையை முடித்து கொண்டு கீழே இறங்கினோம் . மணி ஐந்து வாய் நெருங்கியது . மடத்திற்குள் வந்த உடன் பிரதீப் அய்யப்பன் இருவரையும் எழுப்பி விட்டோம் . இருவரும் எழுந்ததும் , என்ன 'பிரபா ஸ்ரீனி சார் காலை தரிசனம் முடிந்ததோ .ஆமாம், என்று அவர்களை அவசர படுத்தினோம் காரணம் .
அதிகாலை சீக்கிரம் கிளம்பினால்தான் தவசி குகைக்கு வெயில் ஏறுவதற்கு முன் சென்று அடையலாம் . அவர்களும் குளித்து ரெடி ஆனார்கள் .
நாங்கள் பௌர்ணமி மடத்து நிர்வாகி சிவசங்கு அய்யாவிடம், சொல்லி தவசிக்கு கிளம்ப தயார் ஆனோம் . சிவசங்கு அய்யா தம்பி கொஞ்சம் பொறுங்க காலையில் வெறும் வயிற்றுடன் மேல ஏறினால் களைப்பு தட்டி விடும். உங்களுக்கு, ஆறு மணி க்குள் உப்புமா கிளறி கொடுத்து விடுகிறோம் .
வழியில் நீங்கள் , உணவருந்தி விட்டு மேல ஏறலாம் களைப்பு தெரியாது என்று சொன்னார்.
சரி, என்று அவர், கொடுத்த உணவை கையில் எடுத்து கொண்டு நாங்கள் கிளம்பினோம்.
சுந்தர மகாலிங்கம் சந்நிதியின் பின்புறம் தவசிக்கு செல்லும் வழி உள்ளது . அதன் வழியாக மலை மேல் ஏற ஆரம்பித்தோம். மணி ஏழு, ஆகிவிட்டது சப்த கன்னிமார் ஓடையை அடையும் பொழுது மேலும் அறை மணி நேரம் கூடுதலாக ஆகி விட்டது . எங்களுடன் வந்த ஐயப்பன்சென்னையில்,இல் பணி புரியும், நண்பர் .
மனிதர் வாயைத்திறந்தால் நகைசுவைதான். பிரதீப் ,ஸ்ரீநிவாசன் , நான், என அனைவரையும் காமெடி ஆக்கி நகைசுவையில் கலக்கி விட்டார் . ஆனாலும் அந்த வனத்திற்குள் ஐயப்பன் போன்ற மனிதர்கள் இல்லையென்றால் கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்யும் .
ஐயப்பன் போன்ற நண்பர்களால் பயணம் மிகவும் கலை கட்டியது . தவசி ஏறும் பாதை மிகவும் கடினமாக இருந்தது . எங்கள் நால்வரில், அய்யப்பன் தான் வயது குறைந்தவர் . ஆதலால் அய்யப்பன் வெகு விரைவாக மலை ஏறி விட்டார் . ஆனால் நாங்கள் எல்லோரும் வயது முப்பதை நெருங்குபவர்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது .
ஐயப்பன் முன்னாள் ஓடி, ஓடி , ஒவ்வரு, இடமாக நின்று ரசித்து பார்த்தார் . நாங்கள் பொறுமையாக நடந்து ஒவ்வரு இடமாக ரசித்தோம்
ஒரு வழியாக தவசியை அடைந்தோம் . அங்கு குகையின் வாயிலுக்கு முன்னாள் ஒருபத்து நிமிடம் ஓய்வு எடுத்தோம் . பின்னர் டார்ச் லைட் களை, எடுத்து கொண்டு குகை வாயில் சென்று படுத்து கொண்டு தரையில் நீச்சல் அடித்து கொண்டுதான் உள்ளே செல்ல முடியும் .
பிரதீப் நானும் வருவேன் ,என்று சொன்னார் பிரதீப் கொஞ்சம் பெருத்த உடல் வாகு உடையவர் அதலால் நான் பயந்தேன். காரணம், குகையின் அளவே இரண்டு அடி உயரம் தான். பக்கவாட்டில் அகலம் வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகம் சரி, வாங்க என்று, அவரையும் அழைத்து கொண்டு பின்னால் தரையில் ஊர்ந்து கொண்டு உள்ளே சென்றோம் .
உள்ளே, பத்து அடி தூரம் சென்றால் கொஞ்சம் முட்டி போட்டு தவழ்ந்து செல்லும் அளவுக்கு இடம் கிடைத்தது . முட்டி போட்டு ஒரு பத்து அடி தூரம் சென்ற பின் கொஞ்சம் குனிந்து கொண்டு செல்லும் அளவு வழி கிடைத்து குனிந்து கொண்டே அடி தூரம் சென்றோம் . ஆகா அங்குஆறு பேர் உக்கார்ந்து இருக்க கூடிய ஆளவுக்கு இடம் இருந்தது . கையில், கொண்டு வந்து இருந்த நெய் பாக்கெட் ஐ உடைத்து ,அங்குள்ள, பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினோம் . பின்னர் நால்வரு ஒரு அறை மணி நேரம் செய்தோம் .அமைதியாக, த்யானம் முடித்து குகையில்ருந்து வெளியேற ஆரம்பித்தோம் ,அப்பொழுதுதான் ,தெரிந்தது அம்மூவரும் சொன்னார்கள் .
பிரபா, குகையினுள் நுழையும் பொழுது கூட தெரியவில்லை. ஆனால், வெளியேறும் பொழுது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . என்று . அமைதியாக ஒவ்வருவராக வெளியேறினோம் . குகையில் இருந்து ,வெளியே வந்தோம். உள்ளே, சென்று வந்த களைப்பில் நண்பர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள் .
மலையில், உச்சியின் மேல் அமர்ந்து அங்கு வரும் ஜில் , என்ற காற்றின் அனுபவத்தை வாங்குவது எவ்வளவு அழகு, அதை என் நண்பர்கள் அனுபவித்து கொண்டிருந்தார்கள் . மலையின் மேல் இருந்து பார்த்தல் சுந்தர மகாலிங்கம் அண்ட் சந்தன மகாலிங்கம் சந்நிதி கள் , சிறிய, அளவில் தெரிந்தன . சும்மாவா சுந்தர சந்தன மகாலிங்கத்தின் சந்நிதிக்கு நேர், மலை மேல் ஐந்து கிலோ மீடர் உயரத்தில் இருக்கிறோம் . என்னுடன் வந்த பாலு என்ற ஒரு வழி காட்டி அங்கிருந்த ஒரு மூலிகையினை பறித்து கொடுத்து இதை சாப்பிடுங்கள் , என்றார்.
நானும், சாப்பிட்டேன் . கொஞ்சம் கசப்பு துவர்ப்பு சுவையுடன் இருந்தது .
என்னவென்று கேட்டேன் பெயரை சொல்ல மறுத்து விட்டார் . ஆனால் அல்சர் போன்ற வியாதிகள் ஒரு வாரம் தொடர்ந்து சாபிட்டால் குணமாகும் என்று சொன்னார் . ஆச்சரிய பட்டேன் நான் . நேரமாகிறது கிளம்பலாம் என்று சொன்னேன்.
நண்பர்கள் ரெடி ஆகி மலை மேல் மறுபடியும் பயணத்தை துவக்கினோம் ,.
இப்பொழுது, பெரிய மகாலிங்கத்தை நோக்கி செல்கிறோம் . தவசி பாறையின் மேல் ஏறினோம் . அங்கு ஒன்பது கற்கள் பெரிய பெரிய கற்கள்
அவை நவகிரக கற்கள் என்று சொல்கிறார்கள் . அவ்வளவு பெரிய கல்லை யார் அங்கு கொண்டு வந்து போட்டது சொல்லி வைத்து போல ஒன்பது கற்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் அதிசயத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன் . அதை வணக்கி விட்டு பின் மேலே நடந்தோம் , சரியாக ஒரு கிலோ மீடர் தொலைவில் இடைக்காடர் வனத்தை அடைந்தோம் . நண்பர்களே அடுத்த பதிவில் மீதம் சொல்கிறேன் நேரம் சரியாக உள்ளது
சதுரகிரியின் இந்த பிரதோச பௌர்ணமி வழிபாடு
பிரதோச பூஜை இம்முறை சரியாக வியாழக்கிழமை வருவதால் நானும் திடீரென்று எடுத்த முடிவுதான் , சரி இல்லதில்ருந்து கிளம்பியாச்சு திருமங்கலம் வழியாக கல்லுபட்டியை வந்து அடைந்தேன் .
கல்லுபட்டியிலிருந்து பேரையூர் வழியாக சென்றால் பதிநைந்து கிலோ மீடர் குறையும் என்று ஒரு நண்பர் கல்லு பட்டியில் சொன்னார் . சரி என்று பேரையூர் வழியாக சென்றேன் . பாதை கொஞ்சம் கரடு முரடுதான் இருந்தாலும் பதினைந்து கிலோ மீடர் குறைவதால் ஒரு அறை மணி நேஅரம் மிச்சம் . தம்பி பட்டியை அடைந்தேன் .
தம்பி பட்டியில் ஒரு பலசரக்கு கடையில் கஞ்சி மடதிருக்கு பருப்பு அரிசி வகைகள் கொஞ்சம் வாங்கி கொண்டு கடை காரரிடம் விசாரித்தேன் .
அய்யா , இங்கு மாவூத்து மகாலிங்கம் என்ற கோவில் உண்டாமே.
இங்கு இருக்கும் மகாலிங்கம் தான் பின் நாளில் இந்த கோவிலில் இருக்கும் . மகாலிங்கம் தான் சதுரகிரி மலை மேல் குடி கொண்டதாக சொல்கிறார்களே உணமையா அப்படி என்றால் அதற்கு செல்லும் வழி சொல்லுங்கள் அய்யா என்றேன் .
கடைகாரரோ என்ன அய்யா அப்டி கேட்டு விட்டீர்கள் அவனின் பெருமையை சொல்ல வாய் வலிக்குமோ . இதோ தாரளமா என்று சொல்ல ஆரம்பித்தார் .
அய்யா இங்கு இருக்கும் மகாலிங்கம் தான் பின் நாளில் சதுரகிரி மலையில் குடி கொண்டதா காலம் காலமா சொல்ல கேட்டு இருக்கேன் .
மாவூத்து கு மேல ஒரு மணி நேரம் மலை மேல் நடந்தால் பெருமாள் மட்டை என்ற இடம் உண்டு . அங்கு நமது பெருமான் பெருமாள் அகவும் அவதாரம் எடுத்து உள்ளார் . அங்கு தான் பச்சை மால் அவனது மனைவியும் மாடுகளை மேய்க்கும் தொழிலை கொண்டவர்கள் இவர்கள் அங்கு மாடு மேய்க்கும் பொழுது அவனது மனைவியிடம் பால கறந்து கொடுத்து விடுவான் .
பாலை எடுத்து கொண்டு அவன் மனைவியும் நேராக வீடு சென்று விடுவாள் . ஆனால் ஒருநாள் இந்த மாவூத்து மகாலிங்கம் ஒரு பெரியவர் உருவில் சதுரகிரியில் இருந்து அம்மா எனக்கும் கொஞ்சம் பால் கொடுத்து விட்டு போம்மா என்று கேட்டு உள்ளார் . அபொழுது இந்த பெண்ணும் ஒரு துறவி கேட்டு மறுக்க முடியாமல் அவர்க்கும் பால் ஈந்து விட்டு செல் வாள்பால் குறைவதை கண்ட பச்சைமால் தன் மனைவியிடம் என் பல் குறைகிறது என்று கேட்டான் . மனைவயோ இப்படி ஒரு துறவி கேட்டார் கொடுத்தேன் என்று சொல்லவும் . அவனுக்கு கோபம் பொய் சொல்கிறாய் என்று சொல்லி விட்டான் .
அவனது மனைவியால் இதை பொறுக்க முடியவில்லை உடனே தான் பால் கொடுக்கும் துறவியிடம் பொய் அய்யா தங்களால் என் கணவரிடம் நான் பொய் சொல்கிறேன் என்ற குற்ற சாட்டுக்கு ஆள் ஆகி விட்டேன் . என்று சொல்லி மன்றாடினால்உடனே அவர் அவனது மனைவியை சடாரி யாக மாற்றி மாவூத்து உடயகிரினாதர் கோவிலில் காவல் தெய்வமாக மாற்றி விட்டார் .
பின்னர் அவனது உறவினர்களும் திசை கொருவராக காவல் தெய்வங்களா க மாற்றி சதுரகிரியில் அமர்த்தி விடுக்கிறார் . இதை அறிந்த பச்சைமால் நேராக தானி பாறை வழியாக சென்று சுண்டரமகாளிங்கத்தை தரிசித்து தன் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரவும் இறைவன் நேரில் தோன்றி உனக்கு என்னப்பா வேண்டும் என்று கேட்க , அவனோ., இறைவா நீ இருக்கும் இடத்தில் எனக்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்க்க இறைவனும் இடம் அளித்தார் . இன்றும் சுந்தர மகாலிங்கத்தின் சந்நிதியின் பின் புறம் பச்சை மால் உரை கொண்ட இடமும் உள்ளது அவனையும் தெய்வமாக மக்கள் வணங்குகிண்டறனர் .
இன்றும் மவூத்து மகாலிங்கத்தின் சந்நிதியின் அருகில் சடாரி இருக்கின்றாள் . ஆனால் கிராமத்து மக்கள் தவறபுரிந்து கொண்டு அவளுக்கு கிடா வெட்டி கோழி அறுத்து படையல் இடுகின்றனர் . அது மிகவும் தவறு என்று அந்த கடைகாரர் நீண்ட கதையை சொல்லி முடித்தார் .
அது மட்டும் இல்லை சதுரகிரி வரும் ஒவ்வருவரும் முதலில் மவோஊத்து மகாலிங்கத்திடம் தரிசான்ம் பெற்று அனுமதி வங்கியபின்னரே சதுரகிரி செல்ல வேண்டும் என்று அவர் சொன்னார் . அப்படி அவர் சொல்லவும் எனக்கு சரி அங்கு போய்விட்டு போகலாம் என்று தோன்றியது.
உடனே அதற்கு உண்டான வழியயை கேட்டேன் சொனார் . நானும் அவ்வழியே சென்று மாவூத்து வைசென்று அடைந்தேன் . ஆஅக என்ன அழகு கோவில் இருக்கும் இடம் மிகவும் ரம்மியமான சூழ்நிலை அடாடா பெருமாள் மட்டைக்கு செல்லும் பாதையின் அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது . கோவிலின் எதிரே மிக பெரிய திருக்குளம் உள்ளது மக்கள் அதில் குளித்து விட்டு இறைவனை தரிசனம் செய்கிண்டறனர் .
நானும் அக்குளத்தில் குளித்தேன் அப்பொழுது அக்குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம்ம் என்னை சூழ்ந்து கொண்டு கடித்தன குலத்தின் நீரோ மிகவும் ஜில் என்று இருந்தது . நீராடி விட்டு இறைவனை தரிசனம் செய்தேன் . உதயகிரி நாதர் மிகவும் அழகு . அவரின் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் உக்கார்ந்து இருந்தேன் . அப்பொழு பக்கத்தில் ஒரு சாமியார் அய்யா தர்மம் என்று தனது திருவோடு நீட்டினர் . தர்மம் பண்ணிவிட்டு அய்யா அருகில் அமருங்கள் தங்களிடம் சில சந்தேகம் கேட்க்க வேண்டும் என்று சொன்னேன் ,.
அவரும் அமைதியாக சொல்லப்பா என்ன வேண்டும் என்று கேட்டார் அய்யா ஆனந மதுரையிலிருந்து வருகிறேன் . அதலால் எனக்கு இங்கு பெருமாள் மட்டைக்கு செல்லும் வழி தெரியவில்லை கொஞ்சம் சொல்ல முடியுமா என்றேன்
சொல்கிறேன் ஆனால் அங்கி தனியாக செல்ல முயற்சிக்காதே என்று ஆரமதிலே எச்சரிகையுடன் ஆரம்பித்தார் . இங்கு இருந்து மூன்று வழிகள் உள்ளன அப்பா ,
அவைகளில் மவூத்து கோவில் பக்கத்தில் மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் வழியில் யானை கால கூட்டம் அதிகம் இருக்கும் . இருந்தாலும் கைடுடன் சென்றால் பிரச்சினை இல்லை யானை இருந்தால் அவர்களுக்கு தெரியும் உடனே பாதுகாப்ப கூட்டி கொண்டு வந்து விடுவார்கள் . என்று சொன்னார் . பெருமாள் மட்டைக்கு நேர் எதிரே தெரியும் மலை மேல் ஏறினாய் என்றால் ஒரு மணி நேரதில் நே அங்கு அடைத்து விடலாம் . புரட்டாசி சனிக்கிழமை மட்டும் தன் அங்கு மிகவும் பிரபலம் . புரட்டாசி மாதம் வரும் சனிகிலமைகளைல் அங்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்று சொன்னார் . சரி அய்யா பெருமாள் எப்படி இந்த மழைக்கு வந்தார் என்ன விவரம் என்று கேட்டேன் . அவர் சொன்னார் பெருமாள் வேறு சிவன் வேறு என்று யாரடா சொன்னது . அனைவரும் ஒன்றே ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று சொன்னார் எனக்கு சரியான சவுக்கடி கொடுத்து போல் இருந்தது . உண்மைதான் என்று உணர்ந்தேன் .
அப்புறம் அவராகவே ஆரம்பித்தார் ப்ருமால் மட்டைக்கு சென்றால் அங்கு இருக்கும் பெருமாள் வணங்கி விட்டு இபொழுது யாரும் சும்மா வருவதில்லை . சில கிராமத்து ஆட்கள் அங்கு மது கொண்டு சென்று அருந்தி விட்டு ஆடு போன்ற ஜீவா ராசிகளை கொன்று அதை பெருமாளுக்கு படைஇக்கிறார்கள் . பெருமாள் எந்த காலத்தில் ஆடு கோழி சாபிடார் அய்யா .
கலி முத்தி விட்டது என்றார் . சரி விசயதிருக்கு வருவோ பெருமாள் மட்டையிலிருந்து அப்படியே மூன்று மணி நேரம் மலை வழியாக சென்றால் சதுரகிரியை அடைந்து விடலாம் என்று சொன்னார் . நான் ஆச்சரியப்பட்டேன் ஆமாம் அப்பா அது கொஞ்சம் காட்டுக்குள் கஷ்டமான வழிப்பாதை என்று வேறு சொன்னார் .
சரி என்று நான் கிளம்புறேன் என்று அவரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினேன் . அவரும் பாத்து போப்பா என்று வழியனுப்பி வைத்தார் .
நான் திரும்பவும் வந்தவழியே வந்து மகாராஜபுரம் என்ற இடத்தை அடைந்தேன் . அங்கிருந்து தானிபாரைக்கு சற்று சுருக்கமான வழி உள்ளது அவ்வழியே சென்றேன் பதினைந்து நிமிடங்களில் தானிபாரை அடிவாரத்தில் இருக்கும் கஞ்சி மடத்தை அடைந்தேன் . மடத்தின் உள்ளே சென்று எனது வாகனத்தை நிறுத்தி விட்டு வந்தேன் .
மடத்தின் நிர்வாகி ராமசாமி அய்யா என்னை வரவேற்றார் வாங்க பிரபாகர் நலமா அம்மா நலமா என்று விசாரித்தார் . அப்புறம் நான் கொண்டு வந்த அன்னதான பொருள்களை அய்யா விடம் கொடுத்து விட்டு அய்யா நான் பிரதோச பூஜையை முடித்து விட்டு இன்று இரவே கீழே இறங்கிவிடுவேன் .
என்று சொன்னேன் அதற்க்கு அவர் தம்பி வேணம் காடு பன்றிகள் நிறைய இபோழு திரிகின்றன இரவில் தங்கள் இறங்க வேண்டாம் . பகலில் இறங்குங்கள் அதன் நல்லது என்றார் .
என்னால் அவரது பேச்சை தட்ட முடியவில்லை காரணம் வயது முதிர்ந்தவர் . அந்த காடுக்குலே பழக்க பட்டவர் அவர் சொன்ன சரியாக இருக்கும் . ஆதாலால் காலையில் கீழே இறங்கலாம் என்று இருந்தேன் .
தானிபாரை நுழைவு வழியாகா உள்ளே செல்ல ஆரம்பித்தேன் . ஆகா எத்துனை தடவை வந்தாலும் அபோழுதன் புதிதாக அங்கு வருவது போல் எனக்கு தோன்றியது . தானிபாரை விநாயகரை கும்பிட்டு விட்டு ராஜயோககாளியமனை தரிசிதி விட்டு பின்னர் தனிபாரை பேசி அம்மன் கருப்புசாமியை தரிசிக்க சென்றேன் .
அங்கு இருக்கும் பூசாரி என்னை கண்டு கொண்டார் . வாங்க தம்பி நீங்கதானா தூரத்தில் இருந்து பாக்கும் பொழுது எனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொல்லி விட்டு பின்னர் நலம் விசாரித்தார் . நலம் என்று சொல்லி விட்டு பூஜை பொருளை கையில் கொடுத்தேன் .
அதை வங்கி கொண்டவர் என்ன தம்பி சனிக்கிழமை சனிபெயசிகுதன் வந்து சென்றீர்கள் அதற்குள்ளாக திரும்பவும் வியாயலகிழமை வந்து உள்ளீர்களே ஏதும் விஷயமா என்று கேட்டார் . நான் புண் முறுவல் பூத்து கொண்டே இல்லை அய்யா குரு பிரதோஷம் இன்றைக்கு அதை பார்கவே அஆவளுடன் வந்தேன் என்று சொன்னே .
அவர் அப்படியா என்று வினவி கொண்டே பூஜையை ஆரம்பித்தார் . பூஜையை முடித்து கொண்டு அதற்கும் கொஞ்சம் பக்கத்தி புளிய மரத்தடியில் இரு முனிவர்களின் ஜீவா சமாதி உள்ளது . அவர்கள் பெயர் விவரம் என்னால் அபொழுது இருந்த அவசரத்தில் என்னால் அறிய முடியவில்லை பிறிதொரு சந்தர்பத்தில் கட்டாயம் நான் அதை அன்பர்களுக்கு தெரிவிக்கிறேன் .
அங்கேயும் சென்று தரிசனம் செய்து விட்டு மலை யை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் . குதிரை ஊற்றை அடைந்தேன் . அங்கு கை கால் அலம்பி கொண்டு மீண்டும் மேல நடக்க ஆரம்பித்தேன் . இரண்டு கிலோ மீடர் தொலைவு நடந்து அதிரிமகாரிஷி ஊற்றைஅடைந்தேன் . அங்கு குடி நீர் அருந்தி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தேன் சங்கலி பாறையை கடந்தவுடன் மெட்ராஸ் இல் இருந்து மைலாபூர் நண்பர் ஒருவர் அறிமுகம் ஆனார் அவருடன் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி நண்பர்ரும் அறிமுகம் கிடைத்தது . நான் அவர்களுடன் பேசி கொண்டே நடந்தேன் . முறையே அவர்கள் பெயர் ஸ்ரீநிவாசன் -மைலாபூர்
பிரதீப் -டுடிகோரின் ஐயப்பன்-கன்னியாகுமரி இவர்களுடன் பேசி கொண்டே நடந்தேன் . மூவரும் பேசி கொண்டே பசுமிதி பாறையை
அது பச்சை மாலை தானிபாறை வழியாக காமதேனு பசு அவ்வழியாக கூட்டி சென்றதா சொல்வார்கள் . இறைவனை காண .
காராம் பசுதடம் தாண்டியவுடன் கோரக்கர் குகையை அடைந்தூம் . நாங்கள் நால்வரும் அங்கிருந்த சுக்கு காபி கடையில் அமர்ந்து சுக்கு காப்பி பருகிநூம் . பின் கோரக்கர் குகைக்கு செல்லும் பாதையில் கீழே இறங்கிநூம் . நான் , பிரதீப் மற்றும் ஐயப்பன் எல்லாம் இறங்கிவிட்டோம் , ஆனால் ஸ்ரீநிவாசன் சார் மட்டும் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தார் . யாரும் எதிர்பார்க்கவில்லை அவர் ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு தாவி இரங்கும் பொழுது தவறி விட்டார்
முட்டியில் நல்ல அடி அவர்க்கு இருந்தாலும் சமாளித்து கொண்டு இரங்கி விட்டார்
எண்கள் மூவருக்கு அவர் விழுந்தும் தூக்கி வாரி போட்டு விட்டது (எ.ன் என்றால் கை கால் அடி பட்டு விட்டால் யாராக இருந்தாலும் அவர்களை கீழே கொண்டு செல்வது சிரமம் . சுமை தூகிகள் வரவழைத்து தன் தூக்க முடியும் . அது அந்த வன பகுதிக்குள் அவ்வழு சரியாக செல் போன் வொர்க் ஆகாது . அப்படியே ஆனாலும் அவர்க வர குறைந்த பட்சம் மூன்று மணிநேஅரம் பிடிக்கும் .)
நான் அவரை பல முறை விசாரித்தேன் . சார் அடி ஒன்றும் படவில்லையே காலை தநீரில் நன்றாக கழுவுங்கள் என்று காலை பிடித்து பார்த்தேன் ஒன்றும் வலி இல்லை பிரபா என்று சொல்லி விட்டார் . சரி என்று கோரக்கர் தரிசன முடித்து கொண்டு பதஞ்சசலி முனிவரி சீடர்கள் லிங்கம் வைத்து வழிபட்ட குகை ஒன்று உள்ளது . அதையும் பார்த்து விட்டு செல்லலாம் என்றேன் . மூவரில் இருவர் ஏற்கனவே வந்து இருக்கின்றனர் . அப்டிய அப்படி ஒருகுகை இருப்பதாய் நீங்கள் சொல்லித்தான் இன்று எனக்கு தெரியும் என்றனர் அந்த இருவரும் கோரசாக
சரி என்று மூவரையும் அழைத்து கொண்டு நான் அவர்களை அக்குகை இருக்கும் இடத்திருக்கு அழைத்து சென்றேன் . மூவரில் ஒருவருக்கும் நீச்சல் தெரியாதாம் .
ஆனால் அக்குகை இருக்கும் இடத்திருக்கு நேர் கீழே பாத்து அடி ஆழ சுனை ஒன்று உள்ளது . பக்தர்கள் நியர பேர் அதில் நீராடி விட்டு லிங்கத்தை தரிசனம் செய்வர் .
அது செலும் வழியும் மரத்தின் வேறை பிடித்து கொண்டு தொங்கி கொண்டே அக்குகையை அடைய வேண்டும்
மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நான் தயங்கினேன்
ஆனால் ஸ்ரீநிவாசன் சார் மட்டும் தைரியமாக பிரபா ப்ளீஸ் நான் கட்டாயம் வந்து பாக்க வேண்டும்
எது ஆனாலும் சரி நான் பார்த்து விட்டுதான் வருவேன்
நான் ஒரு முடிவூடதன் இங்கு வந்து இருக்கேன் . என்று இரண்டு பொருள் பட சொன்னார் .
அவர் சொல்லவும் என்னால் மறுக்க முடியவில்லை . சரி வாருங்கள் என்று நான் அவரையும் அழைத்து கொண்டு மரத்தின் வேரை பிடித்தி பாறையின் மேல் காலை ஊன்றி மெதுவாக மேலே சென்றேன் . ஸ்ரீனிவாசனும் தைரியமாகத்தான் பிடித்து வந்தார் . சரி அவர் நன்றாக வருகிறார் என்று நான் அங்குள்ள சுனை நீரி குதித்தேன் . நீராடி விட்டு மேலே வரலாம் என்ற பொழுது தான் அது நடந்தது
வேரை பிடித்து கொண்டு இறங்கிய ஸ்ரீநிவாசன் சார் பாறையை பிடிக்க அது வழுக்கு பாரையதாளால் அவர் பிடி நழுவி கீழே விழுந்தால் எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியவில்லை . பிரதீப் ஐயப்பன் எல்லோரும் அக்கரையில் இருந்து பதறினார்கள் . நல்ல வேலை ஆழம் குறைவான இடத்தில் அவர் விழுந்தார் . ஆதலால் அவர் பிழைத்து கொண்டார் . ஆனாலும் மனிதர் தைரியத்தை கைவிடவில்லை பரவாயில்லை பிரபா நான் கட்டயாம் குகையையும் அங்கு உள்ள இறைவனையும் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தார் . அவரின் அன்புள்ள் பக்திக்கு இறைவன் இறங்கினார் . அவரும் அந்த வழுக்கு பாறையில் மேல் ஏறி இறைவனை கண்குளிர தரிசனம் செய்தார் .
பின் மெதுவாக கீழே இறங்கி திரும்பவும் மகாலிங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பிதூம் . பேசி கொண்டே நடந்தூம் ரெட்டை லிங்கம் நாவல் ஊற்று மற்றும் பிளவடியயி தரிசனம் செய்து . பிலாவடிக்கும் மேலே நீராடும் இடத்தை அடைந்தோம் . அங்கு நீராடி விட்டு சுந்தரமகாலிங்கம் சந்நிதியை அடைந்தோம் . அங்கு இறைவனின் அற்புத தரிசனம் கண்டோம் .
இறைவனின் தரிசனத்தை காணும் பொழுது மலை ஏறி வந்த களைப்பு உடல் வலி என்று எதுவும் தெரியவில்லை . தரிசனத்தை முடித்து கொண்டு ஸ்ரீநிவாசன் சார் பிரபா எனக்கு ராஜா மடம் நன்றாக தெரியும் அங்கு தங்கலாமே என்று சொன்னார் . நாங்கள் மூவரும் சரி என்று சொன்னூம் அங்கு பொய்எங்களது பொருள் உடமைகளை வைதூம் . அங்கு ராஜா மடத்தார் நன்றாக உபசரித்து உணவு இட்டனர் . உணவு அருந்திவிட்டு சார் பிரதோச பூஜைக்கு நேரம் ஆகி விட்டது நாம் மேல சந்தனமகாலிங்கம் பாக்கலாம் . ஆதலால் வாருங்கள் போகலாம் . என்று சொன்னேன் ஸ்ரீநிவாசன் சார் ஐயப்பன் பிரதீப் அனைவரும் சரி என்று சொன்னார்கள் . ஸ்ரீநிவாசன் ஸ்ரீ மடத்ய்தின் நிர்வாகியிடம் விவரம் கூறிவிட்டு உடமைகளை எடுத்து கொண்டு சந்தன மகாலிங்கம் பார்க்க கிளம்பினோம் . பேசி கொண்டே ஏறினோம் . சந்தனமகளிங்கத்தை அடைந்து அங்கும் தரிசனம் முடித்து விட்டு எனக்கு தற்சமயம் அறிமுகம் ஆனா பௌர்ணமி மடத்திற்கு அவர்களை அழைத்து சென்றேன் . அங்கு சிவசங்கு அய்யா இருந்தார் இன்முகத்துடன் வாங்க பிரபா நலமா என்று விசாரித்தார் . நலம் என்று சொன்னேன் . நண்பர்களையும் அறிமுக படுத்தி வைத்தேன் . பின்னர் மடத்தினுள் என்னக்ளுது உடமைகளை வைத்து விட்டு பிரதோச பூஜைக்கு கிளம்பிநூம் . மீண்டும் சந்தன மகாளினகத்தை அடைந்தோம் . அங்கு பிரதோச பூஜைக்கு எல்லாம் தயாரகி கொண்டிருந்தது நாங்கள் அமரவும் பூஜையை ஆரம்பித்தார்கள் .
நண்பர்களே பெருமைக்காகவோ இல்லை ஆர்வ முகுதியலூ சொல்ல வில்லை . பிரதோச வழி பாடு பண்ண வேண்டும் என்றால் ஆகா அது சதுரகிரி என்னும் புண்ணிய தளம் தான் . எம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் அடடா என்ன அழகு இப்பிறவியின் பயனை நான் அடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த ரம்மியாமான மலை சூழலில் அமைதியாக நடை பெற்ற அந்த ப்ரடோசத்தின் அருமையை நான் எண்ணங் வென்று சொல்ல அதை பார்த்து உணர மட்டும் தான் முடயும் . அதை சொன்னால் புரியாது . பின் தேவாரம் திருவாசம் படித்தோம் .
என்ன ஒரு தரிசனம் நாங்கள் நால்வரும் பாக்கியம் செய்தவர்கள் . அதிலும் குறிப்பாக பிரதீப் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் நமது ஹிந்து மத நம்பிக்கைகளில் மூழ்கி அவரும் பிரதோச வழிபாடு செய்தது . மிக சிறப்பு
பின் இரவு உணவு முடித்து அனைவரும் உறங்க சென்றோம் . திரும்ப அதிகாலை மூன்று மணிக்கு சந்தன மகாலிங்கம் பூஜை நடைபெறும் என்று சொன்னார்கள் . நான் எனது செல் போனில் அலாரம் வைத்து விட்டு உறங்கினேன் . அனைவரும் உறங்கினோம் . அடுத்தது தவசி பாறை பயணம் அடுத்த இடுகையில்
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
சதுரகிரிக்கு அக்டோபர் ஒன்று அன்று பிரதோச வழிபாடு
விரும்பும் அன்பர்கள் என்னோ தொடர்பு கொள்ளலாம் .
9944494045,9976642060 பிரபாகர் மதுரை . இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .
திங்கள், 28 செப்டம்பர், 2009
சதுரகிரியில் உள்ள நீரோடைகள்
ஊற்றுகளில் ஆண்டு முழுவது தண்ணீர் இருக்கும்.
அது சில ஊற்றுகளில் தான் இருக்கும் . முதலில் தென்படுவது குதிரை ஊற்று அதை அடுத்து அத்தி ஊற்று அதற்கும் மேல போனால் கோரக்கர் சுனை . அதற்கும் மேலே போனால் நாவல் ஊற்று
அதற்கு மேல போனால் பிலாவடி கருப்பு கிட்ட தைல கிணறு மற்றும் ஊற்றுகள் உள்ளது . மேல சுவாமிக்கு அபிஷேகம் நீர் எடுக்கும் ஊற்றுகள் இரண்டு அவை . ஒன்று சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ள ஆகாய கங்கை.
இரண்டு, சுந்தர மகாலிங்கம் சந்நித்தியயை ஒட்டி வரு நீரோடை சந்திரகிரி தீர்த்தம் . இவை, இரண்டும் அபிஷேக தீர்த்தம். இவைகளில், குளிக்கவோ கைகால் அளம்பவோ இங்கு தடை செய்ய பட்டுள்ளது . பொதுவாக
ஊற்றுகள் எல்லாமே குடி நீர் ஆகா பயன் படுத்த படுகிறது
. மலை ஏறுபவர்கள் ஆங்காங்கே இந்த ஊற்று நீரை குடி நீராக பயன் படுத்தலாம் .
தயவுசெய்து அன்பர்கள் யாரும் ஊற்று நீரை தவறாக பயன் படுத்த வேண்டாம்
சில நண்பர்கள் கை கால் தெரியாமல் அலம்பி விடுகிறார்கள் . ஆதலால் மற்றவர்கள் அதை அறியாமல் குடி நீராக பயன்படுத்துவார்கள் ஆதலால் மக்கள் அதை தவிர்க்கவும்.
சதுர கிரியில் ஊஞ்சல் கருப்பு செல்லும் வழியில் குளிராட்டி தீர்த்தம் உள்ளது . அங்கு சென்று தீர்த்தத்தை கேன் களில் செல்வோரும் உண்டு . அப்புறம் சித்தர்கள் குறிபேட்டில் உள்ளது போல மஞ்சள் வேதி உதைகை நீர் போன்ற ஊற்றுகளும் உண்டு . அந்த மாதிரி மிக முக்கியமான ஊற்றுக்கள் உண்டு . என்று தான் என்னால் சொல்ல முடியும் . அது எங்கு உள்ளத்து என்று, என்னால் சொல்ல முடியாது .
அதுமட்டும் இல்லை மழைக்காலங்களில் மலையின் மடிப்பு சரிவுகளிலிருந்து புதிது புதிதாக நீரோடைகள் தோன்றும் .
எனது நண்பர் ஒருவர் சொன்னார் . நாம் நாவல் ஊற்று தாண்டியவுடன் அடுத்து வருவது வணதுர்கை அம்மன் சந்நிதி அது ஒரு மலையின் மடிப்பு சரிவில் உள்ளது . ஒரு தடவை நல்ல மழைகாலம் இவர் மழை பெய்தாலும் பரவால்லை என்று மலை ஏறி உள்ளார் . அப்பொழுது வணதுர்கை கோவில் இருக்கும் நீரோடையில் திடீரென்று மழை வெள்ளம் காட்டாறு போல பாய்ந்ததாம் . நண்பர் பயந்து போயி அங்கேயே இரவு முழுது தங்கி இருந்து விதித்த பின் மலை ஏறினாராம் .
அவர் சொல்லவும் நமக்கு thikilaaka இருந்தது .
வியாழன், 24 செப்டம்பர், 2009
உதவி
புதன், 23 செப்டம்பர், 2009
சதுரகிரியில் பெரிய மகாலிங்கம் செல்வது எப்படி ?
பெரிய மகாலிங்கம் செல்லும் வழி மிகவும் குறுகலான பாதை . ஆனால் பக்தர்கள் செல்ல கூடியா அளவுக்கு இருக்கும் . பெரிய மகா லிங்கம் செல்லும் பொழுது யாருடைய துணையும் இல்லாமல் செல்வது மிகவும் தவறான செயல் ஆகும் வழி காட்டி இல்லாமல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறது ,. ஒரு மணி நேரம் மலை மேல் ஏறி செல்ல வேண்டும் . மலைக்கு செல்லும் வழி அனந்த வள்ளி அம்மன் கோவில் பின் புறம் செல்கிறது . அதில் சென்றால் இரண்டு நிமிடங்களில் பாதை இரண்டு பிரிவுகளாக செல்லும் ஒன்று தவசி குகை செல்லும் வழி . இன்னொன்று பெரிய மகாலிங்கம் செல்லும் வழி . நான் சொல்லும் வழியை பின் பற்றி அன்பர்கள் யாரும் மேலே செல்ல வேண்டாம் . ஒரு அடையாளத்துக்குத்தான் சொல்கிறேன் . பெரிய மகாலிங்கம் செல்லும் வழியில் இருந்து ஒரு மணி நேரம் மலை மேல் ஏறினால் பெரிய மகாலிங்கத்தை அடைந்து விடலாம் . இன்றும் பௌர்ணமி மற்றும் அமாவாசை பூஜைக்கு பெரிய மகாலிங்கத்தை தரிசிக்க சித்தர்கள் வருவதாக செய்தி . அடியேனுக்கு சித்தரை காணும் பாக்கியம் கிட்ட வில்லை இல்லை அவர் என்னுடன் வேறு ஏதுனும் ரூபத்தில் காட்சி அளித்தார்களா என்றும் தெரிய வில்லை . எது எப்படியோ நம்பிக்கை தான் வாழ்கை அதை நாம் மறந்து விட கூடாது .
பெரிய மகாலிங்கம் மிக பிரமாண்டமாக உள்ளார் . இறை நம்பிக்கை உள்ளவர்கல் பெரிய மகா லிங்கத்தை பார்த்த உடனே அதன் அழகில் மயங்கி விடுவர் . அப்பெரிய மகாலிங்கத்தை ஒரு பெரிய விருட்சத்தின் வேர் பிடித்து கொண்டு இருக்கிறது , அப்பெரிய மகாலிங்கத்தின் பினால் அவ்விருட்சத்தின் வேர் சிவபெருமானின் ஜடா முடி போல் பின்னி உள்ளது . என்னே இயற்கையின் அழகு காண கண் கோடி வேண்டு அன்பர்களே . சாதரணமாக அவ்வளவு பெரிய லிங்கத்த ஒரு மரத்தின் வேர் தாங்கி கொண்டு நிக்கிறது என்றால் அதை விட அதிசயம் என்ன வேண்டும் .
பெரிய மகாலிங்கத்துக்கு மகா சிவராத்திரி அன்றைக்கு நடு நிசி ஒரு மணிக்கு மேல் பூஜை நடை பெரும் . மகா சிவராத்திரி அன்று அந்த இருண்ட வன பகுதிக்குள் பகலில் செல்லவே பயமாய் இருக்கும் . அந்த வன பகுதிக்குள் மகா சிவராத்திரி அம்மாவாசை கு மு வரும் . அப்படிப்பட்ட காரிருள் சூழ்ந்த நிசப்தமான நடுநிசிஇல தான் பூஜை நடக்கும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கட்டயாம் காண வேண்டிய பூஜை இது இரவு முழுது கண் விழித்து பூஜை செய்பவர்கள் சிவராத்திரி க்கு பெரிய மகாலிங்கத்திற்கு நடக்கும் பூஜை யை ஒரு தடவை கண்டாலே போதும். அவர் கல் பிறவா நிலை அடைந்து விடுவார்கள் அய்யா .